252. |
ஐந்துபே
ரறிவுங் கண்களே கொள்ள
வளப்பருங் கரணங்க ணான்குஞ் |
|
|
சிந்தையே
யாகக் குணமொரு மூன்றுந்
திருந்துசாத் துவிகமே யாக
இந்துவாழ் சடையா னாடு மானந்த
வெல்லையி றனிப்பெருங் கூத்தின்
வந்தபேரின்ப வெள்ளத்துட் டிளைத்து
மாறிலா மகிழ்ச்சியின் மலர்ந்தார். |
106 |
(இ-ள்.)
ஐந்து.......கொள்ள - ஐந்தாகப் பெயரும் அறிவுகளை
எல்லாம் கண்களே தமதாக்கிக்கொள்ள; அளப்பரும்......ஆக -
அளவிடற்கரிய நான்கு கரணங்களின் செயல்கள் எல்லாம் சித்தம்
என்ற ஒன்றின் செயலேயாக; குணம்......ஆக - மூன்று குணங்களும்
சுத்த சாத்துவிகம் என்ற ஒன்றேயாகி நிற்க; இந்து......திளைத்து -
சந்திரன் வாழும் சடையினையுடைய இறைவன் ஆடுகின்ற அளவும்
ஒப்பும் அற்றதாகிய பெருநடனத்தினால் தம்மிடம் நிகழ்ந்த பேரின்பக்
கடலிலே திளைத்து; மாறிலா......மலர்ந்தார் - இணையற்ற
பெருமகிழ்ச்சியிலே மலர்ந்தாராயினர்.
(வி-ரை.)
[குறிப்பு:- திருச்செந்தில் முருகப்பெருமான தருள்
(பெற்று, அவ்) வழியே சென்ற குமரகுருபரருடைய வாக்கு வன்மை,
தருமபுர ஆதீனம் நான்காவது குருமூர்த்தியாகிய ஸ்ரீலஸ்ரீ
மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த குருமூர்த்திகளின் முன்னர்த்
தடைபட்டதன்மூலம் அவரே ஞானகுரு என்று காட்டித்தரக்
காரணமாயிருந்தது இத் திருப்பாட்டேயாம் என்பது வரலாறு.
ஆதலின் இதன் பொருளை விளக்குதல் விதிப்படி ஞானோபதேசமும்
குருவருளும் பெற்ற அநுபூதிமான்களுக்கே கூடுவதன்றி என்போன்ற
எளியோர்க்கு இயல்வதன்று.]
ஐந்துபேர் அறிவு -
ஐந்துவகையாக ஐந்து வழிகளிலே
பெயர்கின்ற அறிவு. அறிவு ஒன்றேயாயினும் ஐந்து வெவ்வேறு
புலன்வழியே சென்று, ஐந்து வெவ்வேறு பொறிகளின்மூலம் ஐந்து
வெவ்வேறு பொருள்களை அறியுமாதலின் ஐந்தறிவாம்.
கண்களே கொள்ள
- ஐம்பொறி வழி அறியும் ஐம்புல
அறிவும் கண்ணாகிய ஒரு பொறிவழி யறியும் காட்சியறிவின்
மட்டிலே அமைந்துநிற்க. அதாவது ஏனைய, மூக்கு, நாக்கு, மெய்,
செவிகளின் வழியே அவற்றின் புலன்களிடத்து அறிவு
செல்லாமையின் இவை நான்குந் தொழிற்படவில்லை. அதாவது : கண்
கண்டுகொண்டே நிற்கக், காது கேளாது - மூக்கு முகராது -
என்றபடி. கண்களே - ஏகாரம் பிரிநிலை. ஐந்திலே ஏனைய
நான்கினையும் பிரித்து நின்றது. சிந்தையே - சாத்துவிகமே -
என்பவற்றையும் இவ்வாறே கொள்க.
