221.
|
முறையால்வரு
மருதத்துடன் மொழியிந்தள
முதலிற் |
|
|
குறையாநிலை
மும்மைப்படி கூடுங்கிழ மையினா
னிறைபாணியி னிசைகோள்புணர் நீடும்புகல்
வகையால்
இறையான்மகி ழிசைபாடின னெல்லாநிகரில்லான். |
75 |
(இ-ள்.)
முறையால் வரும் - பண்ணிலக்கணம் பதினொன்றில்
முறைமையிலே வருகின்ற; மருதத்துடன் மொழி - நாற்பெரும்
பண்களில் மருதத்தின் திறத்ததாகக் கூறப்பட்ட; இந்தளம் -
மருதயாழ்த்திறம் நான்கனுள் வடுகு என்னும் இந்தளத்திலே; முதலில்
- முதல் என்னும் இசைப்பாகுபாட்டினாலும்; குறையாநிலை -
நால்வகை நிலையினும் நிலைப்படுத்தித் தூய்தாகக் காட்டும்
தன்மையிலே; மும்மைப்படி - வலிவும் மெலிவும் சமனுமென்னும்
தானநிலையையுடைய இசைக்கூறுபாடுகளுக்கு இசைய; கூடும்
கிழமையினால் பொருந்திய கிழமையினாலும்; நிறை பாணியின் -
தாள விகற்பங்களிலே நிறைந்த அளவுள்ள தாளத்துடன்; இசை
கோள் புணர் - முற்கூறிய பதினொன்றாலும் பண்ணினீர்மையை
அறிந்து, அறிந்தவண்ணம் அவ்விலக்கணம் முழுதும் நிரம்பும்படி;
நீடும் புகல் வகையால் - அசையா மரபில் நீடிச் சென்று பயன்தந்து
சொல்லப்பெறும் யாழ்த்திறன் வகையிலே; இறையான்...இல்லான் -
இறைவன் மகிழும் தமிழ் இசைப் பாட்டைத் றமக்கு ஒருவரும்
ஒன்றாலும் நிகரில்லாத புலமையோராகிய நம்பிகள் பாடியருளினார்.
(வி-ரை.)
முறையால் - முறைமையினாலே; இங்குக் கூறிய
முதல், கிழமை முதலியவை இசைப்புலவன் ஆளத்தி வைத்த
பண்ணின் நீர்மையை யறியும் பதினொரு பாகுபாடுகளைக் குறிப்பன.
அவையாவன: முதல் - முறை - முடிவு - நிறை - குறை - கிழமை -
வலிவு - மெலிவு - சமன் - வரையறை - நீர்மை - என்பன.
இவற்றின் விரிவு சிலப்பதிகாரம் அரங்கேற்றுகாதை அடியார்க்கு
நல்லார் உரை முதலியவற்றுட் காண்க.
மருதத்துடன்
- மருதம் - பாலை - குறிஞ்சி - மருதம் -
செவ்வழி என்ற நாற்பெரும் பண்களில் இது ஒன்று. இது
மருதநிலத்துக்குரியது - காலையிற் பாடத்தக்கது என்பர். ‘மாலை
மருதம் பண்ணிக் காலைக், கைவழி மருங்கிற் செவ்வழி பண்ணி,
வரவெமர் மறந்தனர்' - புறம் - 149 காண்க.
இத்தளம் - நவிர் - வடுகு - வஞ்சி - செய்திறம்
- என்னும்
மருதயாழ்த்திறன் (பெரும் பிரிவு) நான்கிலே ஒன்றாகிய வடுகு
என்றும், மருதயாழ்த்திறன் வகை (உட்பிரிவு) பதினாறில் இந்தளம்
என்றும் வழங்கும் பண்ணிலே. (பிங்கல நிகண்டு - இசைவகை
பக் - 170, 171). இந்தளம் - பகற்பண் பத்தில் ஒன்று. காலை 10
நாழிகை முதல் 12 நாழிகை எல்லைக்குள் பாடத்தக்கது. நம்பிகளை
இறைவன் ஆட்கொண்டருளிய நேரத்தை இதினின்றும் தெரியலாம்
என்பது சிலர் கருத்து.
முதலில் முதல் - மேற்குறித்த இசைப்பாகுபாடு
பதினொன்றில்
ஒன்று.
