239.
|
நாக
சூதவகு ளஞ்சர ளஞ்சூழ் நாளிகேரமில வங்க
நரந்தம்
|
|
|
பூக
ஞாழல்குளிர் வாழை மதூகம் பொதுளும்
வஞ்சிபல
வெங்குநெருங்கி
மேக சாலமலி சோலைக ளாகி மீது கோகில
மிடைந்து
மிழற்றப்
போக பூமியினுமிக்கு விளங்கும் பூம்பு றம்பணை
கடந்து
புகுந்தார். |
93 |
(இ-ள்.)
நாகம்.......நெருங்கி - நாவல் - மா - முதலிய மரங்கள்
எவ்விடத்தும் செறிந்து; மேகசாலம்......மிழற்ற - மேக மண்டலம்வரை
ஓங்கி வளர்ந்த சோலைகளாகி அவற்றில் குயில்கள் கூவ;
போகபூமியினும்.......புகுந்தார் - தேவலோகத்தைவிட மிகப்
பொலிவுடன் விளங்கும் அழகிய புறம்பணையையும் கடந்து
உட்புகுந்தார்.
(வி-ரை.)
நாகம் - நாவல்; சூதம்
- மா; வகுளம் -
மகிழ்; சூழ் நாளிகேரம்
- சூழ்ந்து வளர்ந்த தென்னை மரங்கள்;
நரந்தம் - நாரத்தமரம்; பூகம்
- கமுகு; ஞாழல் - குங்குமமரம்;
மதூகம் - இலுப்பை மரம். குளிர்வாழை
- தண்ணீரை மிக உண்டு
குளிர்ச்சிக்குக் காரணமாதலின் குளிர்வாழை என்றார். பொதுளும்
வஞ்சி - நெருங்கித் தழைக்கும் வஞ்சி மரங்கள். கிளைகளை
வெட்டி நடவே தழைத்துச் செறிந்து வளர்தலால் பொதுளும் என்றார்.
நெருங்கி - நெருங்க - நெருங்குதலால்.
மேக சாலமலி சோலைகளாகி
- மேகக்கூட்டம் தங்கும்
பெரிய சோலைகளாகி; போகபூமி - பரதகண்டத்துக்குப்
புறம்பாயுள்ள கிம்புருட கண்ட முதலியன என்பர் ஆறுமுகத்
தம்பிரான் சுவாமிகள்.
பூம்புறம்பணை -
மேற்கூறியவாறு அழகிய புறநகரின்
அமைப்புக்களாகிய வயல் முதலியன. இப்பாட்டிற் கூறிய மரங்கள்
பலவும் இறைவன் பூசனைக்கு வேண்டப்பெறுவனவாய் - நிவேதனம்,
தாம்பூலம், முகவாசம், திருமஞ்சனம், திருவிளக்கு
முதலியனவற்றிற்குப் பயன்படுதல் காண்க.
மீது கோகிலமிடைந்து
மிழற்ற - மரங்களின் மேலிருந்து
குயிற்கூட்டங்கள் இனிமையாய்க் கூவ. இங்குக் குறித்த குயில்கள்,
‘கீதமினிய குயிலே!' என்று விளித்து மணிவாசகப்பெருமானார்.
‘ஆதிகுணம் ஒன்றுமில்லான் அந்தமிலான் வரக்கூவாய்!' என்று
ஆணையிட்டுப் பயிற்றிய பரம்பரையில் வந்த குயில்கள்.
இதனாலன்றோ இப்பரம்பரையில் முன்னே வந்தவை திருநாவுக்கரசு
சுவாமிகள் திருத்தில்லை தரிசிக்க எழுந்தருளியபோது உலகத்தாரைக்
கூவி அவரைத் தரிசித்து உய்யுமாறு அழைத்தன என்று ஆசிரியர்
பின்னர்க் கூறுகின்றார்.
அறிவிற்
பெரியவ ரயனெற் பணைவய லவைபிற் படும்வகை
யணைகின்றார்
பிறலிப் பவநெறி விடுவீரிருவினை பெருகித் தொடர்பிணி
யுறுபாசம்
பறிவுற் றிடவணை யுமினென றிருபுடை பயில்சூழ் சினைமிசை
குயில்கூவும்
-
திருநா - புரா - 159 |
என்றது காண்க. 93
|
|
|
|