125. |
“அவ்வுரையில்
வருநெறிக ளவைநிற்க;
வறநெறியின் |
|
|
செவ்வியவுண்
மைத்திறநீர் சிந்தைசெயா
துரைக்கின்றீர்;
எவ்வுலகி லெப்பெற்ற மிப்பெற்றித் தாமிடரால்
வெவ்வுயிர்த்துக் கதறிமணி யெறித்துவிழுந் துது?
விளம்பீர்“
|
40 |
(இ-ள்.)
அவ்வுரையில்...உரைக்கின்றீர் - அமைச்சர்களே!
நீங்கள் சொல்லிய அவ்வுரைகளின்படி வரும் விதிகள் ஒருபுறம்
நிற்க; தரும வழியின் சிறந்த உண்மைத் தன்மையை மனத்துட்
கொள்ளாது நீங்கள் இவ்வாறு மொழிகின்றீர்கள் (அவ்வுண்மைத்
தன்மைதான் யாது? என்பீரேல்); எவ்வுலகில் ... விளம்பீர் - எந்த
உலகத்தில் எந்தப் பசு இத்தகைய துன்பத்தாலே பெருமூச்செறிந்து
கதறி வந்து அரசவாயிலின் ஆராய்ச்சி மணியை அசைத்து வீழ்ந்து
பதறிற்று? இதனை ஆய்ந்து சொல்லுங்கள்;
(வி-ரை.)
அவ் உரையீல் வருநெறிகள் - முன்னே “மறை
அந்தணர்கள் விதித்த முறை“ என்றும், “மறை மொழிந்த அறம்“
என்றும், மந்திரிகள் குறித்துச் சொல்லிய உரைகளை. அவை
நிற்க
- அசை ஒருபுறம் ஒதுங்கி நிற்க. இது இகழ்ச்சி குறித்தது. அவை
கிடக்கட்டும் - என்று ஒதுக்கியவாறு. என்னிடம் செல்லாது
உங்களுடனே நிற்கட்டும் - என்பதும் குறிப்பு.
செவ்விய உண்மைத் திறம்
- வெளித் தோற்றத்தாலல்லாமல்
உள்ளது உள்ளபடி நிற்கின்ற தன்மை. நிற்க என் றொதுக்கியதற்குக்
காரணம் இங்குக் கூறினார்; வெளிக்காட்சி ஒன்று, உண்மை
மற்றொன்றாகலின். முன்னர் “உண்மைப் பான்மை“ (107)
“மெய்வண்ணம்“ (124) என்றனவும் இது; தக்கன் யாகமும், சண்டீசர்
சிவபூசையும் போலக் கண்டுகொள்க.
எப்பெற்றம்...மணி
எறிந்தது? - அவ் வுண்மைத் திறத்தைக்
கண்டறிந்த வகை.
விளம்பீர் - இல்லை என்று எனக்குத்
தெரியும். உண்டானால்
நீவிர் விளம்புங்கள் - என்றபடி. மனிதர்க்குரிய அறிவுவிளக்கம்
இப்பசுவிற் காணப்பெற்றபடியால் இதன் கன்றைக் கொன்றது சிசுகத்தி
எனும் மனிதக்கொலையே போல்தாம் என்று குறித்தார்.
அறிவுவிளக்கமே உயர்திணை அஃறிணை என்ற பகுப்புக்குக்
காரணம். இங்கு அறிவு விளக்கத்தினாலே அஃறிணையாகிய பசுவும்
உயர்திணையின் இடத்தைப் பெற்றதாம். இது போலவே மாற்றிப்
பார்க்கும் போது அறிவுவிளக்கம் இல்லாத உயர்திணையும்
அஃறிணையாம். உயிர்ப்பேதம், மரபுப்பேதம் பற்றிச் சீர்திருத்தம்
பேசுவார் இக்கருத்தை ஊன்றி உன்னுவார்களாக. இங்கு அறிவு
விளக்கமாவது தனக்கு நேர்ந்த துன்பத்தை வெவ்வுயிர்த்தல் -
கதறுதல் முதலிய புறச்செய்கைகளினால் அறியச் செய்வதும், மணி
எறிதலால் அதற்குப் பரிகாரம் தேடுதலும் ஆம்.
எறிந்து
- அடித்து. அநீதியைக் காட்ட ஓசைப்பட வேண்டிய
மணி, நிகழ்ந்தும் ஓசை செய்யாமல் இருந்தமையால் தண்டித்து
எறியத்தக்கது - என்ற குறிப்பும் தோன்ற, அசைத்து என்னாது
எறிந்து என்றார். முன் 112-ம் பாட்டிலும் “கோட்டினாற் புடைத்தது“
என்றமையும் காண்க. செய்யத்தக்கதைச் செய்யாது தூங்குபவரைத்
தண்டத்தாற் றட்டி எழுப்புதல்போல, மணியைப் புடைத்தது
-
என்ற குறிப்பும் “தூங்கிய மணியை“ என்றதனாற் பெற்றாம்.
தண்டினாலே நாதம் கிளம்பும் என்பது சாத்திரம்.
“ஆசான்
முன்னே துயில்மா ணவகரைத்
தேசாய தண்டாலே எழுப்பும் செயல்போல்
நேசாய வீசனு நீடா ணவத்தரை
ஏசாத மாயாடன் னாலே யெழுப்புமே.
-
திருமூலர் திருமந். 8-ம் தந் - 3 - அவத்தைபே - கீழாலவத்தை
- 22 |
|
|
|
|