குறையா நிலை - வண்ணக் கூறுபாடு - தாளக் கூறுபாடு -
பாலை நிலை - பண்ணு நிலை - என்ற நான்கினையு -
நிலைப்படுத்தித் தூய்தாகக் காட்டும் தன்மைகள். இவையும் இசையின்
பாகுபாடுகளாம். சிலப் - அரங் - 26 ‘சீரும்' என்றதன் கீழ் உரை
காண்க. அதற்குள்ள சுரங்களைத் தத்தமக்குள்ள மாத்திரையிற்
குறையாமலிருக்க வைத்து - என்று கூறுவாருமுண்டு.
மும்மைப்படி - வலிவும் மெலிவும் சமனும்
என்ற
தானநிலையினையுடைய இசைக் கூறுபாடுகளுக்கெல்லாம்
பண்ணினீர்மை குன்றாமல். (சிலப் - அரங் - 93 - 94 உரை.) இதற்கு
எடுத்தல் படுத்தல் நலிதல் எனவும், தாரம், மந்தரம், மத்திமம்
(ஆனாயர் புரா - 27) எனவும் பொருள் கூறுவர்.
கூடும்கிழமையினால்-'......தற்கிழமை
திரிந்தபின்
முன்னதன் வகையே முறைமையிற் றிரிந்தாங்
கிளிமுத லாகிய வெதிர்படு கிழமையும்' |
(சிலப்
- அரங் - 85, 86, 87 உரை) என்று கூறியபடி கூடிய
கிழமையாகிய இசைப் பாகுபாட்டுடனே.
நிறை பாணியின் - பாணி - தாளம். ‘கொட்டும் அசையும்
தூக்கு மளவும், ஒட்டப் புணர்ப்பது பாணி யாகும்'. (சிலப் - அரங் -
16) இவை மாத்திரைப் பெயர்கள். கொட்டு அரை மாத்திரை; அதற்கு
வடிவு - க; அசை ஒரு மாத்திரை; வடிவு - எ; தூக்கு இரண்டு
மாத்திரை; வடிவு - உ; அளவு மூன்று மாத்திரை; வடிவு
ஃ;......இவற்றின் றொழில்: கொட்டு - அமுக்குதல்; அசை - தாக்கி
எழுதல்; தூக்கு - தாக்கித் தூக்குதல்; அளவு - தாக்கின ஓசை
நேரே மூன்று மாத்திரை பெறுமளவும் வருதல். பாணி -
அரைமாத்திரையுடைய ஏகதாள முதலாகப் பதினாறு
மாத்திரையுடைய பார்வதிலோசனமீறாகக் கூறப்பெற்ற நாற்பத்தொரு
தாளமும், சச்சபுட முதலான பஞ்சதாளமும், பிறவும்,
தாளவிகற்பங்களும் ஆம் என்பர்.
இசைகோள் புணர் - பண்ணிலக்கணம் பதினொன்றும்
நிரம்பும் என்க. ‘பண்ணீர்மையை மேற்சொன்ன பதினொரு
பாகுபாட்டினும் அறிந்து, அறிந்த வண்ணம் அவன் தாளநிலை
எய்தவைத்த நிறம் தன் கவியினிடத்தே தோன்றும்படி' என்ற
அடியார்க்கு நல்லார் உரை காண்க. (சிலப் - அரங் - 41, 42).
இசைகோள் - நிறைதாளம் - என்றும் கூறுவர்.
நீடும்புகல்வகையால்
- அசையா மரபிலே பகைமொழியாற்
றடுக்கப்படாத அளவில் நீடு சென்று பயன்றருவதாய் உரிய
யாழ்த்திறன் வகையினாலே. புகல் - மகிழ்ச்சி
நீடிய மகிழ்ச்சியை
விளைவிக்கும் வகையால் - என்றலுமாம். போரெனிற் புகல்மறவர்
- (புறம்).
இறையான் மகிழ் இசை - நமக்கு
மன்பிற் பெருகிய
சிறப்பின் மிக்க, அர்ச்சனை பாட்டே யாகும்; ஆதலாற் சொற்றமிழ்
பாடுக (வரிசை 216) என்று இறைவன் கூறிய இசையுடன் கூடிய
தமிழ்ப்பாட்டு. இசை - ‘இசை யென்பது நரம்பு அடைவால்
உரைக்கப்பட்ட பதினொராயிரத்துத் தொள்ளாயிரத்துத்
தொண்னூற்றொன்றாகிய ஆதியிசை' என்றும், ‘பல
இயற்பாக்களுடனே நிறத்தை இசைத்தலால் இசை யென்று பெயராம்'
(சிலப் - அரங் - 45 - உரை) என்றும் கூறுவர் அடியார்க்கு நல்லார்.
