236.
|
அங்கணரை
யடிபோற்றி யங்ககன்று மற்றந்தப் |
|
|
பொங்குநதித்
தென்கரைபோய்ப் போர்வலித்தோண்
மாவலிதன்
மங்கலவேள் வியிற்பண்டு வாமனனாய்
மண்ணிரந்த
செங்கணவன் வழிபட்ட திருமாணி
குழியணைந்தார். |
90 |
(இ-ள்.)
வெளிப்படை. பெருமானை அடி வணங்கி, அங்கு
நின்றும் புறப்பட்டு, அந்தத் திருநதியின் தென்கரையின் வழியே போய்,
மாபலிச்சக்கரவர்த்தியினிடம் வாமன உருவத்துடன்சென்று மூன்றடி மண்
யாசித்து அவனைப் பாதலத்தழுத்திய விட்டுணுமூர்த்தி பூசித்த தலமாகிய
திருமாணிகுழியை அணைந்தனர்.
(வி-ரை.)
அங்கணரை அடிபோற்றி - கெடில வடகரையினின்றே
வீரட்டானேசுவரரைப் பூசித்து - அஃதாவது அவரை ஆவாகித்துச் சிவபூசை
பண்ணி. மேலே ‘நீள்சடையோன் திருப்பாத மலர்கொண்டு போற்றிசைத்து
வந்தித்தார்' (வரிசை. 226) என்றமை காண்க. தாம் நகருட் புகாதிருந்தும்,
மறுத்தும், வலியத் திருவடி சூட்டியமையால் அந்த அடிகளைப் போற்றினார்.
ஆதலின் அங்கணரைப் போற்றி என்னாது, அடிபோற்றி என்றார். வரும்
பாட்டிலே தென்கரை போய் என்றமையாலும், திருவதிகை கெடிலநதியின்
வடகரையில் உள்ளமையாலும், இங்குப் போற்றியது வடகரையினின்று என்க.
நம்பிகள் அதிகைநகருட்புகாமை துணிந்தாராதலின் கரையினின்றே
போற்றினார் என்றும் கொள்க.
அங்ககன்று
- அங்கு நின்றும் நீங்கி. ஐந்தாம் வேற்றுமையுருபு
தொக்கது.
போர் வலித்தோள்
மாவலி - மாவலி என்ற பெயரின் காரணங்
காட்டியவாறு. போரிற் பெரும் வலிமை படைத்தவனாதலின் மாவலி
எனப்பட்டான்.
திருமறைக்காட்டிலே ஒரு எலி திருக்கோயிலில் விளக்கிலிருந்த
நெய்யை உண்ணப் புக்கபோது மூக்குச் சுட்டிட அதனால் தாமறியாமலே
திரியைத் தூண்டிவிட்டது. அந்தப் புண்ணியவசத்தால் சக்கரவர்த்தியின்
ஆணையும் திறனும் பெற்று மாவலியாய்ப் பிறந்தது என்ற சரிதம்
புராணங்களிற் கேட்கப் பெறும்.
நிறைமறைக்
காடு தன்னி னீண்டெரி தீபந் தன்னைக்
கறைநிறத் தெலிதன் மூக்குச் சுட்டிடக் கனன்று தூண்ட
நிறைகடன் மண்ணும் விண்ணு நீண்டவா னுலகு மெல்லாங்
குறைவறக் கொடுப்பர் போலுங் குறுக்கைவீ ரட்ட னாரே
-
அப்பர் சுவாமிகள் தேவாரம் |
என்ற திருநேரிசை காண்க.
மங்கல வேள்வி -
சிவன் மங்கலத்தைச் செய்பவன். அவனை
நோக்கிச் செய்யப் பெற்றதாதலின் மங்கலவேள்வி என்றார். வேள்வி
செய்தான் இறந்துபட்டது அமங்கலமன்றோ எனின், அன்று; உலகங்காக்கும்
தேவனாகிய விட்டுணு மூர்த்தியே வந்து இரந்துகேட்க நிகழ்ந்ததாலும்
அதனால் அழியாப் புகழ்பெற்றமையாலும் மங்கலவேள்வியாமென்க.
வாமனனாய் மண் இரந்த
- விட்டுணுமூர்த்தி வாமன உருவத்துடன்
- குற்றுருவுடைய பிரமசாரியாய் வேள்வியில் வந்து மாவலியினிடம் மூன்று
அடி மண்யாசித்துப்பெற்றுப், பின் வளர்ந்து, அவனைப் பாதலத் தழுத்தினார்
என்ற சரிதமும் புராணங்களுட் காண்க. அடியளந்தான் தாஅயதெல்லாம்
என்பது திருக்குறள்.
மறுமா
ணுருவாய் மற்றினை யின்றி வானோரைச்
செறுமா வலிபாற் சென்றுல கெல்லா மளவிட்ட
குறுமா ணுருவன் றற்குறி யாகக் கொண்டாடும்
கறுமா கண்டன் - குறிஞ்சி - திருக்கண்ணார்கோயில்
- 5 |
என்ற திருஞானசம்பந்த
சுவாமிகள் தேவாரமும் காண்க. 90
|
|
|
|