202.
|
‘ஆட்சியி
லாவ ணத்தி லன்றிமற் றயலார் தங்கள் |
|
|
காட்சியின்
மூன்றி லொன்றுங் காட்டுவா' யென்ன,
முன்னே
மூட்சியிற் கிழித்த வோலை படியோலை; மூல
வோலை
மாட்சியிற் காட்ட வைத்தே' னென்றனன் மாயை
வல்லான். |
56 |
(இ-ள்.)
‘ஆட்சியில்.........காட்டுவாய்' என்ன அவ்வாறு
நிரூபிக்க வேண்டுமானால் அதற்கு ஆட்சி - ஆவணம் -
அயலார்களது காட்சி என்ற மூன்றுவகைச் சாட்சியங்களில் ஒன்று
காட்டவேண்டும்' என்று சொல்ல; முன்னே.......வல்லான் - மாயை
வல்லானாகிய வேதியர் (அந்த மூன்று வகையில் நான் காட்ட
நின்றது ஆவணமே; ஆனால்) முன்னே மணப்பந்தரிற் கோபத்தால்
ஆரூரன் கிழித்தது படியோலையே; மூலவோலையை நீதிச்சபைமுன்
காட்டுதற்காகச் சேமமாய் வைத்துள்ளேன்' என்றார்.
(வி-ரை.)
ஆட்சி - ஆவணம் - காட்சி - என்பன
மூன்றும் அக்காலத்தில் தமிழர் நீதிமுறையிற் பொருள்நிச்சயிக்க
உதவும் மூவகைச் சாட்சியங்களாம். 1இது முதல் வரிசை 209-ம்
பாட்டு வரை அந்நாள் நீதிச் சபையார் வழக்கு விசாரித்து முடிவு
செய்யும் நீதிமுறைகள் செவ்வனே உணர்த்தப்பெற்றன. அந்தமுறை
எவ்வாற்றானும் இந்நாள் மிக உயர்வாகக் கருதப்படும் நமது நீதி
முறைக்கு ஒரு சிறிதும் பின்னிடாமையும் காணத்தக்கது. அதனினும்
பலவகையில் உயர்ந்து காணப்பெறும். இந்நாள் நீதிமுறையிற் காணும்
பொருட்செலவு . காலநீட்டிப்பு - முதலிய பல
குறைகளும் அந்நாள்
நீதிமுறையில் நேரிடாமையும் காணலாம்.
ஆட்சி -
அடிப்பட்ட சான்றோரிடத்துத் தொன்றுதொட்டு
வழங்கி வருவதும், அதுகாரணம்பற்றி யாவராலும் ஒப்புக்கொள்ளப்
பெறுவதுமான உலக வழக்கு. இவ்வழக்குக்கு ஆட்சியில்லை என்று
இந்த மாநிலத்திலில்லை (வரிசை 198) என முன்னரே
கூறினார்களேனும், வழக்குஏற்றும் முறைகளைத்தெரிவிக்கும் நியாயம்
பற்றி இங்குப் பொது வகையில் உள்ள எல்லாச் சாட்சியங்களையும்
கூறியவாறு.
ஆவணம் - வழக்கின் பகுதிகளைக் காட்டக்கூடிய
விவரங்கள் எழுதப்பெற்ற ஓலைகள். இதனையே - இசைவினால்
எழுதும் ஓலை - என்றும், ஓலை தந்தைதன் தந்தை நேர்ந்தது
என்றும் - முன்னர்க் குறித்தனர்.
மற்று அயலார் தங்கள்
காட்சி - வழக்கின் பகுதிகளிற்
பிறர் தாங்கண்டதைச் சொல்வது - இதனை ஆவணச் சாட்சியின்
(documentary evidence) வேறுபிரித்து வாய்மொழிச் சாட்சி என்பர்
(oral evidence) நவீனர். தாம் தாம் கண்டதைச் சொல்வதே
இவ்வகைச் சாட்சியாம் என்னக் காட்சி என இதற்குப் பெயர்
வழங்கினர். ஒருவர் சொல்லக் கேட்டது சாட்சியாகாதென்பதாம்.