வாயொன்று
சொல்ல மனமொன்று சிந்திக்க
நீயொன்று செய்ய லுறுதி நெடுந்தகாய்
தீயென்றிங் குன்னைத் தெளிவன் றெளிந்தபின்
பேயென்றிங் கென்னைப் பிறர்தெளி யாரே
-
ஆறாந்தந்திரம் - 111 |
என்று திருமூலர் சுவைபெறச்
சொன்ன திருமந்திரப் பொருளை
இங்கே உன்னுக
மாறி
நின்றென்னை மயக்கிடும் வஞ்சப் புலனைந்தின்
வழியடைத்
தமுதே
யூறி நின்றென்னு ளெழுபரஞ் சோதி......... |
என்ற திருவாசகப் பொருளையும்
இங்குக் கூர்ந்து நோக்குக.
ஐந்து -
இங்கே ஐந்து என்பதில் ஐகாரம் அஞ்சு
என்றதிற்போல எதுகை நோக்கிக் குற்றெழுத்து மாத்திரையாய்
நின்றது. ஈரள பிசைக்கு நெட்டெழுத்தென்ப என்றபடி இது
இரண்டு மாத்திரை இசைக்குமாயினும் செய்யுள் விகாரமாய் இங்கு
ஒரு மாத்திரையே கொள்க.
மேற்பாட்டிலே கைகளோ கண்களோ கரணமோ என்ற
ஐயப்பாட்டை உணர்த்த ஓகாரங்களாற் கூறிய ஆசிரியர்,
அஞ்சலித்துத் தாழ்ந்ததன் பயனாக, இங்கே ஐயத்தை நீக்கித்
தெளிவுறுத்த ஏகாரங்களாற் கூறிய அழகும் பொருளாழமும்
உய்த்துணர்க. மேலும், மேற்பாட்டிலே மலர்த்தி என்ற பிறவினை
அவ்வாறு மலர்த்தியதன் பயனாக அப்பெரியோன் இப்பாட்டிலே
தன்வினையாக மலர்ந்தாராயினமையும் நோக்குக. மலர்த்துதல்
-
இறைபணி வழுவாது நிற்கும் துரியநிலை. மலர்தல்
- போதநிலை
முடிந்த துரியாதீத நிலை.
கண்களுக்குச் சொல்லியவாறே கரணங்கள் நான்கும்
சிந்தையேயாக என்ற இடத்து அந்தக்கரணங்கள் நான்கினுள்ளே
ஒழிந்த ஏனைய சிந்தை அகங்கார முதலியவைகள் தொழிற் படாது,
நான்கும் சிந்தையின் தொழிலேயாகி நிற்க எனவும்; குணமொரு
மூன்றும் திருந்து சாத்துவிகமே யாக - சாத்துவிகம், இராசதம்,
தாமதம் என்ற மூன்று குணங்களில் ஏனையிரண்டும் தொழிற்படாமல்
சாத்துவிகத்துள் அடங்கி நின்றன எனவும் கொள்க.
கண்களே கொள்ள
- என்றதனால் புறக் கருவிகளாகிய
பொறிகள் அடைந்த நிலையும், சிந்தையேயாக -
என்றதனால்
அவற்றைக் கலக்கும் அக்கரணங்கள் பெற்ற நிலையும்,
சாத்துவிகமேயாக - என்றதனால் அந்தக்கரண புறக்கரணங்களைத்
தூண்டிப் பிரேரிக்கும் முக்குணங்கள் உற்ற நிலையும் உணர்த்தினார்.
முழுதும் சாத்துவிகத்தினாலே தூண்டப் பெற்ற சிந்தையுடன் கலந்த
கண்ணின் காட்சி மயமேயாகிய அத்தன்மையுடன் ஆனந்தக் கூத்தின்
வந்த இன்ப வெள்ளத்திலே நிலைத்து மகிழ்ந்தனர் ஆரூர் நம்பிகள்
என்க.
