233.
|
அங்குமவன்
றிருமுடிமேன் மீட்டுமவர் தாணீட்டச் |
|
|
செங்கயல்பாய்
தடம்புடைசூழ் திருநாவ லூராளி
‘யிங்கென்னைப் பலகாலு மிதித்தனைநீ
யா'ரென்னக்
கங்கைசடைக் கரந்தபிரா ‘னறிந்தில்லையோ'
வெனக்கரந்தான். |
87 |
(இ-ள்.)
அங்கும் நீட்ட - (நம்பிகள் தமது திருமுடியை
அப்பால் வைத்துத் துயிலமர்ந்த) அவ்விடத்திலேயும் மீண்டும் அவர்
தமது திருவடிகளை அவரது முடியின் மேல் நீட்டவே;
செங்கயல்......என்ன - கயல்மீன்கள் பாய்தற்கிடமாகிய வாவிகள்
சூழ்ந்த திருநாவலூரின் நம்பிகள் அவரை நோக்கி ‘இங்கு என்னைப்
பல முறையும் மிதித்தாய்; நீ யார்?' என்று சினந்து கேட்க;
கங்கை.........கரந்தான் - கங்கையைச் சடையிலே ஒளித்த இறைவன்
‘என்னை நீ இன்னும் அறியவில்லையா?' என்று சொல்லி
மறைந்தருளினார்.
(வி-ரை.)
செங்கயல்பாய் தடம் - தடம் - பொய்கை.
கயல்கள் பொய்கையிலிருந்து போர் செய்யும் இயல்புடன் தாவிக்
குதிப்பனவாம். நம்பிகளது முன்பாட்டிற் கண்ட மன நிலைக்கும்
இப்பாட்டிற் காணும் மன நிலைக்கும் ஏற்ற குறிப்புக் காட்டுமாறு
கயல்பாய் தடம்புடை சூழ் - என்றார். கயல்களின் இயல்பும் குணமும்
(வரிசை - 70) முன்னர்க் ‘காவினிற் பயிலும்' என்ற பாட்டின்கீழ்க்
காண்க.
திருநாவலூராளி -
திருநாவலூரின் தலைவர்.
‘தென்னாவலர்கோன்' (நம்பிகள் தேவாரம் - திருநெல்வாயிலரத்துறை
- 10).
முடிமேல் தாள் நீட்ட
- தாள் தலையிற் பொருந்தும்படி
நீட்டுதலும்.
பலகாலும் மிதித்தனை
- முன்னே தாள்வைத்தது மூப்பினால்
என்று எண்ணியது தவறு; இப்போது செய்த செயலினாலே அதுவும்
வேண்டுமென்றே மிதித்த செயலே என்பது குறிப்பு.
நீ யார்?
- முன்னர் ‘அருமறையோய்! உன் அடி என்
சென்னியில் வைத்தனை என்றார். ‘மூப்புக்காண்' என்றதற்கிசைந்து
அவரை ஒன்றும் சொல்லாது தன்முடி அப்பால் வைத்தே
துயிலமர்ந்தார். ஆயின் இப்போது ‘நீயார்' என்று கேட்டது நம்பிகள்
கொண்ட சீற்றத்தைக் குறித்தது. சீற்றம் முன்னிருந்த நிறையினை
மாற்றியது காண்க.
அறிந்திலையோ?
- ஒருவரும் அறியாமே இங்கு வந்து
பள்ளியமர்ந்த செயலிலே அறியலாம். நாமே தடுத்து
ஆளாக்கொண்டமையால் உனது முடியிலே அடி சூட்டுவார் பிறரிலர்
என்று அறியலாம். இன்னும் அறிந்திலையோ? என்க.
கரந்தான்
- காட்டிய உருவத் திருமேனியை
மறைத்தருளினார். மறைந்து நிற்றலே இவரது இயல்பு என முன்னர்
‘முதுவடிவின் மறையவராய்' என்றதற்கேற்பக் கங்கை சடைக் கரந்த
செயலையும் குறித்தார். ‘அறிந்திலையோ' என்ற வினாவினாலும்
கரந்ததாகிய செயலினாலும் தம்மை அறிவித்தபடியாம். வரிசை 211-ம்
பாட்டிலே கண்டிலர் - என்பதன் உரை காண்க.
மீண்டும் - மிதிந்தநீ - என்பனவும் பாடங்கள். 87
|
|
|
|