151.
|
நரசிங்க
முனைய ரென்னு நாடுவா ழரசர் கண்டு |
|
|
பரவருங்
காதல் கூரப் பயந்தவர் தம்பாற் சென்று
விரவிய நண்பி னாலே வேண்டினர் பெற்றுத் தங்கள்
அரசிளங் குமரற் கேற்ப வன்பினான் மகன்மை
கொண்டார்.
|
5 |
(இ-ள்.)
நரசிங்க.......கூர - அந்நாட்டை வாழ்வுபெற
அரசுபுரியும் நரசிங்க முனையர் என்னும் அரசர் கண்டு இவரிடத்தே
சொல்ல அரிய ஆசை மிகுந்ததனாலே; பயந்தவர் ....... கொண்டார் -
பெற்றோர்களிடம் போய் நண்புரிமையினாலே இக்குழவியினை
வேண்டிப் பெற்றுக்கொண்டுபோய்த் தங்கள் மரபில் அரசகுமாரனைப்
போல அன்பு மிகுதியினால் தமக்கு மகனாந் தன்மையிலே
ஏற்றுக்கொண்டனர்.
(வி-ரை.)
நரசிங்க முனையர் - அக்காலத்தே திருமுனைப்பாடி
நாட்டை ஆண்ட அரசர். வரிசை - 147-ம் பாட்டின் கீழ் உரை
காண்க. இவர்கள் ஒரு சிற்றரச மரபினைச் சேர்ந்தவர். பின்னர்
நரசிங்கமுனையரைய நாயனார் புராணத்திலே திருமுனைப்பாடி,
நாடாளுங் காவலனார் நரசிங்க முனையரையர் (1), இம்முனையர்
பெருந்தகையார் (2) என்பதுங் காண்க.
காதல் கூர
- ஆசை மிகுந்ததனாலே . இவர் சுந்தரராதலால்
இவரது பேரழகினாலே ஆசைகொண்டார். பயந்தவர்
- பெற்றோர்
(சடையனார்).
விரவிய நண்பினாலே
- முன்னரே அவரிடம் தமக்கு
விரவியிருந்த நண்புரிமையினாலே என்க. அவ்வாறல்லாத வழி அரசர்
குடிகளிடம் மகனைக் கேட்டலும், பெற்றோர் மனமொத்துத் தருதலும்
இல்லையாம்; அது வலிந்து கோடலின்பாற்பட்டுப் பகையரசின்
செயலாய் முடியும்; ஆதலால் நண்பினாலே வேண்டினர் பெற்று
என்றார்.
வேண்டினர் பெற்று - வேண்டிப்பெற்று.
வினைமுற்று
எச்சப்பொருளில் வந்தது. முற்றெச்சமென்பர். அரசிளங்குமாற்கேற்ப
- தன்குமாரனை வளர்த்தல்போல. அன்பினால்
மகன்மை -
அன்புகாரணமாக மகனாந் தன்மை அபிமானபுத்திரன் என்பர்.
வரும்பாட்டிற் காதற் பிள்ளை என்பதும் காண்க. எனவே,
நம்பிஆரூரர் பெற்றோர்க்கு மகனாகவும், அரசனுக்கு மகனாந்
தன்மையுடையராகவும் வளர்ந்தனர். இதனைப் பின்னர் வரும்
பாட்டிலும், 19-வது பாட்டிலும் காண்க.
நாடுவாழ் அரசர்
- நாடு தன்கீழ், இனிது வாழும்படி
அரசுபுரிவர். இந்நரசிங்கமுனையரையே இப்புராணத்துக் கூறும்
நாயன்மார்களின் ஒருவர் என்றும் கூறுவர். இது ஆராயத்தக்கது.
இச்சரிதப் பகுதி,
நாதனுக்கூர்
நமக்கூர் நரசிங்க முனையரையன்
ஆதரித் தீசனுக் காட்செயு ழர்அணி நாவலூர்....
-
திருவெண்ணெய்நல்லூரும் திருநாவலூரும் - 11 |
என்ற நம்பிகள் தேவாரத்தாலும்
அறியப்பெறுவதாம். இப்பாட்டினால்
அந்தணர் குலத்தவரை அரசர் மனைகளிற் பிள்ளையாய் வளர்ப்பது
அந்நாள் வழக்கங்களில் ஒன்று என்று தெரிகிறது. இந்நாளிலும்
கொச்சி முதலிய சில சுதேசங்களின் அரசர்கள் பிராமணருடன்
சமமான உணவுரிமை முதலியன பெற்று நிகழ்வது இவ்வழக்கத்தின்
எச்சம் போலும்.
வேண்டினர் பெற்று - மகன்மை கொண்டார் - வேண்டுதல்
-
தரப்பெறுதல் கொள்ளுதல் இவை தருமசாத்திரப்படி மகனாகப்
பெறுதற்குரிய அங்கங்கள். 5
|
|
|
|