குணம் மூன்றும் கரணம் நான்கினைத் தூண்டத் தனித்தனிப்
பன்னிரண்டு நிலைகள் உண்டாம். இவை வெவ்வேறாய் ஐம்பொறி
புலன்வழிக் கலக்க மேலும் பல செயல்கள் உண்டாம். இவற்றிலே பிற
எல்லாம் ஒழித்துச் சாத்துவிகந் தூண்டக் கிளம்பிய மனநிலை கலந்த
கண்ணின் செயல் ஒன்றே இங்குக் குறித்ததாம்.
நெறிவழி
யேசென்று நேர்மையு ளொன்றித்
தறியிருந் தாற்போலத் தம்மை யிருந்திச்
சொறியினுந் தாக்கினுந் துண்ணென் றுணராக்
குறியறி வாளர்க்குக் கூடலு மாமே.
- ஐந்தாம்
தந்திரம் - யோகம் 1 |
என்று திருமூலர் திருமந்திரத்திற்
கண்ட இலக்கணத்தையும்,
கண்ட
போதே விரைந்திழிந்து கடிது சென்று கைத்தண்டு
கொண்டு மகனார் திருமுதுகிற் புடைத்துக் கொடிதா
மொழிகூறத்
தொண்டு புரியுஞ் சிறியபெருந் தோன்ற லார்தம்
பெருமான்மேல்
மண்டு காத லருச்சனையின் வைத்தார் மற்றென் றறிந்திலரால்.
-
சண்டீசர் புராணம் - 49 |
என்று இப்புராணத்துட் கண்ட
இலக்கியத்தையும் இங்கு வைத்துக் காண்க.
இந்துவாழ் சடையான்
- சந்திரன் வாழ்வடைதற்கு ஏற்ற
இடமாகிய சடையனை உடையான். சடையை அடைந்ததனால்
சந்திரன் தனக்குத் தக்கன் சாபத்தால் வந்த குறை நோயும், இறப்பும்,
தீரப்பெற்றதுமன்றிப் பகைத் தீர்வும் ஏற்றமும் பெற்று
நிலவினமையாலே வாழ் என்றார். பாம்போடு திங்கள் பகை தீர்த்
தாண்டாய் முதலிய திருவாக்குக்கள் காண்க.
ஆடும் ஆனந்த எல்லையில்
தனிப்பெரும் கூத்து -
ஆடும் கூத்து; ஆனந்தக்கூத்து, எல்லையில் கூத்து, தனிக்கூத்து,
பெருங் கூத்து எனத் தனித்தனிக் கூட்டி உரைத்துக் கொள்க. இவை
இடிப்பாரையில்லாத ஏமரா மன்னன் என்புழிப் போலப் பெயரெச்ச
அடுக்கு. மேற்ாட்டிற் குறித்தபடி வெளியே ஆடுகின்றாரைக்
கண்களே கொண்டதனால் ஆடும் கூத்து என முதலிற் கூறினார்.
கண்டதன் விளைவு ஆனந்தமாதலின் அதனை அதற்கு அடுத்தும்,
அது அம்மட்டோடு நிற்கும் அளவுபடாமையின் எல்லையில்
என்பதனை அதற்கு அடுத்தும், இது ஐங்கலைகளின் அதி
தெய்வங்களையும் அதிட்டித்துப் பெத்த நிலையில் ஆடுங் கூத்து
ஆகிய ஊனநடனம் பொலாது மோனந்த மாமுனிவர்க்கு மும்மலத்தை
மோசித்த முத்திநிலையிற் செய்யும் ஞானநடன மாதலின் தனி
என்பதனை அதற்கடுத்தும், இதற்குமேல் வேறொன்றின்மையின்
பெரும் என்றதனை அதற்கடுத்தும் வைத்தார். பிறரை
அதிட்டித்தலின்றித் தானே செய்தலின் தனிக்கூத்தென்பதாம்.
இக்கூத்தையே மன்னுசிற் றம்பலத்தே, ஆதியு
முடிவுமில்லா
வற்புதத் தனிக்கூத்தாடும், நாதனார் (வரிசை - 360) என்று ஆசிரியர்
பின்னர்ப் போற்றியதுங் காண்க. ஆடுங்கூத்து இருவகைப்படும்.
