187. பித்தனு மாகப் பின்னும் பேயனு மாக நீயின்  
  றெத்தனை தீங்கு சொன்னா யாதுமற் றவற்றா
                               னாணேன்
அத்தனைக் கென்னை யொன்று மறிந்திலை யாகி
                                 னின்று
வித்தகம் பேச வேண்டா பணிசெய வேண்டு
                               மென்றார்.
41

     (இ-ள்.) வெளிப்படை. (அதுகேட்டு வேதியர்) ‘நான் நீ
சொல்லியபடி பித்தனானாலும் சரி; அதனோடு பேயனானாலும் சரி;
நீ இன்னும் இன்று இவ்வாறு எவ்வளவு தீயமொழிகளைச்
சொன்னபோதிலும் நான் ஒன்றினாலும் வெட்கமடைந்து
நிற்கமாட்டேன். இவ்வளவுக்கும் நீ என் தன்மை ஒன்றும் தெரிந்து
கொள்ளவில்லையானால் வித்தகம் பேசவேண்டாம். யான் இட்ட
பணி செய்ய வேண்டும்' என்று சொன்னார்.

     (வி-ரை.) பித்தன் - பித்துப்பிடித்தவன் - பித்த
மேலீட்டினால் மதிமயக்கம் தரும் நோய் கொண்டவன். “ஒத்தொவ்
வாதன செய்துழல் வாரொரு, பித்தர் காணும் பெருமா னடிகளே“ -
அப்பர்சுவாமிகள் தேவாரம். பின்னும் பேயன் - அதன்மேலும்
பேயாற் பிடிக்கப்பட்டவன்; பேய்க்கோட்பட்டவன். பித்து உள்நோய்.
பேய்க்கோள் - வெளிநோய். பேயன் - பேய்க்கணங்களை
யுடையவன் என்பதும் குறிப்பு.

     எத்தனை தீங்கு சொன்னாய் - தீங்கு
- தீயசொல்.
குறித்தது. சொன்னாய் - சொல்வாயானாலும். எதிர்காலப்
பொருளில் வந்தது. இன்று - நம்பிகள் இன்று பின்னர்ச்
சொல்லப்போகும்சொற்களை எதிர்பார்த்துக் கூறியதுபோன்ற குறிப்பு.

     நாணேன்
- அடியாரிடத்திலே வசவும் அடியும் பட்டுப்
பழகியவராதலின் நாணிலியாயினர். ‘உழைதரு.......கண்டன் - குணமிலி
- மானிடன் - தேய்மதியன் - பழைதரு மாபரன் - என்றென் றவைன்
பழிப்பினையே' (46) எனவும், ‘நின்னைச் சிரிப்பிப்பனே' (48) எனவும்,
‘பிச்சனென் றேசுவனே' (49) எனவும் வரும் நீத்தல் விண்ணப்பத்
திருவாசகங்களும் அன்ன பிற திருவாக்குக்களும் காண்க.

     வித்தகம் - கேலி
- கெட்டித்தனமான பேச்சு. நின்று
பேசுவேண்டா
- பணி செய்து பின்னர் நீ அவ்வாறு பேசலாம்;
அவற்றை நான் ஒப்புவேன் எனப் பின்னர் நம்பிகள் தோழமையால்
அருளும் தேவாரங்களைக் குறித்தவாறு. 41