177.
|
பண்டிசரி
கோவண வுடைப்பழமை கூரக் |
|
|
கொண்டதொர்
சழங்கலுடை யார்ந்தழகு கொள்ள
வெண்டுகி லுடன்குசை முடிந்துவிடு வேணுத்
தண்டொருகை கொண்டுகழ றள்ளுநடை கொள்ள. |
31 |
(இ-ள்.)
பண்டி...கூர - வயிற்றிலிருந்து சரிந்த கோவண
உடையினது பழைமை மிகும்படி அதன்மேல் அணிந்துகொண்ட
அசைந்த உடை பொருந்தி நின்று அழகு செய்யவும்; வெண்
துகில்...கொள்ள - வெள்ளை ஆடையும் தருப்பையும் நுனியிலே
முடிந்துவிட்ட மூங்கிற்றண்டு மற்றொரு கையிலே தாங்கிக் கொண்டு,
வரும்போது கால்கள் மூப்பினால் நிலைபெறாது தள்ளாடிய
நடைகொள்ளவும்,
(வி-ரை.)
இப்பாட்டும் வரும்பாட்டும் இறைவன் தாங்கிவந்த,
மனைவியின்றிக் கொண்ட வானப்பிரத்த நிலைக் கோலத்தை
உணர்த்தின. வானப்பிரத்தமிரண்டனுள் இதனை விபத்தினீக வானப்
பிரத்த ஆச்சிரமமென்பர் வடநூலார். மூப்புக் கோலத்திற் கேற்பப்
பண்டிசரி கோவணம் என்றார்.
கோவணம்
- மறையே இறைவனது கோவணமாம். இறையும்
மறையும் முன்னைப் பழம்பொருள்களாதலால் கோவண
வுடைப்பழமை என்றார்.
மன்னுகலை
துன்னுபொருள் மறைநான்கே வான்சரடாத்
தன்னையே கோவணமாச் சாத்தினன்காண் சாழலோ |
என்பது திருவாசகம்.
ஓங்கு
கோவணப் பெருமையை யுள்ளவா றுமக்கே
ஈங்கு நான்சொல்ல வேண்டுவதில்லை
அமர்நீதி
- புரா - 14 |
சழுங்கலுடை
- கோவண உடையும் அதற்கேற்ப அதன்மேல்
அணிந்த அசைகின்ற ஆடையும் என்க. அருமறைநூற்
கோவணத்தின் மிசை அசையுந் திருவுடையும் (மானக் - புரா - 24).
திருமேனி அசைவினால் தளர்ந்து வழிகின்ற ஆடை.
ஒருகை -
குடை ஒருகையிற்கொண்டு மற்றொரு கையிலே
தண்டுகொண்டு என்க. இது தள்ளாடிய நடைக்கு ஊன்று கோலாகவும்
துகிலுக்கும் குசைக்கும் இடமாகவும் உதவுவதாம். குசை
- தருப்பை. 31
|
|
|
|