(Hearsay is not evidence).
மூட்சி
- மூண்ட கோபம். ஆரம்பம் - தொடக்கம் -
என்றலுமாம்.
படிஓலை - பிறிது ஒன்றினைப் பார்த்து
அதன்படி எடுத்து
எழுதிக்கொண்ட பிரதி ஓலை. (copy - நகல் என்பர்). மூலஓலை
-
முதலில் எழுதி முடித்துக் கையொப்பமிட்ட ஆதரவு - (original -
அசல் என்பர்).
மாட்சி -
நீதிமன்ற முன்னிலை. Hon'ble court - your
Honour என்பர் இந்நாள் வழக்கர்.
இல் - ஆட்சியில் - ஆவணத்தில் - காட்சியில் -
என்ற
மூன்றிடத்தும் தனித்தனி எண்ணுப் பொருளில் வந்தன.
ஓலை - ஆட்சி - ஆவணம் - காட்சி - மூன்றில் ஒன்று
காட்டுக என்ற சபையோர் முன் வேதியர் ‘முன்னரே வந்தவாறு
இசைவேயன்றோ?' என்றதனால் இதற்கு ஆட்சியில்லை; தந்தைதன்
தந்தை நேர்ந்ததென் றமையால் நீண்ட காலத்துக்கு முற்பட்டமையின்
அயலார் காட்சியுமில்லை; ஆவணம் ஒன்றே எஞ்சியது; அதனைக்
கொண்டு என் வழக்கை உம்முன் ஏற்றப்போகிறேன்' என்று குறித்துக்
காட்டித் தொடங்கிக்கொண்டார். அவ்வோலைதானும் கிழிபட்டதே
எனச் சபையார் ஐயப்படுவர் எனஉட்கொண்டு ‘இவன் கிழித்த ஓலை
படியோலை' என்று கூறி மேல் செல்கின்றார். அன்றியும்
மூலஓலைகளே நீதிசபையில் வேண்டப்படுவனவேயன்றிப்
படியோலையல்ல என்ற முறைமையும் குறித்தவாறு. Direct evidence
- என்பர் நவீனர்.
வைத்தேன்
- சேமித்து வைத்தேன். கருத்தா ஆதலின்
நியமித்தேன் என்ற குறிப்புமாம். ‘விண்ணு மண்ணகம் முழுதும்
யாவையும் வைச்சு வாங்குவாய்' என்ற திருவாசகம் காண்க. ‘எல்லாந்
தான்வைத்து வாங்க வல்லான்' - திருநீல கண்ட நாயனார் புராணம்
(20) - என்பதும் காண்க.
மாயை வல்லான்
- மூலவோலையைப்பற்றி முன்னர்ச்
சொல்லாது சபையார் முன்பு புதிதாய்க் கற்பித்துச் சொன்னார் என்ற
பிழை வாராமை கருதி, ஆதியில் மூலவோலை காட்டி நீ
அடிமையாதல், சாதிப்பன்......... (வரிசை 95) என்று முன்னரே
புத்தூரில் மணப்பந்தரிலிருந்து வெளிவரும்போதே
எடுத்துக்கொண்டமை காண்க. உயிர்களை ஊட்டும்பொருட்டு
அவைகட்கு வேண்டியவாறே, மாயையிலிருந்து எல்லாப்
புவனங்களையும் படைப்பவன் இது செய்தல்வியப்பன்று என்று
குறிப்பார் மாயை வல்லான் என்றார். யாவரையும் தனது மாயையினுட்
படச் செய்து தான் அதிற்படாமல் மாயாதீதனாய் விளங்குதலால்
வல்லான் என்றார். 56
1 சேக்கிழார்
64 முதல் 70 பக்கங்களைப் பார்க்க.
|
|
|
|