169.
|
நெருங்குதூ
ரியங்க ளேங்க நிரைத்தசா மரைக ளோங்கப்
|
|
|
பெருங்குடை
மிடைந்து செல்லப் பிணங்குபூங்
கொடிக ளாட
அருங்கடி மணம்வந் தெய்த வன்றுதொட் டென்று
மன்பில்
வருங்குல மறையோர் புத்தூர் மணம்வந்த புத்தூ
ராமால்.
|
23 |
(இ-ள்.)
நெருங்கு......எய்த - நெருங்கி முழங்கும்
வாத்தியங்கள் ஒலிக்கவும், வரிசையின் வீசப்பெறும் சாமரைகள்
மேலே கிளர்ந்து வரவும், பெரிய குடைகள் நெருங்கிச் செல்லவும்,
ஒன்றோடொன்று பிணங்குவன போலப் பலவகையுள்ள அழகிய
கொடிகள் ஆடவும், ஆக இவ்வண்ணமாக அந்தப் புதிய திருமண
எழுச்சி புத்தூர் வந்து சேர்ந்தது; (அதனாலே) அன்று........ஆம் -
அன்று முதலாக என்றைக்கும் அன்பிலே வருகின்ற ஆதிசைவ
மறையோர் குலத்தவர் வாழும் புத்தூரானது மணம் வந்த புத்தூர்
என்று பெயர் பெற்றதாம். ஆல் - அசை.
இப்பாட்டு மண எழுச்சி திருநாவலூரிலிருந்து புத்தூர்
வந்த
சிறப்பு உரைத்தது.
(வி-ரை.)
ஏங்க - ஓங்க - செல்ல - ஆட - எய்த -
(அதனால்) புத்தூர் ஆம் - என்க.
நெருங்கு தூரியங்கள்
- இங்கு நெருங்கு என்பது பல
வாத்தியங்களும் ஒன்றோடொன்று மாறுபடாது ஓசை ஒன்றித்து
இயைந்து முழங்கவேண்டுதலைக் குறித்தது.
நிரைத்த சாமரை
- சாமரைகள் வரிசைப்பட ஒன்றுபோல
இரட்டுதலின் நிரைத்த என்றார். நிரை - வரிசை. பெருங்குைடை
மிடைந்து - ஒன்றோடொன்று சேர்ந்து நிழல் செய்யவேண்டுதலின்
மிடைந்து என்றார்.
பிணங்கு பூங்கொடிகள்
- கொடிகள் ஆகாயத்தில்
காற்றினால் அசைந்து ஆடும் போது ஒன்றுபோலவே ஆடாமையின்
அவை பிணங்குவன போல இருந்தன என்று குறித்தவாறு.
காற்றினால் அசைவும் ஏந்திச் செல்வோரின் அசைவும் சேர்ந்து
கொடிகளிடத்து மிகவும் அசைவுண்டாதலின் ஆட என்றதாம்.
கடிமணம் - கடி - புதுமை - இதுவரை மணமக்கள்
காத்துவந்த பிரமசரிய கன்னியா நிலைகளின் வேறாய்ப் புதிய
நிலையை விளைத்தலின் கடிமணம் என்பர். கடி - காவல்
எனக்கொண்டு இருவரும் தத்தமக்கு விதித்த நிலைகளைக்
காத்தலைக் குறிக்கும் என்றும் கூறுவர். இனி, கடி -
பின்னர்க் கடியப்படும் - தடுக்கப்படும் - அரிய மணம் என்ற
குறிப்பும் பெறுதல் காண்க. மேற்பாட்டிலும் அருங்கடி என்று
குறித்ததும் காண்க. ஏங்க - பிணங்க - என்றவைகளும் பிற்சரிதக்
குறிப்புக்களாதல் காண்க.
அரும்
- கடியப்படுதலிலும் அருமையாவது திருமலையிலே
ஆலாலசுந்தரராய் நின்று பெற்ற வரத்தின்படி திருவருள் விளைவு
பெறுதலின் சிறப்பாம். (வரிசை 38, 39 பாட்டுக்கள் காண்க.)
இவ்வாறு எல்லா உயிர்களும் வேண்டிப் பெற்றுத் தங்கள் தங்கள்
பிராரத்தம் மட்டும் அனுபவித்துச் செல்லவும் ஆகாமியம் மேன்
மேல் ஏறாது தடுக்கவும் பெறுதல் அருமையாம். ஆதலின் இது
அருமையாய்க் கடியப்பெற்ற மணம் என்று கற்பித்தபடியாம்.
62-வது பக்கம் கற்பனை காண்க.
அன்பின் வரும் குலமறையோர்
- சிவபெருமானுக்கு
அன்பினாலே வழிவழி அடிமை செய்யவும், உலக நிலையிலே
வேறொன்றும் செய்யாதிருக்கவும், வரப்பெற்ற குலத்தாராகிய
சிவவேதியர்.
புத்தூர் - அதன் இயற்பெயர் - மணம்
வந்த புத்தூர்.
இந்தத் திருமணத்தின் அரிய கோல எழுச்சி வந்ததாற் போந்த
காரணப்பெயர். இந்நாளிலும் இஃது இப்பெயராலேயே (மணந்
தவிர்ந்த புத்தூர் என்று மருவி) அழைக்கப் பெறுகிறது. அஃது
அன்றுதொட் டென்றும் ஆமால் என்ற ஆசிரியரது ஆசியின்
பயனாம். இவ்வாறே திருப்பெருமண நல்லூர்க்கும் பெயர்வந்த
காரணமும்காண்க.
சாமரைகள் தோரை - என்பதும் பாடம்.
(மணிக் குஞ்சங்கள்
கட்டிய). 23
|