| 243. 
              | 
          பார்வி 
            ளங்கவளர் நான்மறை நாதம் 
                 பயின்ற பண்புமிக வெண்கொடி யாடுஞ் | 
            | 
         
         
          |   | 
          சீர்வி 
            ளங்குமணி நாவொலி யாலுந் 
                 திசைக ணான்கெதிர் புறப்பட லாலுந் 
            தார்வி ளங்குவரை மார்பின யன்பொற் 
                 சதுர்மு கங்களென லாயின தில்லை 
            ஊர்வி ளங்குதிரு வாயில்க ணான்கி 
                 னுத்த ரத்திசை வாயின்மு னெய்தி.  | 
          97 | 
         
       
       
           (இ-ள்.) 
      பார்......பண்புமிக - உலகம் விளக்க மடைய வளர்க்கப்  
      பெறும் நால்வேத நாதங்கள் பயின்ற தன்மை மிகுந்து நிற்க;  
      வெண்கொடி......ஒலியாலும் - வெண்கொடி ஆடும் சிறப்புடனே  
      மணிநாவின் ஒலி எழுவதாலும்; திசைகள்....புறப்படலாலும் - நான்கு  
      திசைகளிலேயும் எதிர்முகமாகப் புறப்படுகின்றதனாலும்;  
      தார்......நான்கில் - மாலைகளணிந்த அகன்ற மார்புடைய  
      பிரமதேவரது பொன்னிறம் பொருந்திய நான்கு முகங்களே இவை  
      என்று சொல்லப்பெறுவனவாகிய தில்லைப்பதியின் விளக்கம் மிக்க  
      திருவாயில்கள் நான்கிலே; உத்தரத்திசை......எய்தி - வடக்குத்  
      திருவாயின் முன்பு (நம்பிகள்) சேர்ந்து,  
       
           (வி-ரை.) 
      அயன்பொற் சதுர்முகங்களெனலாயின -  
      வாயில்கள் நான்கின் - தில்லையின் நான்கு திருவாயில்களும்  
      அவற்றின் நான்கு சிகரங்களும் பிரமதேவரின் நான்கு முகங்களைப்  
      போன்றன என்று சிலேடை வகையாற் கூறினார். திருவாயில்கள் 
      -  
      திசைக்கொன்றாக நான்கு திசையிலும் நான்கு முகமாய் அமைந்தன.  
      அவற்றிலே வேதம் பயில்வோர் பயல்கின்ற மறைநாதம் மிகுந்து  
      உள்ளது. வெண்கொடி ஆடுகின்றது - நாவின் அசைதலால் 
       
      மணிஒலி எழுவது. பிரமதேவர் - சிலேடைப் பொருள் 
      வெளிப்படை  
      - நான்கு முகத்தையுடையவராய், வாயிலே வெண்கொடி (கலைமகள்)  
      குடிகொண்டு விளங்க மறை பயின்றவராய் அழகிய நாவில்  
      மறையொலி விளங்க இருப்பர். 
       
           பொற்சதுர்முகங்கள் 
      - பொன் - பிரமதேவர்  
      பொன்னிறமுடையவர் என்பர். இரண்ணிய கருப்பன் என்பது இவர்  
      பெயர்களில் ஒன்று. அவர் சிரத்திற்றரித்த பொன்முடியினது பொன்  
      என்றலுமாம். 
       
           வாயில் 
      - வழி. இது சொல்லணி. சதுர்முகன் வாயிலே தான்  
      மறைபயின்ற நாவொலியும் வெண்கொடியும் விளங்கும். 
       
            வெண்கொடி 
      - தூய்மையும் அழகும் பெறத் திருவிழாவிற்  
      கட்டப்பெறுவன. 
       
