220.
|
கொத்தார்மலர்க்
குழலாளொரு கூறாயடி
யவர்பான் |
|
|
மெய்த்தாயினு
மினியானையவ் வியனாவலர்
பெருமான்
‘பித்தாபிறை சூடீ'யெனப் பெரிதாந்திருப் பதிகம்
இத்தாரணி முதலாவுல கெல்லாமுய வெடுத்தார்.
|
74 |
(இ-ள்.)
வெளிப்படை. உமையம்மையாரை ஒரு பாகத்து
வைத்து (அதனால்) அடியவர்களிடத்துத் தாயினுஞ் சிறந்த இனிமை
செய்கின்றவராகிய சிவபெருமானை, அவர் ஆணையிட்டவாறே
நாவலூர் நம்பிகள் ‘பித்தா பிறைசூடீ' என்று தொடங்கும் பெரிதாகிய
திருப்பதிகத்தை இந்நிலவுலக முதலாகிய எல்லா உலகங்களும்
உய்யும்படித் தொடங்கினாராகி,
(வி-ரை.)
கொத்தார்மலர்க் குழலாள் - கொத்தாய் நிறைந்து
மலர்ந்த கொன்றை மலரிற்றோன்றும் கனிபோன்ற குழலையுடைய
உமையம்மையார். வலப்பால் இறைவன் சடையிலே தரித்த கொன்றை
மலர்கள் மலர்ந்து தரும் பயனாகிய அவற்றின் கனிகள் போன்றது
அம்மையாரின் நீலக் குழல் என்க. மலர் அதில் உண்டாகும் கனிக்கு
ஆகுபெயர். ‘பிறந்தவழிக் கூறலும்' என்ற தொல்காப்பியம் காண்க.
கொத்தாய் மலர்தல் கொன்றையின் இயல்பாம்.
சடைமேலக்
கொன்றை தருகனிகள் போந்து
புடைமேவித் தாழ்ந்தனவே போலும் - முடிமேல்
வலப்பாலக் கோல மதிவைத்தான் றன்பங்கிற்
குலப்பாவை நீலக் குழல்
-அற்புதத் திருவந்தாதி - 50 |
என்ற காரைக்காலம்மையார்
திருவாக்குக் காண்க. ஐயன் தமது
மலர்ந்த அருட் பயன்தர அம்மையாருடன் வந்தாராகலின் இவ்வாறு
கூறினார். கொத்தாகிய மலர்மாலைகளை யணிந்த குழல் என்றலுமாம்.
கூறாய்...இனியானை
- இனியனாதற்குக் காரணங் கூறியவாறு.
அம்மையார் அருளே திருமேனியா யுடையார். அடியார்களுக்கு
அருள்செய்ய வெளிப்படும் போதெல்லாம் அம்மையாருடனே
அப்பனார் எழுந்தருளுவர். ஆதலின் இனியானாய் இருத்தல்
அம்மையார் ஒரு கூறாய் வெளிப்பட்டபோதே நிகழ்வதாம் என்க.
அடியார்க்கு இனியான் எனவே, அடியார் அல்லார்க்கு அல்லாதவன்
என்பர். ‘அல்லாதார்க் கல்லாத வேதியனை' - திருவாசகம். இறைவன்
எல்லா உயிர்களுக்கும் ஒப்ப அருள்செய்வானாயினும்
அடியார்களிடத்துத் தாயினும் சிறந்து இனிமை செய்வன்.
மெய்த்தாயினும் இனியார் - உண்மையிலே
தாயாரைவிட
இனிமையே செய்பவர். மெய்த்தாய் - தாயரேயாயினும் உண்மையில்
பிள்ளைக்கு ஆவனவற்றை அறிந்து செய்யும் அறிவும் ஆற்றலும்
இல்லாமையால் அதற்குக் கேடுசூழ்வர் பலர்; அவர்போலன்றி
உண்மையிலே தாய்த்தன்மை வாய்ந்த இனியவர்; அவரினும்
மேம்பட்டு என்றும் எங்கும் இனிமையே செய்வார். மெய்
- உடம்பு எனக் கொண்டு, உடம்பின் தாய் இவ்வொரு பிறப்பிலே
ஒரோவழி இனிமை செய்வாள்; இவர் உயிரின் தாயாய் உயிர்க்குயிராய்
இருந்து எழுபிறப்பும் என்றும் இனிமை செய்வார்
என்றுரைத்தலுமொன்று. அன்றியும் அந்த உடம்பினை வாராமலே
செய்து ‘தாயொடு தான்படும் துக்கசாகரத் துயரிடைப் பிழை'ப்பிக்கும்
இனியான் என்றலுமாம். இதனையே,
என்னி
லாரு மெனக்கினி யாரில்லை
என்னி லும்மினி யானொரு வன்னுளன்
-திருஇன்னம்பர்
- தேவாரம் |
பானினைந்
தூட்டும் தாயினுஞ் சாலப்பரிந்து...... |
|
நாயிற்
கடையாய்க் கிடந்த அடியேற்குத்
தாயிற் சிறந்த தயாவான தத்துவனே -திருவாசகம் |
முதலிய எண்ணிறந்த திருவாக்குக்கள்
வற்புறுத்துவன.
