194.
|
குழைமறை
காதி னானைக் கோதிலா ரூரர்
நோக்கிப் |
|
|
பழையமன்
றாடி போலு மிவனென்று, பண்பின
மிக்க
விழைவுறு மனமும் பொங்க, ‘வெண்ணெய்நல்
லூரா
யேலுன்
பிழைநெறி வழக்கை யாங்கே பேசநீ போதா'
யென்றார். |
48 |
(இ-ள்.)
குழை...நோக்கி - மறைத்த குழைக் காதினையுடைய
வேதியரைக் குற்ற மற்ற நம்பிஆரூரர் பார்த்து; பழைய.....என்று -
இவன் பழைய மன்றாடி போலும் என்று தம்முட்கொண்டு;
விழைவுறும்......என்றார் - முன் அன்பின் தன்மைக்குப் பொருந்திய
மனத்திலே அதனால் நெகிழ்ந்த ஆசை மேன்மேல் அதிகரிக்க ‘ஐயா
நீ திருவெண்ணெய் நல்லூரிலே இருப்பவனானால் நீ மேற்கொண்டு
வந்த இந்தப் பிழை நெறி வழக்கை அங்கே பேசப் போதுவாயாக!'
என்றார்.
(வி-ரை.)
குழைமறை காதினான் - மறைகுழை - மறைந்த
குழை என மாற்றுக. கந்தருவ உருவத்தை மறைத்துக் குழையாக
அமைந்த காதினையுடையவன். இரண்டு கந்திருவர்கள் தம் இசையை
இறைவர் எப்போதும் கேட்குமாறு வரம் பெற்றுக் குழையாக
அமைந்தனர் என்பது வரலாறு. குண்டலத்தை மறைத்து வந்த
ஆண்டவன் என்று உரை கூறுவாருமுண்டு. காதிலணி கண்டிகை
வடித்த குழைதாழ (வரிசை 176) என்றதனால் காதில் ஒரு குழை
திகழ்ந்தது என்க.
பழையமன்றாடி
- வழக்கிடுதலே தொழிலாக உடையவன்.
வழக்கே தொழிலாகக் கைதேர்ந்தவன். மன்றிலே (சபை) ஆடுபவன்
என்றது குறிப்பு. பழையவற்றிற் கெல்லாம் பழைமையானவன்
ஆதலின் பழைய என்று குறிப்பித்தபடி.
விழைவுறு மனமும் பொங்க - ஆசை கொள்ளும்
மனம்
கோபத்தாற் பொங்க - என்றுரைப்பாரு முண்டு. ‘விற் பிடித்து,
நீர்கிழிய வெய்த வடுப்போல மாறுமே, சீரொழுகு சான்றோர் சினம்'
என்றபடி உழை நின்றார் விலக்கியவுடன் மாறி விட்டதாதலின்
இன்னும் சினம் மேலும் பொங்குவது இலக்கணமாகாது.
வெண்ணெய் நல்லூருக்குப் போதாய் என்று வழக்கிற்கு
அறைகூவி ஆரூரர் முற்பட்டு அழைத்தது, வேறுவேறு இடங்களிற்
பிறழப்பேசினும் ஒருவன் தன்னை அறிந்த ஊரிலே பேசத் துணியான்
என்ற நியாயம் பற்றி.
பிழை நெறி வழக்கு
- (1) பிழையாகிய வழியிலேபட்ட
வழக்கு. (2) உயிர்களை எல்லாம் அடிமையாக்கிப் பிழைக்கச்
செய்யுமாறு வழிகாட்டும் வழக்கு. பிழைக்கச் செய்தல்
- உய்யச்
செய்தல். பிழைக்க வைக்கும் வழி.
விழைவுறு மனம் - முன் பதிந்து கிடந்த
அன்பு இப்போது
அவர் ஆட்கொள்ள வந்த கருணையினாலே தாக்குண்டுப் பொங்கி
எழுந்த மனம் என்க.
ஆங்கே பேச - வழக்கு விசாரிக்குமிடம்
வழக்கிடப்பட்டார்
இருக்குமிடமாம் என்பது இக்காலத்துச் சட்டம். அதுபோலவே
அந்நாளிலும் நியதி. அப்படி யிருந்தும் வழக்கிடப்பட்டார்
இசைந்தால் வழக்குத் தொடர்ந்தவன் (வாதி) இருக்கும் இடத்தும்
விசாரிக்கலா மென்பது இதனாற் புலனாகும். 48
|
|
|
|