136.
|
பூதநாயகர்
புற்றிடங் கொண்டவர் |
|
|
ஆதி
தேவ ரமர்ந்தபூங் கோயிலிற்
சோதி மாமணி நீள்சுடர் முன்றில்சூழ்
முதெ யிற்றிரு வாயின்முன் னாயது. |
1 |
(இ-ள்.)
பூதநாயகர்...கோயிலில் - பூத நாயகராகியும், புற்றில்
இடங்கொண்டு வீற்றிருப்பவராயும், ஆதிதேவராயும் உள்ள இறைவன்
விரும்பி எழுந்தருளியிருக்கும் பூங்கோயில் என்னும்
திருவாலயத்திலே; சோதி ... முன்னாயது - விளக்கம் மிகுந்து
பேரழகும் பேரொளியும் பொருந்திய திருமுற்றத்திலே மதிலின்
திருவாயிலினை அடுத்து முதலில் உள்ளது (தேவாசிரியன்);
(வி-ரை.)
“தேவாசிரியன்“ என்னும் வரும் பாட்டிலுள்ள
எழுவாய் இப்பாட்டிற்கும் பின்னர் மூன்றாவது திருப்பாட்டிற்கும்
இடையிலே, சிங்கநோக்காக அமைந்து முன்னும் பின்னும் சென்று,
தேவாசிரியன் - முன்னாயது - போல்வது என இசைவதாம். மேலும்
கீழும் உள்ள உலகங்கள் சேரும் இடம் என்பது குறிப்புப்போலும்.
பூத நாயகர் - பூதகணங்களின் தலைவர்.
“பூதபதயே நம“
என்பது சிவ அட்டோத்தர வாக்கியம். இப்பூதங்களின் வலிமையும்
சிறப்பும் முன்னர் வரிசை 16-வது திருப்பாட்டிலும் பிறவிடத்தும்
பேசப்பெற்றது. அடியார்களே சிவகணங்களாவர்; ஆதலின் அடியவர்
கூட்டம் பூதபரம்பரை எனப்படும். “பூதபரம்பரை பொலிய“ என்ற
(திருஞான - புரா - 1) திருவாக்குங் காண்க. இது திருக்கூட்டச்
சிறப்புக்கூறும் பகுதியாதலின் அத்திருக்கூட்டத்தின் தலைவர் என்பது
தோன்ற முதலிலே “புதநாயகர்“ என்று கூறினார்.
புற்றிடங் கொண்டவர் - வன்மீகநாதர். புற்றை
இடமாகக்
கொண்டு அதில் விளங்குபவர். இவரே “திருவாரூர்த்
திருமூலட்டானனார்“, “திருவாரூரில் திருமூலட்டானத்து எம்
செல்வன்“ என்பனவாதி தேவாரங்களால் துதிக்கப் பெறுபவர்.
புற்றிடங்கொண்டு இறைவன் எழுந்தருளிய காரணத்தாலே இது
பிருதிவித் தலமாதலின் இச்சிறப்பை அடுத்துக் குறித்தவாறு.
ஆதி தேவர்
- வரிசை 132 பாட்டிற் கூறிய ‘யார்க்கும்
முன்னவன்' என்ற கருத்துப் பற்றியது.
சோதி மாமணி நீள் சுடர் மூன்றின் - மாமணி
- பேரழகு.
நீள்சுடர் - பேர் ஒளி. சோதியே! சுடரோ!! சூழ் ஒளிவிளக்கே!!!
என்ற திருவாசகம் இங்கே நினைவுகூரத்தக்கது. மணிகளின்
ஒளிபரப்பும் திருமுற்றம் என்பாருமுளர். திருமுற்றமாவது
தன்னியல்பிலே பிரகாசிப்பதாம். அதிற்கிடக்கும் மணிகள் பருக்கைக்
கற்களோடு ஒப்பஎடுத்து ஏறியத்தக்கன என்று அப்பர்சுவாமிகள்
புராணத்தால் அறிகின்றோம். இல் + முன் - என்றது மூன்றில் என
வந்தது.
எயில்
- மதில். மூதெயில் - பழமையான மதில் என்க
-
தொன்னகரத்தின் தொல்போயில் ஆதலின் அதற்கேற்ப எயிலையும்
மூதெயில் என்றார். ‘தொல்லெயில் உடுத்த தில்லை மூதூர்' என்ற
திருவாக்குங் காண்க.
மூதெயில்...முன்னாயது - மதில் திருவாயிலை
அடுத்து
முன்புறம் உள்ளது. திருவாயிலைக் கடந்து உட்சென்றவுடன்
காணப்பெறுவதும், தரிசிக்க வேண்டுவதும் இதுவாம், என்பார் முன்
ஆயது என்றார்.
முன்னானது
- என்பதும் பாடம். 1
|
|
|
|