அவ்வியனாவலர் பெருமான்
- வரிசை 181-ம் பாட்டில்
‘நாவலர் பெருந்தகை' என்ற இடத்துக் காண்க. வியன் - பெரிய.
இயல்நாவலர் எனக் கொண்டுரைத்தலுமொன்று. ‘எத்தகைய
பெரியோர்களும் குறித்தறியும் கோமான்' என்பது தோன்ற
அகரச்சுட்டு வருவித்துக் கூறினார் என்பர் சூ. சுப்பராய நாயகர்.
‘பித்தா பிறைசூடி' என - முன்னே புத்தூரில் மணப்பந்தரிலே
‘பித்தா' என்றது அறியாமையாற் கூறியது. அறிந்தபின் அவ்வாறு
கூறுதல் அபசாரம். ஆயினும் அவ்வாறே பாடும்படி
ஆணையிட்டபடியால் இப்போது ‘பித்தா' என்றேன். இங்கு யான்
அறிந்துகொண்டபடி நீ பித்தன் அன்று. ‘பிறை சூடியவனே' -
‘மதித்தலைவனே' - ‘பிறைசூடியதாலே எடுத்துக்காட்டும் கருணையே
காரணமாகப் பித்தன்போல வந்தவனே' - என்ற உட்குறிப்புக்களைக்
காட்டப் பிறைசூடி என அடுத்துவைத்தார். ஆதலின் ஆசிரியர்
‘பித்தா' எனப் பெரிதாம் பதிகம் என்னாது ‘பித்தா பிறைசூடீ'
என்பதனையும் உடன்சேர்த்து, என - என்று கூறினார். பித்தா
-
அடியவர்களைத் தொடர்ந்து ஆட்கொள்ளுவதிலே
பித்துக்கொண்டவன். இதன் உண்மை, இறைவன் கருணையினாற்
செய்யும் திருவிளையாடல் களிலெங்கும் விளங்கும். ‘பித்தா பிறைசூடி'
எனத் திருஞானசம்பந்த சுவாமிகள் திருவெருக்கக்தம்புலியூர்த்
தேவாரத்திலருளியதும், ‘போய்பாட நடமாடும் பித்தன் றன்னை'
என்று அப்பர்சுவாமிகள் திருநாரையூர்த் திருத்தாண்டகத்தில் அருளியதும் காண்க.
பெரிதாம் திருப்பதிகம்
- பாசுரம் பத்துக்கொண்டதாற்
பதிகம் என்னும் பாடற் றொகுதியேயாயினும் பொருளாலும் பயனாலும்
மிகப் பெருமை வாய்ந்தது. பெரிதாம் - பெரிதாக
ஆக்குவிக்கும்
என்றலுமாம். அஃதாவது தன்னைப் பயில்வார்க்கு உய்யும்வழி
தருதல். அதனாலே இத்தாரணி முதலாம் உலகு எல்லாம் உய்ய
என்றார். ‘பித்தா' என்ற குற்றத்தையே குணமாகக் கொண்டு
அருள்செய்ததாதலின் இதுவே பெரிதாம் திருப்பதிகமாயிற்று என்பர்
சிவ ஸ்ரீ அகரம் - அமிர்தேஸ்வர சிவாசாரியர் அவர்கள்.
தாரணி முதலாம் உலகு
- ஏனை மேல் கீழ்
உலகங்களைப்போலல்லாது கருமங்களுக்கீடாய நன்மை தீமைகளை
நுகர் தற்கிடமாயும் சிவபூசை செய்து பிறவி நீங்கப்பெறுதற்கிடமாயு
மிருத்தலால், நடுவணதாகிய தாரணியை முன்வைத்து, இகரமாகிய
அண்மைச்சுட்டும் தந்து, ‘இத்தாரணி முதலாம் உலகு எல்லாம்'
என்றார்.
எடுத்தார்
- வினைமுற்று எச்சப்பொருளில் வந்தது.
தொடங்கினராகி என்க. இது வரும் பாட்டிலே ‘பாடினன்'
என்றதனோடு முடியும். 74
|
|
|
|