203.
|
‘வல்லையேற்
காட்டிங்' கென்ன ‘மறையவன்
வலிசெய்
யாமற் |
|
|
சொல்லநீர்
வல்லீ ராகிற் காட்டுவே' னென்று
சொல்லச்
செல்வநான் மறையோர் ‘நாங்க டீங்குற
வொட்டோ'
மென்றார்;
அல்லறீர்த் தாள நின்றா ராவணங் கொண்டு
சென்றார். |
57 |
(இ-ள்.)
‘வல்லையேல்........‘என்ன - ‘அவ்வாறு மூலவோலை
காட்ட முடியுமானால் இங்குக் காட்டுக' என்றலும்;
மறையவன்.........சொல்ல - ‘நம்பியாரூரன் முன்போல் வலாற்காரம்
செய்து பழுது செய்துவிடாமலிருக்கும்படி நீங்கள் சொல்ல
வல்லீரானால் காட்டுவேன்' என்று சொல்ல;
நான்மறையோர்.........என்றார் - திருமறையோர்களாகிய சபையோர்
‘நாங்கள் முன்புபோல் இங்குச் சாட்சி யோலைக்குத்
தீங்குவர
விடமாட்டோம்' என்று உறுதி கூறினர். அல்லல்......சென்றார் -
துன்பந் தீர்த்துத் தீர்த்துத் தடுத்தாட்கொள்ள என்று கொண்டு நின்ற
இறைவனார் ஓலையைக் கையிலே எடுத்துக்கொண்டு சபையோரின்
முன்னே சென்றார்.
(வி-ரை.)
மறையோர் - என்ன - ஆளநின்றார் - என்று
சொல்ல - (அவர்கள்) என்றார்; (இவர்) - சென்றார் என்று முடிக்க.
வல்லையேற் காட்டு இங்கு
- உன்னால் முடியுமானால்
இங்குக் காட்டுக. முடியாதென்பது உட்குறிப்பு. முன்பாட்டிற்
குறித்தபடி அவன் வல்லானாயினும் இவர்கள் அவனது வன்மையை
யறியாது வல்லையேல் என்றார் என்பது குறிப்பு.
என்ன - சொல்ல - என்ற வினைகளுக்கு மறையோர் -
நின்றார் - என்னும் எழுவாய்கள் முறையே பின்னர் வந்தன.
மறையவன்
- நம்பி ஆரூரன். வந்தவேதியர்
என்றுரைப்பாருமுளர்.
வலிசெய்யாமல் - முன்போல வலிந்து பற்றிக்
கிழித்துவிடாமல்.
வல்லீர் ஆகில்
- அவன் அரசர் காதல்மகன் ஆதலின்
நீங்கள் சொல்லவல்லீர் ஆவிரோ என்று ஐயப்பட்டார் போன்று -
ஆகில் என்றார். அவர்கள் வல்லையேல் என்றதற்கேற்ப இவரும்
வல்லீராகில் என்று சுட்டினாராகும்.
தீங்குற வொட்டோம் - சொல்வது மட்டுமல்ல;
மற்றும்
எவ்வாற்றானும் தீமை நிகழாமற் றடுத்துப் பாதுகாப்போம் என்று
உறுதி கூறியவாறு.
அல்லல் - சிவபிரானது செய்யசேவடி நீங்கும்
சிறுமையுட்பட்டு, மையன் மானுடமாய் மயங்கி, உலகிலே உழல,
மணத்திற் கமைந்துநின்ற துன்பம்.
தீர்த்து ஆள நின்றான் - தீர்த்தல்
- இங்கு வாராமற்
றடுத்தல் என்ற பொருளில் வந்தது. கயிலையில் அருள்செய்த
சாலுமொழியால் அந்த அல்லல் வாராமல் தடுத்தாட்கொள்ள வந்து
நின்றவன். உகிலே எல்லா உயிர்கட்கும் பிறவித் துன்பம் தீர்த்து
ஆள்வதற் கமைந்துநின்ற இறைவன் என்பதும்குறிப்பு. வினையிலே
கிடந்தேனைப் புகுந்து நின்று போதுநான் வினைக்கேடன்.........
என்ற திருவாசகக் கருத்துங் காண்க.
சென்றான்
- தான் நின்று முறையிட்ட தானத்தைப் பெயர்ந்து
சபையார் முன்பு ஓலை காட்டச் சென்றான்.
செல்வ நான்மறையோர்
- கல்வியுடைமை பொருளுடைமை
என்றிரண்டு செல்வங்களிலும் உயர்ந்தோராதலின்
பொருளாசையாலேனும், அறியாமையாலேனும், பிழைபடத்
தீர்ப்புச்சொல்லாதவர் என்றகுறிப்பு. செல்வ முயர்கின்ற
செல்வர்வாழ்தில்லை என்ற தேவாரமும் காண்க. 57
|
|
|
|