20.
|
வேதநான்
முகன்மால் புரந்தரன் முதலாம்
விண்ணவ ரெண்ணிலார் மற்றும்
|
|
|
காதலான்
மிடைந்த முதற்பெருந் தடையாங்
கதிர்மணிக் கோபுரத் துள்ளான்
பூதவே தாளப் பெருங்கண நாதர்
போற்றிடப் பொதுவினின் றாடும்
நாதனா ராதி தேவனார் கோயி
னாயக னந்தியெம் பெருமான். |
10 |
(இ-ள்.)
வேதநான்முகன் ... உள்ளார் - (மேலே கூறியபடி)
பிரமன் விட்டுணு இந்திரன் முதலிய தேவர்களும் மற்றும்
எண்ணில்லாத முனிவர் முதலியோர்களும் வரம்பெறும் ஆசையுடன்
நெருங்கிக் கூடித் தடைபட்டு வெளியே காத்திருக்கும் முதற்
றிருவாயிலின் கோபுரத் துவாரத்திலே வீற்றிருக்கின்றான்; பூதம்
...
போற்றிட - சிவ பூதங்களும் வேதாளங்களும் முதலிய கணநாதர்கள்
துதிக்க; பொதுவினின்று ... பெருமான் - அம்பலத்தே
நித்தமாகிய
திருக்கூத்து ஆடும் நாதனும் முதற்கடவுளும் ஆகிய
சிவபெருமானுடைய திருக்கோயிலின் அதிகாரியாகிய நந்தி
எம்பெருமான்.
(வி-ரை.)
எம்பெருமான் - திருநந்திதேவர்.ஆதிதேவனார்
கோயில் நாயகன் நந்தியெம்பெருமான் முதற் பெருந்தடையாம்
கதிர்மணிக் கோபுரத்துப் போற்றி உள்ளான் என்று கூட்டிப் பொருள்
கூறுக. உள்ளார்களும் கணநாதர்களும் போற்றிட ... ஆடும் என்று
கூட்டி, நாயகன் நந்திப்பெருமானாவர் எனவும் பொருள் உரைப்பர்.
இவ்விரு பொருளுமன்றி இப்பாட்டைக் குளகமாகக்கொண்டு
கோபுரத்து உள்ளார்கள் யாவர் எனின் - நாயகன் நந்தி
எம்பெருமானும் (வரும்பாட்டிற் காணும்) கண்ணரும் தோளருமாகிய
அநேகர் அடியார்களுமாம் - என நந்திதேவரும் அடியார்களும்
உள்ளார் என்று முடித்து உரைத்தலும் ஆம்.
வேத
நான்முகன் - வேதங்களை ஒதுபவன். வேதமுதல்வன்
என்பதன்று.
மிடைந்த முதற் பெருந்தடை
- நந்திதேவருடைய
ஆணைக்குட்பட்டு நின்று அவரது உத்தரவையும் சிவபெருமானது
சேவைக்குரிய காலத்தையும் எதிர் பார்த்தவர்களாய்க் காத்துக்
கொண்டு நெருங்கிக் கூடியிருக்கும் முதல் திருவாயில். இவ்வாறு
பற்பலசமயங்களில் தங்கள் தங்கள் கர்மானுபவம் தீரும்வரை
வெகுகாலம் காத்துக்கொண்டிருந்தார்கள் தேவர்கள் என்பது
கந்தபுராணத்துக் காண்க.
சிவபெருமானது திருக்கோயில்களில் முதற் கோபுரத்
திருவாயிலில் திருநந்திதேவர் எழுந்தருளி யிருப்பது காணலாம்.
அதன் அமைப்பும் இதனால் விளங்கும்.
காதல் - மேற்பாட்டிற் சொன்னபடி தத்தம் பதங்களுக்குள்ள
வரம்பெறும் காதல்.
நாயகன்
- கோயில் அதிகாரம் பெற்றவர். நந்தி
எம்பெருமான் - நந்திதேவராகிய எமது பெருமான்.
சிவகணங்களுக்கு முதல்வராய்க், கோயில் அதிகாரியாய்ச்,
சிவபெருமானாகிய சர்வாதி குருவினிடத்துச் சிவாகமம்
முதலிய எல்லாச் சாத்திரங்களையும் கேட்ட முதற்சீடராய்,
அவ்வகையில் தாம்கேட்ட உண்மைப் பொருளை உலகிற்கு
உபகரிக்கத் திருக்கயிலாய பரம்பரை ஆசாரியர்களுக்கு
முதலாசிரியராய் விளங்குபவர்.
“நந்தி
யருள்பெற்ற நாதரை நாடிடின்
நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி
மன்று தொழுத பதஞ்சலி வியாக்ரமர்
என்றிவ ரென்னோ டெண்மரு மாமே” |
என்ற திருமூலர்
திருமந்திரமும், திருநந்தி தேவர் - சனற்குமாரர்
-சத்தியஞான தரிசினிகள் - பரஞ்சோதியார் - மெய்கண்ட தேவர் -
என்ற சுத்தாத்து வித சைவ சித்தாந்த சந்தான பரம்பரை விளக்கமும்
இங்கே அறியத்தக்கன.
“நங்கள் நாதனாம் நந்தி” - (திருமலை
- 35) என்று குருமரபு விளக்கி ஆசிரியர் பின்னர்க் கூறுவதும் காண்க.
நந்தி -
இது சிவபெருமானது பெயர். “நந்தி நாமம்
நமச்சிவாய” என்பன வாதி தேவாரங்கள் காண்க. திருமூலர் இறைவனை நந்தி என்றே
கூறும் மரபும் காண்க. “நந்தி யருளாலே”
“நந்தி அருள் பெற்ற” “நந்தி யிணையடி” என்பன திருமந்திரங்கள்.
இப்பெயர் அவரது சீடர்களில் முதல்வராய்க் கணநாயகராய்க்
கோயிற் றலைமைப் பணியாளராய் உள்ள காரணம்பற்றித் திருநந்தி
தேவருக்கு ஆயிற்று.
நந்திதேவர்
நெற்றிக்கண், நான்கு தோள், நீலகண்டம் முதலியவற்றுடன் சிவரூபம் பெற்றவராய்க்
கையிலே உடைவாளும்
பிரம்பும் தாங்கியவராய்த் திருக்கோயில் அதிகாரத்துடன் நிற்கும்
முதல் அடியார், இடபதேவராவார் தருமதேவதை. திரிபுர
சங்காரத்திலே திருமாலும் இடப வடிவங்கொண்டு
சிவபெருமானைத் தாங்கினார். இடபமே அடியார்களுக்கு அருள்புரிய
இறைவன் எழுந்தருளும்போதெல்லாம் உகந்த ஊர்தியாகும்.
நந்தி
- துவிதியசம்பு; சம்புவுக்கு ஒப்பானவன் என்றும் கூறுப. நந்தி
- நந்தம் நிறைதல்; எல்லா ஞானத்தாலும் நிறைந்தவர்
நந்தி. 10
|