124.
|
அவ்வண்ணந்
தொழுதுரைத்த வமைச்சர்களை
முகநோக்கி |
|
|
மெய்வண்ணந்
தெரிந்துணர்ந்த மனுவென்னும்
விறல்வேந்தன்
“இவ்வண்ணம் பழுதுரைத்தீ“ ரென்றெரியி
னிடைத்தோய்ந்த
செவ்வண்ணக் கமலம்போன் முகம்புலர்ந்து
செயிர்த்துரைப்பான், |
39 |
(இ-ள்.)
அவ்வண்ணம்...நோக்கி - அவ்வாறு வணங்கிச்
சொல்லிய அமைச்சர்களைப் பார்த்து; மெய்வண்ணம்...என்று -
உண்மையின் தன்மையை உள்ளபடி உணர்ந்த மனு என்கின்ற வலிய
வேந்தன் “இவ்வாறு பழுதுரைத்தீர்களே!“ என்று சொல்லி;
எரியினிடை...உரைப்பான் - தீயிற் றோய்ந்த செந்தாமரைபோலச்
சினத்தினால் முகம் வாடிப் பின்னும் சொல்வானாயினன்.
(வி-ரை.)
மெய்வண்ணம் தெரிந்து உணர்ந்த - மெய்
(உண்மை) என்ற பொருளின் தன்மையைக் கல்வி கேள்வி மூலம்
தெரிந்து அதனை உணர்ச்சியிலே கைவரப் பெற்ற. தெரிதல்
-
அறிதல். உணர்தல் - சிந்தித்து உட்கரணங்களின்
அனுபவத்தில்
வரும்படி கொள்ளுதல்.
மெய்வண்ணம்
- வேதத்தில் விதித்த “சத்யம் வத“ என்னும்
விதி. முன் 22-ம் பாட்டில் “உண்மைப் பான்மை“ என்றவிடத்து
உரைத்தவை காண்க.
விறல்
- மன வலிமை. தேகபலம் சேனைப்பலம் அல்ல.
தனக்குத் துன்பந்தருவதாயினும் உண்மையிலே நிற்கும் வல்லமையைக்
குறித்தது. இது உடற்றுன்பத்தை வெல்லும் மனத்தின் சக்தி.
மனு என்னும் விறல் வேந்தன்
- உண்மையிலே நிலைத்து
நின்ற தொன்மனுவே இவன் என்று சொல்லத்தக்க விறல்பொருந்திய
மனுவேந்தன். என்னும் - என்று சொல்லத்தக்க.
இவ்வண்ணம் பழுதுரைத்தீர் - இவ்வண்ணம் - மேற்பாட்டில்
அமைச்சர்கள் “தொன்றுதொடுநெறி“ என்று கூறியதனை.
பழுதுரைத்தீர் - அது பழுதாகும் வகையை வரும்
125-126-127
ஆகிய மூன்று திருப்பாட்டுக்களாலும் குறிக்கின்றார்.
எரியினிடைத் தோய்ந்த
செவ்வண்ணக் கமலம் -
முன்னம் செந்தாமரை போன்ற அழகு பொருந்திய முகம் இப்போது
சினத்தால் வாடிச் சிவந்தது என்க. எரி -
சினத்திற்கு உவமானம்.
சினத்தால் முகம் சிவத்தல் அதனால் நிகழும் மெய்ப்பாடு.
உவகையிலும் வெகுளியிலும் ஒன்றுபோலவே முகம் மலர்ந்திருத்தல்
உத்தம அரச இலக்கணமாதலின், இங்கு அரசர் எரிதோய்ந்த தாமரை
மலர்போல் முகம் புலர்ந்து செயிர்த்தல் தகுமோ? எனின், இது தன்
பொருட்டன்றி உலக காவலின் பொருட்டு அறச்சார்பிலே நிகழ்ந்ததாதலின் தவறாகாது என்க.
முன்னரும் சிவப்பு = அப்போது மிகச் சிவப்பு. ஆனால் இச்சிவப்பு சினத்தால் ஆகியது என்பார்
எரியீடைத் தோய்ந்த என்றார்.
“மெய்த்திருப்பத மேவென்ற போதிலும், அத்தி
ருத்துறந்
தேகென்ற போதிலும், சித்தி ரத்தின் அலர்ந்தசெந் தாமரை, ஒத்தி
ருக்கும் ...“ எனவும், “ஒப்பதே முன்பு பின்பவ் வாசக முணரக்
கேட்ட, அப்பொழு தலர்ந்த செந்தாமரையினை வென்ற தம்மா“
எனவும் வரும் கம்பனிராமாயணக் கருத்துக்களை இங்கு வைத்து
ஒப்புநோக்கி இதன் சிறப்புக் கண்டு கொள்க.
திறல்வேந்தன்
- என்பதும் பாடம். 39
|
|
|
|