நிறம்பயில் இசையுடன் பாடி (திருஞான - புரா - 241) என்பதும்
இங்கு ஆராயத்தக்கது. மேற்கூறிய இசையிலக்கணங்களுள்
ஈண்டைக்கமைவன ஏற்ற பெற்றி வைத்துக் கண்டுகொள்ளத்தக்கது.
தமிழ் - இங்குக் குறித்த தமிழ்ப்பாட்டாவது ‘வடவெழுத்தொரீஇ
வந்த தமிழ் எழுத்தானே உறழ்ந்து கட்டப்பட்ட வாக்கியக்
கூறுகளும், இயலிசை நாடகமென்னும் மூவகைத் தமிழும்' என்பது
அடியார்க்கு நல்லாருரை. ‘ஆரியந்தமிழோ டிசையானவன்'. -
தேவாரம்.
எல்லாம் நிகரில்லான் - ஒருவரும் ஒன்றாலும்
நிகரில்லாதவராகிய நம்பிகள் - வரிசை 67-ம் பாட்டினுரையில் ‘நாடு
எல்லாம் - நலமெல்லாம்' என்றதின் கீழ் உரைத்தாங்கு உரைத்துக்
கொள்க.
இப்பாட்டிற்குப் பின்வருமாறும் பொருள் கூறுவதுண்டு.
முதலில் என்பது முதல் இசைகோள் புணர் என்பது வரையிலுமே
மாறுபாடு; அப்பகுதிக்கு மட்டும் பொருள் வருமாறு: - முதலில்
குறையாநிலை மும்மைப்படி - (ஓர் அடியிலுள்ள நான்கு சீர்களிலே)
முதலிலே, குறைவில்லாத நிலைமையுடைய சீர்கள் மூன்று முறை;
கூடும்கிழமையினால் - பொருந்திய உரிமையினால்; நிறை பாணியின்
- மேலே நிறைவு பெறும் தாளத்திற்கு ஏற்ப; இசைகோள் புணர் -
இசை கொள்ளுதற்குரிய குறைந்த சீரானது பொருந்தும். குறையாநிலை
மும்மைப்படி யென்பது கனிச்சீர்களாகிய முன் மூன்றையும். முதலிற்
குறையாநிலை யென்றமையாற் பின்பு குறைந்ததென்பது பெறப்பட்டது;
அது நான்காம் சீராகிய மாச்சீராகும் என்பது மகாமகோபாத்தியாய
டாக்டர் பிரம்மஸ்ரீ உ. வே. சாமிநாதையர் அவர்கள் முக்கனியும்
மாவும் சீர்பெற எழுதிச் சிறப்பித்ததாம்.
நாவலர் பெருமான் (ஆகிய) - எல்லாம் நிகரில்லான்
-
இனியானை - பதிகம் - உய - எடுத்தார் (ஆகி) முறையால் -
மருதத்துடன் - இந்தளத்தில் - முதலினாலும் - மும்மைப்படி
கூடும்கிழமையினாலும் - நிறைபாணியின் - வகையாலும் - தமிழ்
இசை பாடினன் என்று இவ்விரண்டு பாட்டும் தொடர்ந்து கூட்டிப்
பொருளுரைத்துக் கொள்க. அன்றி - இல் - ஆல் - என்ற உருபுகள்
ஒடுப் பொருளில் வந்தனவாகக் கொண்டு முதலினோடும்,
கிழமையோடும், வகையினோடும் பாடினன் எனப் பொருள் கோடலும்
ஆம். இவ்வுருபுகள் இப்பொருளில் வருதலை தூங்கு கையான்
ஓங்கு நடைய என்ற புறப்பாட்டாலறிக. இத்தளப்பண்ணுக்குரிய
இராகம் - நாதநாமக்கிரியை என்பர்.
