142.
|
பூத
மைந்து நிலையிற் கலங்கினும் |
|
|
மாதொர்
பாகர் மலர்த்தாண் மறப்பிலார்
ஒது காத லுறைப்பி னெறிநின்றார்
கோதி லாத குணப்பெருங் குன்றனார். |
7 |
(இ-ள்.)
பூதம்....மறப்பிலார் - (இறைவன் ஆணைவழியே
நிலைபெற்ற) ஐம்பெரும் பூதங்களும் தம் நிலையிற் கலங்கின
காலத்தும் (தமது நிலை கலங்காது) உமாதேவியாரை ஒரு பாகத்து
வைத்த சிவபெருமானது மலர் போன்ற பாதங்களைத் தம்மனத்தில்
மறத்தலில்லாதவர்கள்; ஒது...நின்றார் -
பெரியோர்களால் விதந்து
எடுத்து ஒதப்பெற்ற அன்பின் திண்மையினாலே அவ்வழியிலே
பிறழாது நிலை நின்றவர்கள்; கோது இலாத குன்றனார்
- குற்றமற்ற
குணமலை போன்றவர்.
(வி-ரை.)
பூதமைந்து நிலையிற் கலங்கினும் - உலகம்
உயிர் பெற்று (உயிர்ப்பு - மூச்சு) இருக்கும்படி அமைந்த காற்றானது
தன்னிலையின் மிக்குப் பெருங் காற்றாக வீசி உலகத்தை அழித்தல்;
இவ்வாறே மற்றப் பூதங்களும், பெருந்தீ, பெரும் வெள்ளம்
முதலியனவாக மாறி அழிவு செய்தல்.
இனி இதற்கு இவ்வாறன்றிச் சங்காரத்தில் அந்தந்தப்
பூதங்கள்
அவ்வவற்றிற்குரிய தன்மாத்திரையில் ஒடுங்கவும், இவ்வாறே சென்று
அனைத்தும் மாயையில் ஒடுங்கவும், உள்ள காலத்தும் - என்றும்
பொருள்கூறுவர். பிருதிவி - தனது மண் என்ற
உருவநிலைமாறித்
தனது நாற்றம் எனும் தன்மாத்திரையில்ஒடுங்கும். இவ்வாறே
பிறவுமாம். இதனையே இந்நாள் விஞ்ஞான சாத்திரிகள் (Atoms -
electrons) அணு - பரமரணு முதலியனவாய்ப் பகுத்துக் கூறுவர்.
நீர்ப்பெருக்கு மண்ணை நிலை கலக்கும்; அவ்வாறே நீர்ப்பெருக்கை
வடவைத்தீ சுவறச் செய்யும்; அதனைச் சண்டமாருதம் அவித்துப்
பின்னர் அம்முறையே அது முடிவில் ஆகாய (வியாபகம்)
நிறைவுக்குள்ளே ஒடுங்கும்; இவ்வாறு தத்தம் நிலைகளிற் பூதங்கள்
கலங்கின காலத்தும் தாம் கலங்காது இறைவன் பாதங்களை
மறவாதவர் என்பது இப்பொருளிற் கண்டது. காதல்
உறைப்பின்
நின்றார் - காதல் என்பது நாயகன் நாயகிகளுக்கிடையே உளதாகும்
அன்புக்கு உரிய சிறப்புப் பெயர். இதனால் இங்குக் குறித்தது
இறைவனுக்குத் தாங்கள் மீளா ஆட்பட்ட நாயகிளாகவும் அவர்
தமது உயிரின் நித்திய நாயகனாகவும் கொண்டு ஒழுகுபவர்
இவ் வடியவர்கள் என்பதாம். உலகத்தில் ஏனைய நாயகர்நாயகிகள்
சிலகாலம் உடற்கூட்டம் மட்டும் பெற்றிருந்து அந்த உடம்போடு
ஒழிவர். (இக்காலத்து அதுவரையிற்கூட இல்லாத உலகக் காதல்
காண்பதாயிற்று!) ஆனால் இறைவன் நித்தனாய் ஆன்மாவும்
நித்தனாய் இருத்தலின் அவன் என்றைக்கும் நீங்காத நித்திய
நாயகனாம். இச்சிறப்புத் தோன்ற - ஒதுகாதல் - என்றார். அதில்
உறைப்புப்பெற நிற்றலாவது மங்கை காணக்கொடார்
மணமாலையை - அப்பர் சுவாமிகள் திருவிடைமருதூர்த் தேவாரம்
- முதலிய திருவாக்குக்களிற் கண்டபடி இடைவிடாது பயின்று
இறைவனிடத்திலே முழுதும் ஈடுபட்டு நிற்றல். அந்தக் காதலிலே
பதிந்து அதனால் விழுங்கப்பட்ட நெறியிலே நிற்றல். ஆன்மாக்கள்
பிராகிருதர்கள் என்றும், வைநகிகர்கள் என்றும், சாமுசித்தர்கள்
என்றும் மூவகையினர். ஆற்றலு மறிவுங் காதலுமில்லாதவர்கள்
பிராகிருதர்கள். வைநதிகர்கள் - உலக ஒழுக்கத்திலே
விதிவிலக்குகளை அறிந்து அந்நெறியின் ஒழுகிநின்று இடையூறுவந்த
காலத்திலேயும் நன்னெறியிற் பதிந்து நிற்பவர். இவர்கள்
முறைமையின் மந்ததர முதலிய சத்திநிபாதமுடையவர்களாய்
நூல்வழியான் முத்தியடைய விம்புவோர். இவர்கள்புகழ்த்துணை
நாயனார் போல்வார்களாம். தங்கோனைத் தவத்தாலே தத்துவத்தின்
வழிபடுவார் பசி வருத்தியபோதும் விடாது அந்நெறி ஒழுகிப் பேறு
பெற்றது அவர்சரிதம் கூறும். சாமுசித்தராவார், எஞ்சிய
வினையின்பொருட்டே திருமேனி தாங்கி மேல்வினை ஒழித்துத் தன்
செயயில்லாது ஒழுகி, எல்லாம் சிவன் செயலேயாக நிகழ்பவர்.
