157.
|
மகிழ்ச்சியான்
மணமீக் கூறி மங்கல வினைக
ளெல்லாம் |
|
|
புகழ்ச்சியாற்
பொலிந்து தோன்றப் போற்றிய
தொழில
ராகி
இகழ்ச்சியொன் றானு மின்றி யேந்துபூ மாலைப் பந்தர்
நிகழ்ச்சியின் மைந்தரீண்டி நீண்முளை சாத்தி
னார்கள். |
11 |
(இ-ள்.)
வெளிப்படை. (அவ்வாறு ஏற்றுக்கொண்ட மணமகள்
வீட்டு) மைந்தர்கள் மண நாளோலைபெற்ற உறுதியான
மகிழ்ச்சியினாலே அத்திருமணச் செய்தியை மேலும் மேலும்
எல்லார்க்கும் எடுத்துச் சொல்லி மணத்திற்குரிய வாய் முன்னர்ச்
செய்யப்பெற வேண்டிய எல்லாச் சுபகாரியங்களையும் விளக்கமுற
விரும்பிச் செய்வார்களாயினர்; எவ்வாற்றானும் குறைசொல்லக் கூடாத
வகையாலே பூமாலைகளாலே அலங்கரிக்கப்பெற்ற பந்தர் அமைத்து
அதிற் கூடிமுளை தரிக்கும் சடங்கினைச் செய்தார்கள்.
(வி-ரை.)
மைந்தர் - கூ றி - ஆகிப் - பந்தர் நிகழ்ச்சியின் -
ஈண்டிச் - சாத்தினார்கள் - என்று கூட்டுக.
மணமீக்கூறி -
மணச் செய்தியைப் பெருமகிழ்ச்சி காரணமாக
எல்லாருக்கும் எடுத்துச் சொல்லி.
போற்றிய தொழிலர்
- போற்றி - பாராட்டிய. போற்றுதல்
மனம் வாக்குக்களாலும், தொழில் மெய்யினாலும் ஆம்.
போற்றியதாகிய தொழில் - என்றும் கூறுவர்.
தொழில் -
பந்தர்நிகழ்ச்சி - முளை சாத்தல் முதலியன.
இகழ்ச்சி யொன்றானும் இன்றி - ஒன்றினாலும்
குறைவின்றி.
இகழ்ச்சி - அதற்குக் காரணமான குறை எனும் பொருளில் வந்தது.
இன்றிச் சாத்தினார்கள் என வினை முடிபு செய்க.
பூமாலைப்பந்தர்
- மங்கல வினைப்பந்தர், தோரணம்
முதலியவற்றிற் பூமாலைகளை அளவு பெறத் தொங்க விட்டு
அலங்கரித்தல் முன்னாள் வழக்கு. உண்மைப் பூவிற்கு மாறாய்ப்
பூப்போன்ற வடிவிற் போலியாய் அமைத்த காகிதப்பூக்களால்
அலங்கரித்து மகிழும் இக்காலத்தவர் இதன் பெருமையை உணரார்.
பூ போலியாகவே அலங்காரமும் அதனுள் விளையும் எல்லாம்
போலியாய் ஒழிதல் கண்கூடு. போலிகளில் மகிழும் மனப்பான்மை
இக்காலத்து மல்கி வருதல் வருந்தத் தக்கது.
முளை சாத்துதல்
- இதனை வடநூலார் அங்குரார்ப்பணம்
என்பர். இது மணநாளுக்கு முன் ஏழாநாட் செய்யப்பெறும் சடங்கு.
நன்னிலைமைத் திருநாளுக் கெழுநாளா நன்னாளிற் ...... புனிதமுளை
பூரித்தார் (1172) திருஞான சம்பந்தமூர்த்தி சுவாமிகள் புராணம். இது
சந்திரனை அதிதெய்வமாக வைத்த கும்பத்தினருகிலே பாலிற் கலந்த
நவ தானியங்களை மந்திரத்தோடு பாலிகைகளிடத்திற் பெய்து
மண்ணிட்டு வளர்த்தல் என்பர் ஸ்ரீ ஆறுமுகத்தம்பிரான் சுவாமிகள்.
துவாதசாதித்தர்களுக்காக 12 பாலிகைகள் வைத்து அவற்றில்
மந்திரத்தோடு எடுத்த புற்றுமண் முதலியவை நிரப்பி அவற்றில்
முளைவிடுமாறு தானிய மணிகளைத் தெளித்துப் பெய்தல். முளைவிடுமாறு தானிய விதைகளைச் சாத்துதல்
என்க. சாத்துதல் -
சார்த்துதல். மண் நீர் இவை பொருந்தச் சேர்த்தல். இது மரபுப்பெயர்.
இந்த முளைகளின் வளர்ச்சியே சுபங்களுக்கு நல்ல அறிகுறியாகக்
கருதப்பெறுதலின் நீண்முளை என்றார். இது திருவிழா கும்பாபிடேகம்
முதலிய எல்லா மங்கலங்களிலும் முதலிற் செய்யப்பெறுவது.
மைந்தர் - முன்பாட்டில் மணமகள் வீட்டிலிருந்து
வந்து
நாளோலை ஏற்றுக் கொண்ட மைந்தர். இது மணமகள் வீட்டில்
நடப்பது என்று குறிக்க அப்பெயராலேயே தொடர்ந்து கூறினார்.
வரும்பாட்டிலும் மாதினைப் பயந்தார் என்று தொடர்ந்து கூறுதல்
காண்க. 11
|
|
|
|