இப்பாட்டினாலே இப்பதிகப் பண்ணுக்குரிய இசையிலக்கணமும்
பொருளும் பயனும் முதலிய எல்லாம் சொல்லியவாறு. தேவாரப்
பதிகத்தைப்பற்றி இப்புராணத்தில் முதலிற் கூற நேர்ந்த இடம்
இதுவாதலின் அத்தமிழிசையின் பண் அமைதி முற்றும் குறித்தனர்.1
இவ்வாறே பிறவும் கண்டுகொள்க என்று வைத்தவாறாயிற்று. இது
மிடற்றிசை. இதுபோலவே குழலிசை யிலக்கணத்தை விரிவாய்
ஆனாயநாயனார் புராணத்தும், அதன்மேல் யாழினுக்குரிய சிறப்பியல்
பைத் திருஞானசம்பந்த சுவாமிகள், திருநீலகண்ட யாழ்ப்பாணர்
புராணங்களிலும் கூறினர். முறையால்வரும் மதுரத்துடன் என்றும்,
மருத்தத்துடன் என்றும் பாடங் கொண்டு, படிப்படியாய் உயர்ந்து
வருகின்ற சுரவின்னியாஸ விசேஷங்களால் உண்டாகிற நயப்புடன்
என்றும், முறைமையால் வரும் இனிமையுடன் என்றும், கூடும்
கிழமையினால் என்பதற்குப் பொருந்தும் உரிமையோடு என்றும்,
பிறவாறும், பொருள் கூறுவாரும் உண்டு. மதுரம் - மிடற்றுப் பாட்டு
என்றும் கூறுவர்.
பதிகம்
|
(பண்
- இந்தளம்) |
திருவெண்ணெய்நல்லூர் |
பித்தாபிறை
சூடீபெரு மானேயரு ளாளா
எத்தான்மற வாதேநினைக் கின்றேன்மனத் துன்னை
வைத்தாய்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட்
டுறையுள்
அத்தாவுனக் காளாயினி அல்லேனென லாமே. (1) |
|
காரூர்புனல்
எய்திக்கரை கல்லித்திரைக் கையால்
பாரூர்புக ழெய்தித்திகழ் பன்மாமணி யுந்திச்
சீரூர்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்
ஆரூரனெம் பெருமாற்கா ளல்லேனென லாமே. (10) |
திருச்சிற்றம்பலம்
பதிகக் குறிப்பு
- பித்தனே! பிறைசூடீ ! பெருமானே!
அருளாளா! எந்த வகையாலும் உன்னை மறவாமல்
நினைக்கின்றேனாகிய என் மனத்தினுள்ளே உன்னைப்
பதியவைத்துவிட்டாய்; பெண்ணையாற்றின் தென்கரையிலே
திருவெண்ணெய் நல்லூரிலே திருவருட்டுறை எனுந் திருக்கோயிலிலே
எழுந்தருளிய எனது அத்தனே! ஆய! அன்னே! அடிகேள்! ஆதீ!
அண்ணா! ஆனாய்! ஆற்றாய்! அழகா! உனக்கு இப்போது
ஆளாயினேன். முன்பு ஆளல்லேன் என்று மறுத்தேன; இனி
அவ்வாறு மறுக்க மடியுமோ? முடியாது - என்றதாம். இப்பதிகம்
முழுதும் நம்பிகளது சரிதக் குறிப்பாய இப்புராணப் பகுதிக்கு அகச்
சான்றாதல் காண்க.
பதிகப் பாட்டுக் குறிப்புக்கள்
-(1) எத்தான் மறவாதே -
நம்பிகள் திருப்புக் கொளியூர் அவிநாசிப் பதிகத்திலே ‘எத்தான்
மறக்கேன் எழுமைக்கும் எம்பெருமானையே' என்றமை காண்க.
எத்தான் - எந்தக் காரணத்தாலும். (3) பொன், மணி, வயிரம்
இவற்றை அலைய மோதி வாரி எடுத்துக் கொண்டு அதனால்
விளங்கும் பெண்ணை. (4) பெற்றம் - எருது. ஊர்தி - வாகனம்.
ஊர்தி - ஊர்கின்றவன். (5) பண்டம் - முத்தி. ஆதன் - ஆப்தன்
ஆத்தன் என்று கொண்டு ஆத்தனாகிய உனது உடைமையாயினேன்
என்க. (7) இது இறைவனது எல்லாமான எங்கும் நிறைந்த
இலக்கணமுணர்த்திற்று. ஆனாய் உனக்கு - மேற்கூறியபடி
எல்லாமாய் நின்ற நீயே திருவருட்டுறையுள்ளும் உளன் ஆயினாய்.
நீ ஒருவனே ஆனவன்; ஏனையாவும் துணை அல்லாதவை
என்றலுமாம். (8) ஏற்றார் - உன்னை எதிர்த்தவர்கள்; செக்கர் வான்
நீர் ஏற்றாய் - செக்கர் வான் போன்ற சடையிலே கங்கை நீரை
ஏற்றவனே. ‘மாலையின் தாங்குருவே போலும் சடைக்கற்றை'
(அற்புதத் திருவந்தாதி); ஆறு - வழி. ஆற்றாய் - வழிகாட்டுபவன்.