அவை சாந்திக்கூத்து, விநோதக் கூத்து என்பன. அவைதாம்,
சாந்திக்கூத்தும் விநோதக் கூத்துமென், றாய்ந்துற வகுத்தன
னகத்தியன் றானே என அடியார்க்குநல்லார் சிலப்பதிகார வுரையிற்
காட்டியது காண்க. இறைவனாடும் கூத்து சாந்திக்கூத்தின் பாற்படும்.
அவன் இன்ப சொரூபனாதலின் அவனதாடலும் இன்பம் பயப்பதாம்.
உயிர்களை ஆனந்தத்தி லழுத்திவைக்குஞ் செயலுடைமையான் அது
ஆனந்தக் கூத்தாயிற்று. அது இறைவனைப்போன்று முதல் நடு ஈறு
அற்றதாதலின் எல்லையில் கூத்தெனப் பெற்றது. கூத்தாடுவோர் பல
முத்திரைகளைக் காட்டுதல்போல இறைவனும் தமது இரு
திருக்கரங்களில் உடுக்கையும், அங்கியும் பிடித்துக் காட்டியும்,
அபயவரத திருக்கரங்களைக் காட்டியும், ஒரு திருவடி முயலகனை
மிதித்தும், மற்றொன்றைத் தூக்கிக் காட்டியும், தாமே சிருட்டி, திதி,
சங்காரம், திரோதம், அநுக்கிரகம் எனும் பஞ்சகிருத்தியங்களைச்
செய்ய வல்லவர் எனப் புலப்படுத்துவாராயினார். இரு
கால்களினாலாடாது ஒற்றைக் காலினால் புரியும் தாண்டவம்
செய்பவராயினார். பிறர்போல் இருநிலத்தினின் றாடாது ஆகாய
வெளியிலாடும் கோலமுடையவரானார். ஆடுவோர் பிறருக்கு
நட்டுவனின்றியமையாதவனாம். ஆயின் இறைவன் தாமே உயிர்களை
யாட்டிவைக்கும் விறலுடையாராய்த் தன்னிற் றொழிற்படுத்துவோன்
வேறொருவனில்லாமையான் நட்டுவனார் ஒருவனைப் பெற்றாரில்லை.
நட்டுவனாரை யறிகிலன் என வரும் பழமலையந்தாதிச் செய்யுள்
காண்க. ஆதலினாலும் இது தனிக்கூத்தாயிற்று.
இவ்வாறே பேரின்ப வெள்ளம் - மாறிலா
மகிழ்ச்சி என்ற
இடங்களிலும் அடைமொழிகளை விரித்துரைத்துக் கொள்க.
ஆனந்தக் கூத்தாகலின் தனது தன்மையேயாகிய பேரின்ப
வெள்ளத்தையும், தனிக்கூத்தாதலின் மாறிலா மகிழ்ச்சியையும்
விளைத்ததென்க.
கூத்தின் வந்த
- கூத்தினால் உளதாகிய. பேரின்பம் -
அக்கூத்தைத் தரிசித்து அதன் வயப்பட்டு அதன் இயல்பிலே
அத்துவிதமாய் ஒன்றித்து அனுபவித்து நிற்றலால் உளதாகும் இன்பம்.
ஏனைய இன்பங்கள் எல்லாம் இதன் முன்னர்ச் சிறியனவாய்
ஒழிதலின் சிற்றின்பமாம். இது ஒன்றே பேரின்பம் என்க.
கண்கள் - கரணங்கள்
- குணம். மேற்பாட்டிலே கூறிய
(அஞ்சலி மலர்த்தற்கு வேண்டிய) கை, கண், கரணம் என்ற
மூன்றனுள்ளே, கூத்தின் இன்பத்திலே திளைத்தற்கு அறிவுக்
கருவிகளே வேண்டப்படுதலின், அசைவுக் கருவியாகிய கைகளைத்
தவிர்த்து ஏனை இரண்டையுமே கொண்டு, அவற்றைத் தூண்டும்
குணத்துடன் கூட்டி மூன்றாகக் கூறினார்.
