150.
|
தம்பிரா
னருளி னாலே தவத்தினான் மிக்கார்
போற்று |
|
|
நம்பியா
ரூர ரென்றே நாமமுஞ் சாற்றி மிக்க
ஐம்படை சதங்கை சாத்தி யணிமணிச் சுட்டி சாத்திச்
செம்பொனா ணரையின் மின்னத் தெருவிற்றே
ருருட்டு
நானில். |
4 |
(இ-ள்.)
தம்பிரான்.......சாற்றி - (அவதரித்தாராகிய அவர்)
தாம் அடிமை செய்யும் தமது பெருமானது அருளினாலே,
மாதவர்களும் போற்றத்தக்க நம்பியாரூரர் என்ற திருநாமம்
சூட்டப்பெற்றவராய்; மிக்க.......மின்ன - (காவல் தொழிலில்) மிகுந்த
ஐம்படையும் சதங்கையும் அணியப்பெற்றும், அழகிய மணிகளிழைத்த
சுட்டி அணியப்பெற்றும், செம்பொன் நாண் திருவரையில்
விளங்கும்படியாக; தெருவில்..........நாளில் - தெருவிலே சிறுதேர்
உருட்டி விளையாடுகின்ற நாள்களில் (ஒருநாள்),
(வி-ரை.)
தம்பிரான் - தமக்கு உரிய பெருமான்.
அருளினாலே நாமமும் சாற்றி - என்று கூட்டுக. சாதகர்மம் முதலிய
சடங்குகளில் பூர்வ புண்ணியத்தின் வசமாகக் கிடைத்த இப்பிறவி
என்று தொடங்கிக் காணும் வழக்கு உண்மையால், இங்கு இவர்
அவதரித்து நாமமிடப்பெற்றது முன் புண்ணியப்பயனாகிய
தம்பிரானருளினாலே என்றார். அருளினாலே - அருளைப்
பெற்றமையினாலே (நம்பியானவர்) - என்பது இராமநாதச் செட்டியார்
உரைக்குறிப்பு. சாற்றி - சாற்றக்கொண்டு
- சாற்றப்பெற்று -
என்னும் பொருளில் வந்தது.
சாற்றி - சாத்தி - சாத்தி - செயப்பாட்டுவினைகள்
செய்வினையாகக் கூறப்பட்டன.
தவத்தின் மிக்கார்
போற்றும் - போற்றும் நாமம் என்க.
உபமன்னிய முனிவர் முதலிய மாமுனிவர்களும் எடுத்துத்துதிக்கின்ற
திருப்பேர் ஆதலின் மிக்கார் போற்றும் என்றார். தவத்தினின்
மிக்கார் - மாதவர்கள் - பெருமுனிவர்கள். இது க. சதாசிவஞ்
செட்டியார் கண்ட உரை. முனிவர்கள் வெள்ளையானையுடன் வந்து
நம்பிகளைத் திருக்கயிலைக்கு அழைத்துச் சென்றமையும், உபமன்னிய
முனிவர் நம்பியாரூரன் நாந்தொழுந் தன்மையான் என்று எடுத்து
வணங்கித் துதித்ததும் இங்குவைத்துக்காண்க.
பெருமிழலைகுறும்பநாயனார் - கழறிற்றறிவார் நாயனார் -
சோமாசிமாற நாயனார் முதலிய பெருமக்கள் போற்றியதும் காண்க.
இவ்வாறன்றிச்,
சடையனாரும் இசைஞானியாரும் எனக்கொண்டு,
‘அவர்கள், தங்கள் தவமிகுதியினால் இவரை மகனாக அடைந்தவர்,
யாவரும் போற்றும் நாமம் சாத்தி என்று உரைப்பாரும், பெற்று
என்று பாடம் கொண்டு தவத்தினான் மிக்கார் அங்குக் கூடியிருந்த
பெரியோர் நாமகரணம் செய்து என்றுரைப்பாரும்,சடையனார் தமது
மகனாகப்பெற்று என்று உரைப்பாரும் ஆகப் பலரும் பலவாறு உரை
கண்டனர். சாற்றி - சாத்தி - சாத்தி - மின்ன - உருட்டு நாளில்
என்று வினை எச்சங்கள் ஒரே எழுவாயின் வினைகொண்டு
முடியுமாறு பொருள் கொள்ளுதலே சிறப்பென்பர்.
நம்பி ஆரூரர் - ஆரூரர்
- பிள்ளைக்குப் பெற்றோர் இட்ட
பெயர். திருவாரூர்ப் பெருமானுக்கு அடிக்குடியாக உள்ள குடியிலே
வந்தமையால் இப்பேர் இக்குடியிலே வரும் பிள்ளைகளுக்கு இட்டனர்
என்க. ஆரூரன் பேர் முடிவைத்த..... திருவாரூர்ச் சிவன் பேர்
சென்னியில் வைத்த என்பனவாதி நம்பிகளது தேவாரங்கள் காண்க.
இவர் பாட்டனார்க்கும் (பேரனார்) இப்பெயர் இருந்தமை பின்னர்
இச்சரிதத்திற் காணலாம். வரிசை 205 பாட்டும் பிறவும் காண்க. நம்பி
- சிவப்பிராமணர்களின் மரபுக்குரிய பெயர். நம்பியாண்டார்
நம்பி
- முதலிய பேர்களையும், நம்பி முதல் திருவலகுவரை முதலிய
வழக்குகளையும் காண்க.
நாமமும் சாற்றி
- சைவர்க்குரிய 16 சடங்குகளில் ஒன்று.
நாமகரணம் என்பர்.
ஐம்படை
- காத்தற் கடவுளாகிய திருமாலுக்குரிய சங்கு -
சக்கரம் - வாள் - தண்டு - வில் என்ற ஐந்து ஆயுதங்களின்
உருவங்களிற் பொன் முதலியவற்றால் அணிகள்செய்து
சிறுவர்களுக்குக் காவலாக மார்பில் அணிவது. இது பண்டைக்
காலமுதல் தமிழர்களின் மரபு. பிள்ளைத் தமிழ்ப் பிரபந்தத்திலே
திருமால் காக்க என முதலிற் கூறும் மரபும் காண்க. ஐம்படையின்,
பூட்டார் மார்பிற் சிறிய மறைப் புதல்வன் (நமிநந்தி - புரா - 33).
ஐம்படை மார்பிற் காணேன்......(திருவிளை - மாமனாக - பட).
சதங்கை - இடையிலும் காலிலும் அணிவது. ஐம்படையும்
சதங்கையும் என உம்மைத் தொகை. ஐம்படைச் சதங்கை என்ற
பதிப்புகள் சரியனறு போலும். சாத்தி - சாத்தக்
கொண்டு.
தேருருட்டுதல்
- சிறு தேர் உருட்டி விளையாடுதல். இது
பிள்ளைப் பருவங்களில் ஆண்பிள்ளைகட்குரிய விளையாட்டு. இது
ஆண்பாற் பிள்ளைத் தமிழ்ப் பருவங்களில் ஒன்றாதல் காண்க.
மூன்றாண்டுவரை இப்பருவங்களுக்குரிய வயது என்பர். இதற்கு
எழுவாய் அவதரித்தாராகிய அவர் - என மேற்பாட்டிலிருந்து
வருவித்துக் கொள்க. (அவர்) - அருளினாலே - நாமமும் சாற்றக்
கொண்டு - சாத்தி - சாத்தி - மின்னத்- தேருருட்டு நாளில்.
நாமமும் சாத்தி -
என்பதும் பாடம். 4
|
|
|
|