170.
|
நிறைகுடந்
தூப தீப நெருங்குபா லிகைக ளேந்தி |
|
|
நறைமல
ரறுகு சுண்ண நறும்பொரி பலவும் வீசி
யுறைமலி கலவைச் சாந்தி னுறுபுன றெளித்து வீதி
மறையவர் மடவார் வள்ளன் மணமெதிர் கொள்ள
வந்தார். |
24 |
(இ-ள்.)
வெளிப்படை. (புத்தூரின்) மறையவர்களும்
மடவார்களும் - நிறைகுடம் - தூபம் - விளக்கு - முளைப்
பாலிகைகள் முதலிய மங்கலப் பொருள்களை ஏந்திக் கொண்டும்,
மலர் - அறுகு - பொற் சுண்ணப்பொடி - பொரி - முதலியவற்றை
இறைத்துக் கொண்டும், சந்தனங் கலந்த பனிநீர்
தெளித்துக்கொண்டும், மணஎழுச்சியிற் போந்தவர்களை
எதிர்கொண்டு வந்தார்கள்.
(வி-ரை.)
மறையவரும் மடவாரும் - ஏந்தி - வீசி - தெளித்து
- எதிர்கொள்ள வந்தார் - என முடிக்க. இவ்வாறு திருவிழா
முதலியவற்றில் எதிர்கொள்ளுதல் அந்நாள் மரபு.
நிறைகுடம் -
பூரண கும்பம் என்பர். இவை முதலியவை
ஏந்திவரும் மங்கலப் பொருள்கள்.
நெருங்கு பாலிகை -
[நீண்முளை சாத்தினார்கள் என
வரிசை 157-ம் பாட்டிற் கண்ட] முளைகள் நெருங்கி முளைத்து
வளர்ந்த முளைப்பாலிகைகள். மலர் - அறுகு - சுண்ணம் - பொரி
முதலியவற்றைக் கலந்து வீசுதல் மங்கல மரபுகளில் ஒன்று. பலவும்
என்றதனால் இவற்றோடு பிற பொருள்களும் சேர்த்தல்
குறிப்பிட்டதாம்.
உறைமலி கலவை சாந்து - கலவை சேர்த்து
உறைத்த
மணமிக்க சந்தனம். உறுபுனல் தெளித்து - அந்தச்
சந்தனம்
சேர்ந்த பனிநீரைத் தெளித்தல். இது இக்காலத்தும் வழக்கமாம்.
தெளித்து - எழுச்சியிற் போந்தார்மீது தெளித்து. 24
|
|
|
|