மறைச்சிலம்பார்க்கக் கேட்டமையின் அவ்வொலியைப்
பற்றிக்கொண்டே மன்றினுட் சென்றார்; அங்கு ஆடுகின்றாரைக்
கண்கள் முகந்து கொண்டன; பிறவிக் கடலுள்ளே திசையறியாது
தவிப்பார்க்குக் கரையைத் தூரத்திலிருந்தே காட்டி யழைக்கும்
கலங்கரை விளக்கம் போல உச்சியின்மீது விளங்கும் நிலா முதலிற்
காட்சிப்பட்டது. பின் சுற்றுமுற்றும் பார்க்க எல்லை காண முடியாத
இனிய பெருங்கூத்தாயிருந்தது; இதன் காரணம் அறியக் கீழே
பார்த்தபோது முன் கேட்ட சிலம்பொலிக்கு இடமும் ஆடுதற்குக்
கருவியுமாகிய தூக்கிய திருவடி புலப்பட்டது;
அதனால் முன்
கரையறியாது திகைத்த துன்பவெள்ளம் போய் இன்ப வெள்ளம்
சூழ்ந்து பெரு மகிழ்ச்சியை விளைத்தது என்று தொடர்ந்து உரைத்துக்
கொள்க. இக்கூத்தின் இயல்பைத் திருமூலர் திருமந்திரம் - ஒன்பதாந்
தந்திரம் - திருக்கூத்துத் தரிசனப் பகுதியில் விரிவாகக் காண்க.
மேலும் தக்கார்வாய்க் கேட்டுத் தெளிக.
மலர்ந்தார் என்ற வினைக்குப் ‘பெரியோன்' எனும்
எழுவாய்
மேற்பாட்டிலிருந்து வருவித்துரைக்கப்பட்டது. பஞ்சப்
பொறிகளினறிவும் கட்பொறியிற் செல்ல, கரணங்களெல்லாஞ்
சிந்தையிலடங்க, முக்குணங்களுஞ் சாத்துவிகத்திலடங்கக், கூத்தினால்
வந்த பேரின்ப சாகரத்தின் மூழ்கி ஒப்பற்ற மகிழ்ச்சியினால்
முகமலர்ந்தார். இராமநாதச் செட்டியார் உரைக்குறிப்பு.
அன்றியும், அறியப்படும் பொருள்களின் பெருமை
சிறுமைகளுக்கேற்ப அவற்றை அறிகின்ற அறிவும் பேரறிவு
சிற்றறிவெனப்படும். திருவடி ஞானமாகிய ‘உணர்வினேர்பெற வரும்
சிவபோகத்தை' அறிகின்ற ஐம்பொறியறிவும் கறங்கோலைபோல
மாறிமாறி வரும் நினைப்பு மறப்பாகிய சகல கேவலங்களின்றி
ஒழிவின்றியழுந்தி யறிதலாற் பேரறிவேயாம்;
பாலைநெய்தல் பாடியது முதலியனவாக விதந்தோதிய
கரணங்கள், ‘காணுங் காரணங்களெல்லாம் பேரின்பமெனப்
பேணுமடியார்' கரணங்களாதலின், அவை
நந்தங்கரணம்போலல்லாமை'யின் அளப்பருங் கரணங்கள்
எனப்பெற்றன;
முக்குணங்களும், முத்திக்கே விக்கத்தே
முடிக்குமியல்பினின்றுந் திருந்தி அதற்கனுகூலமாக
முடிக்குமியல்பினிற்றலின் திருந்து சாத்துவிகமேயாக என்றார் -
என்று உரைப்பினுமமையும், - எனவும் கூறுவர். இஃது ஸ்ரீமத் முத்துக்
குமாரத் தம்பிரான் சுவாமிகளது உரைக் குறிப்பு. 106
|