| 196. | 
          செல்லுநான் 
            மறையோன் றன்பின் றிரிமுகக்  
                                      காந்தஞ் 
            சேர்ந்த | 
            | 
         
         
          |   | 
          வல்லிரும் 
            பணையு மாபோல் வள்ளலுங் கடிது  
                                           சென்றான் 
            எல்லையில் சுற்றத் தாரு மிதுவென்னா மென்று  
                                             செல்ல 
            நல்லவந் தணர்கள் வாழும் வெண்ணெய்நல்  
                                       
            லூரை நண்ணி, | 
          50 | 
         
       
       
           (இ-ள்.) 
      செல்லும்.....சென்றான் - அவ்வாறு செல்லும் 
       
      வேதியர் பின்னே வேறுபடுத்துகின்ற முகமுடைய காந்தத்தின் பின்னர்  
      இரும்பு இழுத்துச் செலுத்தப்பட்டு அணைவதுபோல நம்பி ஆரூரரும்  
      (தம் வசமின்றியே) விரைவிற் சென்றனர்; எல்லையில்.......செல்ல -  
      கூடியிருந்த சுற்றத்தார்களும் ‘இது யாதாய் முடிவதோ!' என்ற  
      ஐயத்துடன் தொடர்ந்து வர; நல்ல......நண்ணி - நல்ல அந்தணர்கள்  
      வாழுதற்கிடமாகிய திருவெண்ணெய்நல்லூரை அடைந்து. 
       
           (வி-ரை.) 
      இதுவும் வரும் பாட்டும் ஒரு முடிபு பெற்றன.  
      நாதனாம் மறையோன் - வெண்ணெய்நல்லூரை நண்ணி - அவைமுன்  
      சென்று - இது என் முறைப்பாடு - என்றான் என்க. 
       
           திரிமுகக் காந்தம் 
      - திரிக்கும் முகத்தையுடைய காந்தம்.  
      இழுக்கும் சத்தியைத் தன் முகத்தே கொண்டது. இரும்புக்குள்ளே  
      முன்னர்த் தொக்கு நின்ற தொரு சத்தியைப் பிரித்து, அசைவு  
      பெற்றுத் தன்முகமாக வரும் செயலை உண்டாக்கி. அதன் முன்  
      நிலையைத் திரிக்கும் முகமுடைமையின் இப்பெயர் பெற்றது.  
      காந்தத்திலே முன் விரவியிருந்த இழுக்கும் சத்தியும், இரும்பிலே  
      முன் விரவியிருந்த இழுக்கப்பெறும் சத்தியும் பிரித்து எதிரெதிர்  
      ஒருமுகமாகத் தொழிற்பட்டு நெருங்கிவரும். இதனை Magnetism  
      என்பது பௌதிக சாத்திரம். இதன் விவரம் அந்தச் சாத்திரங்களுட்  
      காண்க. 
       
           காந்தம் சேர்ந்த வல்இரும்பு 
      அணையுமாபோல் - முன்னே  
      வலிதாய் அசையாதிருந்த இரும்பு காந்தத்தைச் சேர்ந்தவுடன்  
      அணைவதுபோல். அணைவது இரும்பின் தொழில். தானாய் அணையாது காந்தத்தினால் இழுக்கப்படுதலின் 
      அணையும் என்க. 
       
           கடிது சென்றான் 
      - தானே செல்லாது வேதியரால்  
      இழுக்கப்பெற்று விரைந்து சென்றனர். 
       
           நல்ல அந்தணர் 
      - முன் பாட்டிலே புனித நான்மறையோர்  
      என்றதற்கேற்ப இங்கும் இவ்வாறு கூறினார். 
       
           திருமுகக் காந்தம் 
      - என்பதும், நாதநான் - என்பதும்  
      பாடங்களாம்.   50  
   |  
	 
	 |   
				
				 | 
				 
			 
			 |