இவர்கள் சண்டீசர் கண்ணப்பர் - போன்று விதி விலக்குகளைக்
கடந்து செய்யும் செயல்களை உடையவர்கள். இயற்பகையார்
-
கோட்புலியார் சிறுத்தொண்டர் செருத்துணையார் முதலிய
நாயன்மார்கள் சரிதங்களும் காண்க. நெறி நிற்றலாவது
- தம்
வழியே பத்தியைத் திருப்பிக்கொள்ளாது பத்தி வழியிலே தம்மை
நிறுத்திக் கொண்டு ஒழுகுதலாம்.
மலர்த்தாள் மறப்பிலார்...உறைப்பின்
நெறிநின்றார் -
மறப்பிலராகி நின்றார்கள் எனக் கூட்டி உரைத்தலுமாம். பூதங்களின்
திரிபினால் உலகம் அழிய நேரினும் தாம் கலங்காது தமது முன்னைப்
பணிவிடை வழியே நிற்றல்., இதனையே,
வானந்
துளங்கிலென்! மண்கம்ப மாகிலென்!
மால்வரையும்
தானந் துளங்கித் தலைதடு மாறிலென்! தண்கடலும்
மீனம் படிலென்! விரிசுடர் வீழிலென்! வேலைநஞ்சுண்
டூனமொன் றில்லா ஒருவனுக் காட்பட்ட உத்தமர்க்கே. |
|
மண்பா
தலம்புக்கு மால்கடல் மூடிமற் றேழுலகும்
விண்பால் திசைகெட் டிருசுடர் வீழினு மஞ்சல் நெஞ்சே
திண்பால் நமக்கொன்று கண்டோந் திருப்பா
திரிப்புலியூர்
கண்பாவு நெற்றிக் கடவுட் சுடரான் கழலிணையே. |
|
கன்னெடுங்
காலம் வெதும்பிக் கருங்கடல் நீர்சுருங்கிப்
பன்னெடுங் காலம் மழைதான் மறுக்கினும்
பஞ்சமுண்டென்
றென்னொடுஞ் சூளறும் அஞ்சனெஞ் சேயிமை
யாதமுக்கட்
பொன்னெடுங் குன்றமொன் றுண்டுகண் டீரிப்
புகலிடத்தே. |
என்பனவாதி அப்பர் சுவாமிகளது தேவாரத் திருவாக்குக்களால்
அறிக.
அப்பர்சுவாமிகள் நீற்றறையில் ஊறின்றிக் குளிர்ந்திருந்த
காலத்தும், கடலிற் கல்லே தெப்பமாக மிதந்து வந்த காலத்தும், பிற
இடத்தும் இக்கருத்தையே காண்க.
அஞ்சுவ
தியாதொன்று மில்லை அஞ்ச வருவதும்
இல்லை
|
என்பதும் அப்பர் சுவாமிகள்
ஆணை. ....நாணிலமண் பதகருடன்,
ஒன்றிய மன் னவனசூட்சி திருத்தொண்டின் உறைப்பாலே,
வென்றவர்.... என்றது இங்கு உணரத்தக்கது.
கோதிலாத குணப்பெருங்
குன்று - குணமென்னுங்
குன்றேறி நின்றார் என்றார் திருவள்ளுவரும். கோதிலாத
குணமென்றது திருக்கூட்டத்தில் உள்ள அடியார்களுக்கு உரியனவாய்
இப்பகுதியிலே ஆசிரியர் தாமே அருளிச்செய்தலில் இங்கு
விவரிக்கவில்லை. அக்குணங்களிற் சலியாமையும் நிலைபேறும்
மிக்கது பற்றி்ப் பெருங்குன்று என்றார். எம்பிரானுக்கு ஆனபணி
ஆசிலா நல்லறமாவது அறிய வருமோ உமக்கு என்று தண்டியடிகள்
நாயனார் திருவாரூர்ச் சமணர்களைத் தேற்றி யருளினமையும்,
சண்டேசுர நாயனார் தந்தையைத் தடிந்தமையும், எறிபத்த நாயனார்
யானையையும் பாகரையுங் கொன்றமையும், இன்னும் இவைபோல
இப்புராணத்து வருவனவும் சிவபுண்ணியமாகிய நல்வினையே ஆயின
கருத்து இங்கே உய்த்துணரற்பாலது. குணமென்னுங் குன்றேறி
என்னுங் குறளிற் பேசிய நீத்தார்களாகிய முனிவர்களினும் மேம்பட்டு
விளங்குவது அடியார்கள் தன்மை. ஆதலின் இது பெருங்குன்று
எனப் பெற்றது. 7
|
|
|
|