193.
|
என்றலு
நின்ற வைய ‘ரிங்குளே னிருப்புஞ்
சேய்த்த |
|
|
தன்றிந்த
வெண்ணெய் நல்லூ ரதுநிற்க வறத்தா
றின்றி
வன்றிறல் செய்தென் கையி லாவணம் வலிய
வாங்கி
நின்றிவன் கிழித்துத் தானே நிரப்பினா னடிமை'
யென்றான். |
47 |
(இ-ள்.)
என்றலும் - உழைநின்றார் இவ்வாறு கேட்டலும்;
நின்ற.......என்றான் - நின்ற ஐயர் ‘நான் இங்கிருப்பவன்தான்; எனது
இருப்பிடம் நெடுந்தூரமுள்ளதல்ல. இதோ அணிமையில் இருக்கும்
திருவெண்ணெய் நல்லூராகும்; அது நிற்க; நீதி வழி தவறி என்
கையிலிருந்து ஓலையை வலிமை செய்து பிடுங்கிக்
கிழித்ததனாலேயே தான் அடிமை என்ற உண்மையை இவன்
உறுதிப்படுத்திவிட்டான்' என்றார்.
(வி-ரை.)
நின்ற ஐயர் - எல்லாமாய் எங்குமாய் நின்ற
இறைவன். இந்நிலையின் பெருமையை அப்பர் சுவாமிகளருளிய
‘நின்ற திருத்தாண்டக'த் திருப்பதிகத்திற் காண்க. இது இறைவனது
வியாபகநிலை. அவ்வாறு எங்கும் நிற்பான் என்பதும், அங்ஙன
நின்றாலும் உயிர்கள் அவனை அறியா என்பதும்,
‘தாவியவனுடனிருந்தும் காணாத தற்பரன்' (திருக்கோளிலி) என்றும்,
அங்கங்கே நின்றான் என்றும், ‘வேறாய் உடனானான்'
(திருவீழிமிழலை) என்றும் வரும் தேவாரங்களாலறிக. ஐயர்
-
பெருமையை உடையவர். ஐயர்! நீரவதரித்திட - திருஞா -
புரா - 179.
சேய்த்ததன்று
- அங்கங்கேயும் நின்றானாதலின் இருப்பும்
சேய்மை யன்று அணிமையே என்பார் இந்த எனும் அண்மைச்
சுட்டினாற் குறித்தார்.
நிரப்பினான் - நிரூபித்துவிட்டான்.
அடிமை என்ற செய்தியை
முற்ற விளக்கம் செய்துவிட்டான்.
சேயதன்று
- என்பதும் பாடம். 47
|
|
|
|