210.
|
திருமிகு
மறையோர் நின்ற செழுமறை முனியை
நோக்கி
|
|
|
‘யுருமுனி!
நீமுன் காட்டு மாவண மதனி லெங்கள்
பெருமைசேர் பதியே யாகப் பேசிய துனக்கிவ்
வூரில்
வருமுறை மனையு நீடு வாழ்க்கையுங் காட்டு'
கென்றார். |
64 |
(இ-ள்.)
திருமிகு.......நோக்கி - அதன்பின் திருமிக்க
சபையோர் நின்ற வேதியரைப் பார்த்து; ‘அருமுனி!......காட்டுக'
என்றார் - அரிய முனியே! நீ முன்னே காட்டிய ஓலையில் எங்கள்
பெருமையுடைய திருவெண்ணெய் நல்லூரே உனது ஊராக
எழுதியிருந்தது; அஃதுண்மையாயின் இவ்வூரில் உனக்குப்
பழைமையாக வரும் வீட்டையும், தொன்றுதொட்டு நீண்ட
வாழ்க்கையையும் காட்டுவாயாக!, என்று கேட்டார்கள்.
(வி-ரை.)
நம்பி ஆரூரர் சபையினர் தீர்ப்புக்கு உட்பட்டு
அமைந்து நின்றபின் தமது தீர்ப்பு நடைமுறைக்கு வருவதொன்றாயின்
இவ்வேதியருக்கு இவ்வூரில் வீடும் வாழ்க்கையும் வேண்டுமே? அவை
யிருந்தாலன்றோ அடிமையிருத்தலும் கூடும்? நம்பியும் இவருக்கு
ஆட்செய்ய இயலும்; இல்லையேல் தமது தீர்ப்பு (நிறைவேற்ற)
இயலாததாய்க் கழியும்; கழியின், நடைபெறும் ஆட்சிக்கு மாறாகிய
தம்தீர்ப்பைத் தாமே திருத்தவும் கூடும்; நம்பிகள் இந்தச்
சழக்கினின்று ஏறவும் கூடும் - என்ற குறிப்புக்களுடன்
இவ்வாறு கேட்டனர் போலும்.
திருமிகு மறையோர்
- ஈசுரத்தன்மை மிகும் பக்குவமுடைய
மறையோர், வேதியனாய் வந்தவனே இறைவன் என்று விரைவிற்
கண்டு அனுபவிக்கும் பேறு பெற நின்றவர்கள் ஆதலின் திருமிகும்
என்றார். ‘செல்வமுயர்கின்ற செல்வர்' என்பது தேவாரம்.
நின்ற செழுமறை முனி - (1) தமது வழக்கு
வென்று செழித்த
முகத்துடன் நின்ற மறை முனிவர். (2) முன்பாட்டிலே வெல்லப்பெற்று
நின்றார் என்ற நம்பிகள் போல, வென்று நின்ற. (3) சபையோரிலும்
யாவரிலும் புகுந்து இயக்கி நின்ற. எங்கள் பதியே உமக்குப் பதியாக
ஆவணத்திற் பேசப்பெற்றது என்று கூட்டுக.
பெருமைசேர் பதி - திருவெண்ணெய் நல்லூர்.
சிவபெருமான்
வெளிப்பட வீற்றிருக்கும் பெருமை. பெருமைசோ்
-
இத்திருத்தலத்தைத் தேடிச் சென்று பெருமை சேர்ந்தது என்க.
இறைவனாகிய நீரே கிழ வேதியராய் வந்து நியாயம் தேடி அடைந்த
பெருமை இன்று சேர்ந்தது என்ற குறிப்புமாம். எங்கள் பதி
-
அந்தணர்க்குள்ள தமது ஊர் அபிமானத்தை விளக்கும்.
உனக்கு
- உனது. எங்கள் பதியே உனதுபதியாக எனவும்;
இவ்வூரில் உனக்கு மனையும் வாழ்க்கையும் காட்டுக எனவும்,
நடுநிலைத்தீபமாய் நின்று, இயைவது காண்க.
வருமுறை மனையும் நீடு
வாழ்க்கையும் - ‘யானும் என்பால்
வருமுறை மரபுளோரும் வழித்தொண்டு செய்வோம்' என்று ஓலையிற்
கண்டமையால் நம்பிகளது பாட்டனார் (பேரனார்) நாள்முதல்
இதுவரை பழைமையாய் வரும் வீடும் வாழ்க்கையும்.
வாழ்க்கை
- வாழ்வின் அடையாளங்கள் - ஆகுபெயர்.
இவ்வடையாளங்களைக் கருவூர்த்தேவர் திருக்களந்தை
ஆதித்தேச்சரத் திருவிசைப்பாப் பதிகத்தினுட் காண்க. 64
|
|
|
|