186.
|
மாசிலா
மரபில் வந்த வள்ளல்வே தியனை
நோக்கி |
|
|
நேசமுன்
கிடந்த சிந்தை நெகிழ்ச்சியாற் சிரிப்பு
நீங்கி
ஆசிலந் தணர்கள் வேறோ ரந்தணர்க் கடிமை
யாதல்
பேசவின் றுன்னைக் கேட்டோம் பித்தனோ
மறையோ
னென்றார். |
40 |
(இ-ள்.)
மாசிலா.......நோக்கி . குற்றமற்ற சிவவேதியர்
மரபிலே வந்த நம்பிகள் வேதியரைப் பார்த்து; நேசம்........நீங்கி -
முன்னம் அன்பு தொடர்ந்து வந்ததனாலே ஒருவாறு உள்ளம்
நெகிழப்பெற்றுச் சிரிப்பு நீங்கி; ஆசில்......மறையோன் என்றார்
-
குற்றமற்ற சிவவேதியர்கள் வேறு ஒரு அந்தணர்க்கு அடிமையாவர்
என்னும் வார்த்தை பேசுவதை இன்றைக்கு உம்மிடத்தேதான்
கேட்டோம்; மறையோனே நீ பித்தனோ? என்று கேட்டார்.
(வி-ரை.)
மாசிலா மரபு - குற்றமில்லாத குலம்.
ஆன்மாக்களின் பாசத்தைப் போக்கச் சிவபூசையை மரபுத்
தொழிலாகக் கொண்டதும், வேறு தொழில் செய்யாததுமான
ஆதிசைவ மரபு. மாசு - பாசம். உயிர்களுக்குப்
பாசத்தை
இல்லையாகச் செய்யும் மரபு. இந்த மரபு ஒன்றே பரார்த்த
சிவபூசைக்கு உரியதாம் என்ற ஆகம நூற்றுணிபும் குறித்தவாறு.
வரிசை 149 பாட்டினுரைகாண்க. இதற்கேற்பப் பின்னும்
ஆசிலந்தணர்கள் என்றமையும் காண்க.
நேசம்முன் கிடந்த சிந்தை நெகிழ்ச்சி
- முன் நேசம்
கிடந்த - என மாற்றுக. பண்டுதொட்டு அன்பு பதிந்து கிடந்த
காரணத்தால், அவ்வேதியர் தமது முகத்தை நேர் நோக்கியவுடனே
அதனாலே தாக்குண்டு சிறிது சிந்தை நெகிழ்ந்தது. நெகிழவே
இகழ்ச்சிச் சிரிப்பு நீங்கியது. முந்தையறிவின் றொடர்ச்சியினால்
முகைத்த மலரின் வாசம் போல், சிந்தைமலர உடன்மலரும்
செவ்வியுணர்வு என்றதும் காண்க. (சண்டீ - புரா - 13)
ஆதல் பேச - ஆதலைப் பேச. உன்னைக்
கேட்டோம்
- உன்னை இன்று பேசக் கேட்டோம். இன்று -
இதுவரை இவ்வாறு
சொல்வாருமில்லை. பேச - எனவே அது சாத்திர
வழக்கன்று எனக்
குறித்தவாறு. சாதி வரம்புகள் இறைவன் வகுத்த சாத்திர விதிகளுக்கு
உட்பட்டன. அதுவேயுமன்றி உலக நிலைபேற்றுக்கும் மேன்மேற்
செல்லும் நிலைக்கும் இன்றியமையாது வேண்டப் பெறுவனவுமாம்.
அவை முற்காலத்திலேயன்றி இக்காலத்தும் உள்ளனவே.
இவ்வழக்கினாலே ‘சாதி வரம்பை அழிக்க வேண்டுமென்பது
ஆண்டவன் திருவுள்ளம் போலும்' என்று சிலர் கருதுகின்றார்கள்.
அது சரியன்று. அது ஆண்டவன் திருவுள்ளமாயின் நம்பிகள்
காலத்துக்குப் பின் இதுவரை சாதி வரம்புகள் நிலைத்திருக்கமாட்டா.
அன்றியும் இதனால் இறைவன் சாதிவரம்பை அழிப்பதற்கு மாறாக
உறுதிப்படுத்தவே கருதினான் என்பது பின் நிகழ்ச்சிகளால் அறிக.
இக் காலத்து நவீனக் கிளர்ச்சிகளில் மனம் பதிந்து கொள்ளுதலால்
இவ்வாறு முன்னோர் நூல்களிற் றம் புதுக்கொள்கைகளைப் புகுத்தல்
முறையன்று.
கண்டோம்... (பித்தனோ மறையோன்) என்ன - என்பதும்
பாடம். 40
|
|
|
|