191.
|
மறைகளா
யினமுன் போற்றி மலர்ப்பதம் பற்றி
நின்ற |
|
|
இறைவனைத்
தொடர்ந்து பற்றி யெழுதுமா
ளோலை
வாங்கி
அறைகழ லண்ண லாளா யந்தணர் செய்த
லென்ன
முறையெனக் கீறி யிட்டான்; முறையிட்டான்
முடிவி
லாதான். |
45 |
(இ-ள்.)
மறைகள்......பற்றி - வேதங்களாயின எல்லாம்
முன்
துதித்துத் தமது மலர்பேன்ற பாதங்களைப் பற்றிக்கொள்ள நின்ற
அவ்விறைவனைத் தொடர்ந்து பற்றிக்கொண்டு; எழுதும் ஆளோலை
வாங்கி - அவர் கையிலிருந்த அடிமையோலையை வலிந்து பிடுங்கி;
ஆளாய்......முறையென - (ஆசில்) அந்தணர்
பிறர்க்கு ஆளாய்ப்
பணி செய்தல் என்ன முறைமையின் வந்தது? என்று சொல்லி;
அறைகழல் அண்ணல் - சத்திக்கின்ற வீரக்கழல்
அணிந்த
பெருமை சான்ற நம்பிகள்; கீறியிட்டான்
- அவ்வோலையைக்
கிழித்துவிட்டனர்; முறையிட்டான் முடிவிலாதான்
-
முடிவில்லாதவனாகிய இறைவன் முறையிடலாயினன்.
(வி-ரை.)
மறைகளாயின......இறைவன் - மறைகளாயின
நான்கும்.....என்ற நம்பிகளது திருவானைக்காத் தேவாரத்தின்
சொற்றொடரும் பொருளும் எடுத்தாண்டனர்.
மறைகள் போற்றிப் பற்றிநின்ற -
என்றது, வேதத்தின்
பகுதிகளாகிய துதி மந்திரங்கள் - பிரமாணங்கள் முதலிய வேத
வசனங்களாலும், வேதாந்தங்களாகிய உபநிடதங்களாலும்
சொல்லப்பெறும் பரமசிவனது சொரூபங்களைத்
தன்னுளடக்கிக்கொண்டிருத்தல். பிரமாணங்கள் அல்லது
அளவைகள் எல்லாவற்றையும் கடந்து நிற்கும் இறைவனை வேதம்
எப்படிச் சொல்லும்? எனில், இறைவனுக்கு உரிய சொரூபம் தடத்தம்
என்ற இரண்டு நிலைகளிலே தடத்த இலக்கணங்களை வேதம்
சொல்லும் என்க.
முன்போற்றி
- ‘நம' சத்தத்தை முன் வைத்தலாலே
நமஸ்கரித்துத்துதித்துப் பொதுவகையால் எல்லாக் கடவுளரையும்
அறிவிக்குமாயினும் அவர்க்குள்ளே முதன்மையில் வைத்துப்
பேசுவதால் பொதுவகையில் இறைவனைப் போற்றுதலாம்.
மலர்ப்பதம் பற்றிநின்றது
- அவ்வாறு பொதுவணக்கமே
யன்றிச் சிறப்பு வகையாலே - நான் சொல்லியவர்க்குள்ளே இவர்
தலைவர் - என்று எடுத்துக் காட்டுதல். அதனாலே இறைவன்
என்றறிவித்தாம். முன்போற்றி, அவ்வாறு போற்றிய பயனால்
சிலம்புகளாய்ப் பற்றப்பட்டு நின்ற - என்பது இராமநாதச் செட்டியார்
உரைக்குறிப்பு.
முறை - முறை - இவையிரண்டும் வெவ்வேறு பொருளில்
வந்தன. என்னமுறை? - இது என்ன முறைமை - நீதி. முறையிட்டான்
- முறை சொன்னான். இச்செய்கை முறையோ என்று ஓலமிட்டுக்
கேட்டான். என்ன முறை என்றார்க்கு இது முடிவிலாதான்
இட்டதாகிய முறை என்றறிவித்தார் என்றலுமாம். என்ன முறை? -
என்ன நியாயம் பற்றி?
முடிவிலாதான் -
கடவுள். எல்லாவற்றையும் கடந்து
நின்றவன் - எல்லையில்லாதவன். காலத்தாலே - இடத்தாலே -
அறிவு இச்சை செயல்களாலே - இன்னும் எல்லாவற்றாலேயும் முடிவு
காணமுடியாதவன்.
அறைகழல் அண்ணல்
- சத்திக்கின்ற கழல் என்னும்
காலணியணிந்த பெருமையுடைய நம்பிகள். மணமகனாதலாலும்,
மன்னவர் திருவுடையராதலாலும் அறைகழலணிந்தார் என்க. இதற்குச்
சத்திக்கின்ற சிலம்பணிந்த சேவடியுடைய சிவபெருமான் என்று
பொருள்கொண்டு அண்ணலுக்கு ஆளாய அவ்வந்தணர் வேறு
பிறர்க்கும் ஆட்செய்தல் என்னமுறை? என்று
பொருளுரைப்பாருமுண்டு. இப்பொருளில் நம்பி என்ற
எழுவாய் தொக்குநின்றது. ஆளாய் அந்தணர் செய்தல் - ஆசில்
அந்தணர் வேறோர் அந்தணர்க்கு ஆளாகச் செய்யும்
இவ்வோலையின் செய்கை.
கீறியிடுதல்
- கிழித்தெறிதல். ‘கீறு கோவண மன்று'
(அமர்நீதி - புரா - 24) முதலிய வழக்குக்கள் காண்க. 45
|