       
      
         
          வீதிகள் 
            தோறும் வெண்கொடி யோடு விதானங்கள்  
                                     - 
            அப்பர் -திருவாரூர். | 
         
         
          |   | 
         
         
          விதானமும் 
            வெண்கொடியு மில்லா ஊரும்......ஊரல்ல  
                                        - 
            திருத்தாண்டகம். | 
         
         
          |   | 
         
         
          வெண்கொடிசேர் 
            நெடுமாடம் 
             
            - திருஞான - காந்தாரம் - திருக்கடம்பூர் - 1 | 
         
       
       
      முதலிய திருவாக்குக்கள் 
      காண்க. வெண்கொடி சமாதானத்தைக்  
      காட்டும் அறிகுறியாய் போர்முறையில் இன்றும் வழங்குவது காண்க.1 
      மறைநாதம் பயின்ற பண்புமிக - நாதவொலி வேதவொலி  
      அறாத்தில்லை என்று முன்னரே (வரிசை - 237) குறித்ததும் காண்க.  
      நான்மறைகள் எப்போதும் இங்கு உலகம் உய்யப்  
      பயிலப்பெறுவனவாம். பார்விளங்கவளர் என்று காரணங்  
      காட்டியவாறு. கற்றாங் கெரியோம்பிக் கலியை வாராமே செற்றார்  
      முதலிய எண்ணிறந்த திருவாக்குக்கள் காண்க. வளர் 
      - வளர்கின்ற.  
      வளர்க்கின்ற என்றலுமாம். 
       
           மணிநாவொலி 
      - திருவாயிலில் தூக்கிய மணிகளினது  
      நாக்களால் எழும்பும் ஒலி. இவை அவ்வக்கால வழிபாடுகளின்போது  
      ஒலிக்கப்பெற்று மக்களுக்கு அந்நினைவையூட்டி  
      அறிவுறுத்துகின்றதனால் ஒலி எனலாயின. கடைதூங்கு மணியைக்  
      கையாலமரர், நாவா யசைத்த ஒலி என்பது அப்பர் சுவாமிகள்  
      பொதுத் திருவிருத்தம். 
       
           உத்தரத் திருவாயில் 
      - நம்பிகள் திருத்தினை நகரை  
      வணங்கி வழிக்கொண்டு வடக்கிலிருந்து வருகின்றாராதலின் வடக்குத்  
      திருவாயிலின் வழியாய்ப் புகுந்தனர் எனப்பெற்றது. இதுபோலவே  
      ஆளுடைய பிள்ளையார் தெற்குத் திருவாயிலாலும், அப்பர்  
      சுவாமிகள் மேற்குத் திருவாயிலாலும் உட்புகுந்தனர் என்பது  
      அவ்வவர் சரிதம். 
       
           வாயில்கள் நான்கின் 
      - தில்லைத் திருமன்றிலே இறைவனது  
      திருநடங் கண்டுபேறுபெறும் உயிர்கள் இந்நான்கு திருவாயில்களிலே  
      ஒன்றின் வழியே தான் திருக்கோயிலினுட் புகுதல்வேண்டும். இவை  
      சரியையாதி நான்கினையும் குறிக்கும் அந்நான்கே இறைவனை  
      அடையும் வழிகளாகச் சாத்திரங்கள் கூறும். இவ்வழிகளில்  
      ஒவ்வொன்றினைச் சிறப்பாய் விளக்கவந்த நமது ஆசாரியன்மார்கள்  
      மேலே கண்டவாறு இவ்வாயில்களிலே ஒவ்வோர் வழியே  
      புகுந்தமையும் காண்க. வருநான்மறை; கொடியாலும்; மணிமார்பின்;  
      புலப்படலாலும்; எனவாயின; - என்பனவும் பாடங்கள். 97 
       
       
       
       
      1 கறுப்புக்கொடி 
      இதற்கு மாறான எண்ணங்களைக் காட்டுதற்கு  
      வழக்குவதும் காண்க. 
   |  
	 
	 |   
				
				 | 
				 
			 
			 |