163.
|
தூநறும் பசுங்கர்ப் பூரச் சுண்ணத்தால் வண்ணப்
போதில்
|
|
|
ஆனதண் பனிநீர் கூட
வமைந்தசந் தனச்சே றாட்டிமான்மதச்
சாந்து தோய்ந்த மங்கலக் கலவை
சாத்திப்
பான்முறை முந் நூன் மின்னப்பவித்திரஞ் சிறந்த
கையான்.
|
17 |
(இ-ள்.) தூநறும்........ஆட்டி
- தூய நறிய பச்சைக் கர்ப்பூரச்
சுண்ணத்துடன் அழகிய பூக்களிலிருந்து ஆகிய தண் பனிநீர் கூட்டிச்
செய்த சந்தனக் குழம்பைப் பூசி; மான்மதம்..........சாத்தி - கத்தூரி
சேர்ந்த கலவைச் சாந்தையும் அணிவித்து; பான்முறை..... கையான் -
அதன்பின் விதிப்படி அணியும் பூணூலை மார்பிலும் பவித்திரத்தைக்
கையிலும் விளங்கவைக்க, அவ்வாறு பவித்திரங்கொண்ட
கையினராகிய (நம்பி ஆரூரர்).
(வி-ரை.)
இப்பாட்டுக் குளகம். கையான் என்பது வரும்பாட்டில்
கோலங்கொண்டான் என்பதனுடன் முடிகின்றது.
தூ
நறும் பசும் கர்ப்பூரம் - தூய்மை - கொழுப்பு முதலிய
அநுசிதமான பிற பொருட்கள் கலவாமை. நறுமை - நல்வாசனை
மிகுதி. பசுமை - நிறமும் குணமுங் குறித்தது. சுண்ணம் - தூள்,
வண்ணப்போதில்
ஆனதண்பனிநீர் - அழகிய பன்னீர்
முதலிய மலர்களிலிருந்து வடித்தெடுத்தபனிநீர். போதில் -
போதுகளிலிருந்து மான்மதம் - கத்தூரி.
பான்முறை
முந்நூல் - மறைப்பான்மையின் அணியும் பூணூல்.
பான்மறை - என்பது பாடமாயினும் இதுவே பொருளாம்.
பவித்திரம்
- பரிசுத்தம் என்பது பதப்பொருள். இங்கு
அதனைச் செய்யும் பொருளுக்காயிற்று. காப்புச் சேர்த்தபின்
நடைபெறும் மணச் சடங்குகள் எல்லாம் சங்கற்ப பூர்வமாய்ச்
செய்யப்பெறுமாதலின் அதற்கேற்பப் பவித்திர மணிந்தே
செய்யப்பெற வேண்டுமென்பது விதி. பவித்திரம் ஓர்வகை
முடிப்புடனே தருப்பை - பொன் - முதலியவற்றாற் செய்து
கைவிரலில் அணிவது. அவ்விரலுக்குப் பவித்திரவிரல் என்று
பெயருமாம்.
கூட்டியமைத்த
- என்பதும் பாடம். 17
|