204.
|
இருண்மறை
மிடற்றோன் கையி லோலைகண்
டவையோ
ரேவ |
|
|
அருள்பெறு
கரணத் தானு மாவணந் தொழுது
வாங்கிச்
சுருள்பெறு மடியை நீக்கி விரித்ததன் றொன்மை
நோக்கித்
தெருள்பெறு சபையோர் கேட்ப வாசகஞ் செப்பு
கின்றான்.
|
58 |
(இ-ள்.) இருள்மறை......ஏவ - திருநீலகண்டத்தை
மறைத்து
வந்தவனாகிய வேதியன் கையில் எடுத்து நீட்டிய ஓலையைச்
சபையோர் கண்டு ஏவினதனாலே; அருள்பெறு.....செப்புகின்றான் -
சபையில் உள்ள அருளைப்பெற்ற கரணத்தானும் அந்த ஆவணத்தை
உரியவாறு தொழுது வாங்கி, அதனை வைத்துச் சுருட்டியிருந்த
உறையை எடுத்துச், சுருளோலையை விரித்து முதலில் அதன்
பழைமையைப் பரிசோதித்து அறிந்துகொண்டு, அறிவு
பெற்றவர்களாகிய சபையினர் யாவரும் கேட்கும்படி அதன்
வாசகத்தைப் பின் வருமாறு படித்துச் சொல்வானாயினன்.
(வி-ரை.)
இருள் - திருநீலகண்டம். இருண்ட நிறம்
விடத்திற்காகி அதன்பின் அது தங்கிய கண்டத்திற்காகியது.
இருமடியாகுபெயர் என்பர். இருள்மறைமிடற்றேன்
-
திருநீலகண்டத்தை மறைத்த மிடற்றொடும் வந்த வேதியன்.
அருள்பெறு
கரணத்தான் - கரணத்தான் - சருணீகன் -
கணக்கன் என்பர். சபையாரின் உத்தரவின்படி அதன் காரியங்களைப்
பார்க்கும் கணக்கன்.
இவர்கள் பணிக்க எழுதினேன் இவ்வூர்க் காரணத்தான்
சிவதாசன் ஆட்கொண் டானான நூற்றுநாற்பத் தெண்மனேன் -
S.I.I. Vol. VII. No. 44
(இந் நாளில் Clerk of the court - Clerk of
the crown
என்பதுபோல). கரணத்தான் இறைவன் தந்த இந்த ஓலையைக்
கையில் வாங்கவும் பார்க்கவும் வாசிக்கவும் திருவருட்பேறு பெற்ற
உட்கரண புறக்கரணங்களை உடையவன் என்பதும் குறிப்பு.
ஆதலின் அருள்பெறு என்றார்.
தொழுது வாங்குதல் - அந்நாள் நீதித்தலத்தார்
வழக்கர்களிடம் நடந்து கொண்ட ஒழுக்க முறைகளில் ஒன்று.
சுருள்பெறுமடியை நீக்கி - ஆவணமாகிய -
(ஆதரவாகிய)
ஓலைச்சுருளைக் காப்பாற்றுதற்கு அதன்மேல் சுருட்டிக் கோத்த
உறையாகிய மற்றொரு ஓலைச்சுருளை எடுத்து.
அதன் தொன்மை நோக்கி - இவர் சொல்கிறபடி
அது
பழைமையான ஓலைதானா என்பதை அதன் இயல்பினைச்
சோதித்தறிந்து. பழைமை நோக்குதல்.1
தெருள்பெறு சபையோர் - இந்த அருள்வழக்கை
ஒக்கத்
தீர்ப்பதற்குரிய அறிவை இறைவனால் தரப்பெற்றவர்களாகிய
சபையினர்.
வாசகம் - குறித்த ஒரு பொருளை வாச்சியமாக
உட்கொண்டு
நிற்பது. உயிர்கள் இறைவனுக்கு எப்பிறப்பிலும் வீட்டிலும்
அடிமைகளே என்ற உண்மைப் பொருளை வாச்சியமாகக்
கொண்டிருத்தலின் இதுவே வாசகம் என்ற சொல்லிற்குயர்ந்த உரிய
பொருளாம்.
விரித்தனன் - என்பதும் பாடம். 58
1 To satisfy
about its antiquity - to see if it is a genuine
ancient document என்பர் நவீனர்.
|
|
|
|