எனலாமே - என்ற ஏகாரங்கள் வினாப்பொருளில் வந்தன.
தலவிசேடம் - இத்தலம் விழுப்புரம் - திருச்சிராப்பள்ளி
இருப்புப்பாதையில் திருவெண்ணெய்நல்லூர் ரோடு என்ற
நிலையத்திலிருந்து வடக்கே 4 நாழிகை அளவில் மட்சாலையில்
அடையத்தக்கது. மாம்பழப்பட்டு நிலையத்திலிருந்து தெற்கே
மட்சாலையில் 6 நாழிகையளவிலும் அடையத்தக்கதாம். ஆனால்
இடையில் பெண்ணையாற்றுக்குப்
பாலமும் பரிசிலும் இல்லை.
உமாதேவியார் பசு வெண்ணெயாலே கோட்டையமைத்து
அதனிடையில் தவவேள்விசெய்து அருள் பெற்ற தலமாதலின்
இப்பெயர் பெற்றதென்பது வீரசிங்காதன புராண வரலாறென்பர்.
இங்குத் திருநாவுக்கரசு சுவாமிகள் தரிசித்துப் பாடியதாகப் புராணம்
கூறும். பதிகம் இறந்துபட்டது போலும். ‘பெண்ணை அருட்டுறை
தண்பெண்ணாகடம்' என்ற க்ஷேத்திரக்கோவை காண்க. இங்குச்
சைவசமய சந்தானா சாரியர் நால்வரில் முதல்வரான மெய்கண்ட
சுவாமிகள் திருக்கயிலையினின்று ஆகாயவழி போந்த
பரஞ்சோதியாரிடம் உபதேசம் பெற்றுச் சிவஞானபோத
சாத்திரம்செய்து அருளினார். இவருக்கு அருள்செய்த மூர்த்தி
பொல்லாப் பிள்ளையார். சுவாமி - தடுத்தாட்கொண்ட தேவர் -
கிருபாபுரீசர் - எனப்பெறுவர். தேவியார் - வேற்கண் மங்கையம்மை.
திருவாயிலுக்கு மேலே ‘மாதோடு உம்பரின் விடை மேற்றோன்றி'
நம்பிக பிள்ளையார்ளுக்குக் காட்சி தந்த திருவுருவம் தனி மாடத்தில்
அமைக்கப்பெற்றுள்ளது. ஆறு - பெண்ணை. இது முன் ஓடிய
வழிதான் இப்போது மலட்டாறு என்று அழைக்கப்பெற்று
இத்தலத்துக்கு வடக்கே 1/4 நாழிகையளவில் உள்ளது. நீரின்மையாலே
இப்பெயர் பெற்றதுபோலும். அன்றி மலாடு கன்ற நாடுபற்றி இப்பெயர்
பெற்றதென்றும் கருதுவர். பெண்ணை இப்போது பழம்பெண்ணைக்கு
வடக்கே 2 நாழிகை யளவில் ஓடுகின்றது. இது நடுநாட்டில் 14-வது
தலம் மதுரத்துடன் - மருதத்துடன் - புகழ் வகையால் - என்பனவும்
பாடங்கள். 75
1இங்ஙனம்
மூலாதாரந் தொடங்கி எழுத்தின் நாதம் ஆளத்தியாய்ப்
பின்இசையென்றும் - பண்ணென்றும் பெயராம்.
‘பாவோ டணைதல்
இசையென்றார் பண்ணென்றார்
மேவார் பெருந்தான மெட்டானும் - பாவா
யெடுத்தல் முதலா விருநான்கும் பண்ணிப்
படுத்தமையாற் பண்ணென்று பார்' |
பெருந்தான
மெட்டினும் கிரியைக ளெட்டாலும் பண்ணிப்
படுத்தலாற் பண்ணென்று பெயராயிற்று. பெருந்தான மெட்டாவன:
நெஞ்சு, மிடறு, நாக்கு, மூக்கு, அண்ணாக்கு, உதடு, பல், தலை என
இவை. கிரியைகளெட்டாவன: எடுத்தல், படுத்தல், நலிதல், கம்பிதம்,
குடிலம், ஓலி, உருட்டு, தாக்கு என இவை.
|
|
|
|