24.
|
யாத வன்றுவ ரைக்கிறை யாகிய
|
|
|
மாத வன்முடி
மேலடி வைத்தவன்
பூத நாதன் பொருவருந் தொண்டினுக்
காதி யந்த மிலாமை யடைந்தவன். |
14 |
(இ-ள்.)
யாதவன் ....... மாதவன் - (உபமன்னிய
முனிவர்) யாதவனும் துவாரகைக்கு அரசனும் ஆகிய கிருட்டிணமூர்த்தியினது;
முடிமேல் அடிவைத்தவன் - முடிமேல் தனது பாதங்களைச்
சூட்டியவர்; பூதநாதன் பொரு அரும் தொண்டினுக்கு
- பூத
நாயகராயுள்ள சிவபெருமானிடத்துத் தாம் செய்யும் ஒப்பற்ற
திருத்தொண்டுக்கு; ஆதி அந்தம் இலாமை அடைந்தவன் - முதலும்
இறுதியும் இல்லாத தன்மை பெற்றவர்.
(வி-ரை.)
பின்னும், அம்முனிவர், மாதவன் முடிமேல்
அடிவைத்தவரும் நிரந்தரமான சிவத்தொண்டு பெற்றவரும் ஆம்
என்பது. யாதவன் - யது மரபிற் பிறந்தவன்
- கண்ணன். துவாரகை
துவரை என மருவி வந்தது.
முடிமேல்
அடிவைத்தவன் - திருவடி தீக்கை செய்தவர்; இது சிவ தீக்கை வகையுள் ஒன்று;
கண்ணணுக்கு உபமன்னிய முனிவர்
சிவதீக்கை செய்த வரலாறு மாபாரதத்திலே ஆனுசாசன பருவத்திலே
கிருட்டினனுக்குச் சிவதீட்சை செய்த பகுதியுட் காண்க. கண்ணன்
யமுனை யாற்றுக்கரையிலே சிவதீக்கையில்லாது வைதிக
மார்க்கத்தாலே சிவபூசை செய்தனன். அவன் பூசித்த பின் அந்த
மலர்களை யமுனை யாற்றிலே இட்டார்களாக, அவை யமுனையின்
வழிப்பட்டுச் சென்றன. அவற்றை உபமன்னிய முனிவர் எடுத்துச்
சிவபூசை செய்ய, அவை கண்ணன் பூசித்த நின்மாலியம் என்று
கேட்டபோது அவனுக்குச் சிவ தீக்கையில்லை ஆதலின் அவன்
பூசித்த பூக்களுக்கு நின்மாலிய தோடமில்லை; அவை
நின்மாலியமாகா; என்ற சொல்லிப் பூசித்து முடித்தனர். அதுகேட்ட
கண்ணன் தான் இதுகாறும் செய்த சிவபூசை பயனற்றுப் போனதை
எண்ணிவருந்தி அம்முனிவரை யடைந்து சிவதீக்கை செய்து
கொண்டனன் - என்பது அதன் சுருக்க வரலாறு.
தொண்டினுக்கு
ஆதியந்த மிலாமை யடைந்தவன் : இவர்
சிவபெருமானுக்குச் செய்யுந் தொண்டு - இங்கே தொடங்குகின்றது, இங்கே முடிகின்றது -
என்று சொல்ல இயலாதபடி எங்கும் என்றும்
இடைவிடாது மனம் வாக்குக் காயங்களினாலே செய்ய நிலைத்து
நிற்கும் பேற்றை அடைந்தவர். இனித், தொண்டினுக்கு ஆதி
:
(தலைவர்); அந்தம் (இறப்பு) இலாமை அடைந்தவர் எனப்
பிரித்துரைத்தலுமாம்.
கண்ணன்
உபமன்னிய முனிவன்பாற் சிவதீக்கை பெற்றுத் தன்னையுந் தலைவனையு முணர்ந்தோனாதல்
சிவோகம் பாவனை
கைவந்தோனாதல் அறிக என்று இவ்வரலாறு பற்றி எமது மாதவச்
சிவஞான முனிவர் சிவஞானபோதச் சிற்றுரையில் விரித்தருளுதல்
காண்க. 14
|