232.
|
அந்நிலையா
ரூரனுணர்ந் ‘தருமறையோ
யுன்னடியென் |
|
|
சென்னியில்வைத்
தனை'யென்னத் ‘திசையறியா
வகைசெய்த
தென்னுடைய மூப்புக்கா' ணென்றருள
வதற்கிசைந்து
தன்முடியப் பால்வைத்தே துயிலமர்ந்தான்
றமிழ்நாதன்.
|
86 |
(இ-ள்.)
அந்நிலை.......என்ன - அந்த நிலையை நம்பி ஆரூரர்
தெரிந்து அவரை நோக்கி ‘அருமறையோனே! உன் அடிகளை என்
முடிமேல் வைத்தனையே!' என்று சொல்ல; திசை......என்றருள -
அதற்கு அவர் என்னுடைய மூப்பு என்னைத் திசைதெரியாமற்
செய்துவிட்டது' என்று விடைசொல்லவே; அதற்கிசைந்து.......தமிழ்
நாதன் - தமிழ் நாதனாகிய ஆரூரர் அதனைஒப்புக்கொண்டு தமது
திருமுடியை அப்பால் வேறிடத்திலே வைத்துத் துயில் கொண்டார்.
(வி-ரை.)
திசை அறியா வகை செய்தது என்னுடைய
மூப்புக்காண் - உனது முடியிருந்த திசையை என்னை அறியாமற்
செய்துவிட்டது என்னுடைய மூப்பு என்பது வெளிப்பொருள் - காண்
- எனது மூப்பினைக் காண்பாய். இனி, நான் உன்
முடியிற் கால்
வைக்கும் இறைவன்; நீமட்டுமல்ல; எத்திசையில் உள்ள எவர்களும்
என்னை இன்ன தன்மையன் என்றறிய முடியாமற் செய்துவிட்டது
எனது ‘முன்னைப் பழம்பொருட்கு முன்னைப் பழம் பொருளாகிய
பழைமை; இதனை நீ (நாம் காட்டக்) காண்பாய்' என்பது உட்பொருள்.
தன்முடி அப்பால் வைத்தே
- மிக மூப்பு அடைந்த அவர்
தாளை அப்புறம் வைக்கச் சொல்லி அவரை வருத்தாது. அவர்
சொன்னதற்கு இசைந்து விட்டாராதலாலே தம்முடியை வேறு புறமாக
வைத்து.
துயில் அமர்ந்தான்
தமிழ் நாதன் - தேவாரத் தமிழ் நாதர்.
நம்பிகள் முன்னர் 'உயர் நாவலர் தனிநாதனை' (வரிசை 223)
என்றதும் காண்க.
துயிலமர்ந்தான்
- துயில் கொண்டருளினார். துயில -
துயில்கொள்ள; அமர்ந்தான் என்றலுமாம். நம்பிகளை முன்னர்
வந்தித்தார், மனங்கொண்டார், புறத்தணைந்தார், மடம் புகுந்தார்,
பள்ளியமர்ந்தருளினார் எனவும், பின்னர்ப் பாடினார் எனவும்,
பன்மையிற் கூறிய ஆசிரியர் இங்கு நம்பிகள் இறைவனை
ஒருமையிலே ஒரு வேதியனாகவே எண்ணிப் பேசும் இடத்துக்
கேற்ப, ஆரூரன் - தன்முடி - அமர்ந்தான் - நாதன் என
ஒருமையிற் பேசியிருத்தல் உய்த்துணரத்தக்கது. 86
|
|
|
|