222.
|
சொல்லார்தமி
ழிசைபாடிய தொண்டன்றனை
‘யின்னும் |
|
|
பல்லாறுல
கினினம்புகழ் பா'டென்றுறு பரிவி
னல்லார்வெண்ணெய் நல்லூரருட் டுறைமேவிய
நம்பன்
எல்லாவுல குய்யப்புர மெய்தானருள் செய்தான். |
76 |
(இ-ள்.)
சொல்.......தனை - இவ்வாறு தம்மைச் சொற்றமிழ்
இசைப்பதிகத்தினாற் பாடிய ஆளாகிய நம்பிகளை; இன்னும்.......என்று
- 'இனிமேலும் இவ்வாறே பல வகைகளாலும் உலகத்திலே நமது
புகழ்களைப் பாடுவாயாக' என்று; நல்லார்......நம்பன் - நல்லவர்
வாழ்தற்கிடமாகிய திருவெண்ணெய்நல்லூரில் அருட்டுறையிலே
மேவிய இறைவனும்; எல்லா.....எய்தான் - எல்லாவுலகங்களும்
உணர்ந்துய்தற்பொருட்டுத் திரிபுரங்களை எரித்தவனுமாகிய
பெருமான்; உறு பரிவின் அருள் செய்தான் - உறும் கருணைப்
பெருக்கினாலே ஆணையிட்டு எழுந்தருளினான்.
(வி-ரை.)
சொல்லார் தமிழ் இசை - சொல்லும் தமிழும்
இசையும் நிறைந்த பதிகம் - ஆகுபெயர். ‘சொற்றமிழ் பாடுக' (வரிசை
216) ‘திருப்பதிகம்' (வரிசை 220) ‘இசைபாடினன்' (வரிசை 221) என்று
கூறியவற்றைத் தொகுத்து முடித்துக் காட்டியவாறு. உரை
அவ்வவற்றின் கீழ்க் காண்க. சொல் - இதுவே சொல்; வேறு
எச்சொல்லும் பொருந்தா என்னும்படி உள்ள சொல். ‘சொல்லுக
சொல்லைப் பிறிதோர்சொலச்சொல்லை - வெல்லுஞ்சொ லின்மை
யறிந்து' என்பது குறள். ஆர் - பொருந்திய.
இறைவனது புகழ்
என்னும் பொருள் பொருந்திய சொல் என்றலுமாம்.
பல்லாறு உலகினில்
- உலகினிலே பலவாறுகளாலும் நம்
புகழ்களைப்பாடுக. இறைவன் புகழ்கள் பலவானமையாலும்
உயிர்களும் அவற்றின் பக்குவங்களும் பலவானமையாலும் பாட்டும்
பலவாயின. பல்லாறு - வேறு பல வழிகளிலே செல்லும் உலகத்திலே
என்று உரைத்தலுமாம். பற்பல தலங்களிலும் சென்று பலவாற்றாலும்
பாடுக. ‘மாதவஞ்செய்த தென்றிசை வாழ்ந்திட' (வரிசை 35) என்றதும்,
‘உலகெல்லாமுய' (வரிசை 220) என்றதும் காண்க.
உறுபரிவில்
- உயிர்கள் இத்திருப்பாட்டுக்களை உணர்ந்து
பாடித் தம்மையடைந்து உய்யவேண்டுமென்ற கருணையினால். உறு
- தம்மை உறவேண்டுமென்ற, உயிர்களின்மேல் உற்ற என்றலுமாம்.
எல்லா உலகுய்ய - உரு பரிவில் என்று கூட்டி
உரைக்க. உலகு -
முற்றும்மை தொக்கது. உலகு - ஈண்டு உயிர்களைக் குறித்தது.
நம்பன்
- நம்பி அடையத்தக்கவன். நம்பி என்ற பெயரும்
இதுவே.
புரமெய்தான்
- உயிர்களை மும்மலமும் நீக்கி
ஆட்கொள்ளும் தமது இயல்பைத் தெரிக்குமுகத்தாலே
திரிபுரங்களையும் எரித்தழித்தவன். ‘முப்புர மாவது மும்மல காரியம்'
என்றருளினார் திருமூலதேவர். தான் செய்யும் தன்மைகளை
நம்பிகளுக்கும் ஆக்கி, உயிர்களின் மலநீக்கத்தின் பொருட்டே
நம்பிகளையும் பாடும்படி ஆணையிட்டான் என்பது குறிப்பார்
புரமெய்தான் அருள் செய்தான் என்று சிறப்பாற் கூறினார். நம்பனும்
எய்தானுமாகிய இறைவன் என்க. நம்பன் - எய்தான் - உறுபிரிவில் -
தொண்டன்றனை - பாடு என்று - அருள்செய்தான் என்று கூட்டுக.
அருள்செய்து எழுந்தருளிப் போயினார் என வருவித்துரைக்க. 76
|
|
|
|