| 197. |
வேதபா
ரகரின் மிக்கார் விளங்குபே ரவைமுன்
சென்று |
|
| |
நாதனா
மறையோன் ‘சொல்லு நாவலூ ராரூ
ரன்றான்
காதலென் னடியா னென்னக் காட்டிய வோலை
கீறி
மூதறி வீர்முன் போந்தா னிதுமற்றென் முறைப்பா'
டென்றான். |
51 |
(இ-ள்.)
வேதபாரகரின்...சென்று - வேதியர்களிற்
சிறந்தவர்கள் கூடிவிளங்கிய பெருஞ்சபையின் முன்னே போய்;
நாதனாம் மறையோன் - தலைவராகிய வேதியர்; ‘சொல்லும்
நாவலூர்.....முறைப்பாடு' என்றான் - யாவரும் பாராட்டுதற்குரிய
திருநாவலூரில் வந்த நம்பி ஆரூரன் தான் எனது விருப்பமுடைய
அடிமை என்பதற்குச் சான்று காட்டிய ஓலையைக் கிழித்துவிட்டுப்
பெரிய அறிவுடையீராகிய உங்கள் முன் போந்துள்ளான்; இதுவே
எனது முறைப்பாடாகும்' என்று சொன்னார்.
(வி-ரை.)
வேதபாரகர் - வேதம் வல்ல சிறந்தவர்கள்;
(அவரின்) மிக்கார் - அவர்களிலும் மிக்க சிறப்புடையவர்கள்.
பேரவை - பெருஞ்சபை; நீதி மன்றம். நீதிச்
சபையிலே வீற்றிருந்து
வழக்கு விசாரிக்கும் உரிமையுடையவர்கள். அவ்வூரவரால்
தெரிந்தெடுக்கப்பெற்றவர்களாதலின் வேதபாரகரின் மிக்காராயினர்.
இது முன்னாளில் நமது நாட்டுக் கிராமச் சபைகளின் அமைப்பு.
இச்சபைகள் அங்கங்கு நீதி வழங்கல் முதலிய பல பொதுக்
காரியங்களையும் செய்யும் உரிமை பெற்றிருந்தன என்பது
கல்வெட்டுக்களாலும் சரிதங்களாலும் அறியும் செய்தியாம். இத்தகைய கிராமச் சபைகளைப்
பற்றித் திருநீலகண்ட நாயனார் புராணம் -
சண்டீச நாயனார் புராணம் முதலியவைகளிலும் காண்க.1 இவை
இப்போது அருகினமை வருந்தத்தக்கது.
நாதனாம் மறையோன்
- நாத தத்துவ நிலையனாய்
நாதத்திலிருந்து தோன்றிய வேதங்களில் துதிக்கப்பெறுபவன்.
பேரவையில் உள்ளார் வேதபாரகரின் மிக்காராயினும், இவர்
நாதத்திற்கும் வேதத்திற்கும் உடையவராதலின் இவர் வழக்கே
அவர்க்கும் உடன்பாடாய் முடியுமென்பது குறிப்பு.
சொல்லும் நாவலூர் ஆரூரன் - யாவராலும்
எடுத்துச்
சொல்லப்பெற்ற நாவலூரில் நம்பிஆரூரன். மறையோன் சொல்லும்
என்று கூட்டி மறையோன் சொல்வானாயினன் என்று
பொருளுரைப்பாரு முண்டு. பின்னர் என்றான் என்ற வினைமுற்றைக்
கொண்டு முடிந்திருத்தலின் அது பொருந்தாதென்க.
காதல் என் அடியான்
- (1) நான் காதல் கொண்டவன். (2)
இவன் காதலிக் காமலிருந்தும் என்னால் இச்சிக்கப்பெற்றவன். (3)
முன் என்மேற் காதல் கொண்டு மாலையும் நீறும் எடுத்து அணைந்த
அடியான் எனப் பல பொருளும் பெறுவது காண்க.
என்னக் காட்டிய - என்ற சொல்லிற்கு
ஆதரவாய்க்காட்டிய
- என்று காட்டிய.
போந்தான் - இங்கே வழக்குப் பேச அவனே
என்னை
அழைத்துப் போந்தான். ‘வழக்கை ஆங்கே பேசநீ போதாய்' என்று
மேலே கூறினாராதலின் அதற்கேற்பப் ‘போந்தான்' என்றார். நானாக
உங்கள்முன் வரவில்லை. அவன் இழுக்கவே நான் இங்கு வந்தேன்
என்ற குறிப்பு.
முறைப்பாடு
- முறையிடும் பொருள். நவீனர் (Complaint -
Plaint) பிராது என்பர்.
அடியானாக
- என்பதும் பாடம். 51
1சேக்கிழார்
70-வது பக்கம் பார்க்க.
|
|
|
|