261.
|
தேனார்க்கு
மலர்ச்சோலைத் திருப்புன்கூர்
நம்பர்பால் |
|
|
ஆனாப்பே
ரன்புமிக வடிபணிந்து தமிழ்பாடி
மானார்க்குங் கரதலத்தார் மகிழ்ந்தவிடம்
பலவணங்கிக்
கானார்க்கு மலர்த்தடஞ்சூழ் காவிரியின்
கரையணைந்தார். |
115 |
(இ-ள்.)
வெளிப்படை. தேன்பொருந்திய சோலைகள் சூழ்ந்த
திருப்புன்கூர்ச் சிவலோக நாதரிடத்து மிக்க அன்பினாலே சென்று
வணங்கித் திருப்பதிகம் பாடிச் சென்று, இவ்வாறே இறைவன்
எழுந்தருளிய தலம் பலவும் வணங்கிச் சென்று, பூந்தடங்கள் சூழ்ந்த
காவிரி நதிக்கரையினை யணைந்தார்.
(வி-ரை.)
தேன்ஆர்க்கும் மலர்ச்சோலை - வண்டுகள்
பாடுதற் கிடமாகிய பூஞ்சோலைகள்.
திருப்புன்கூர் -
புன்கு மரம் தலவிருட்சமாதலின் இப்பெயர் பெற்றது.
தல விசேடம் -
வைத்தீசுவரன் கோயிலுக்குத் தென்மேற்கில்
1 3/4 நாழிகையளவில் உள்ளது. திருநாளைப்போவார் நாயனார்
இத்தலத்தை அடைந்து புறம்பே நின்று வணங்கிக் கொண்டு
திருக்கோயிலுக்கு மேல்பால் திருக்குளம் வெட்டித் திருப்பணி
செய்தனர். அவர் அவதரித்த ஆதனூர் இதற்குத் தென்கிழக்கில்
2 நாழிகை யளவில் உள்ளது. நம்பிகளின் நண்புபெற்ற ஏயர்கோன்
கலிக்காம நாயனார் ‘அதிகமாயின திருப்பணி யனேகமும் செய்த'
அபிமானத் தலம். இந்நாயனாரின் தலமாகிய திருப்பெருமங்கலம்
இதற்கு வடக்கே ஒரு நாழிகையளவில் அடையத்தக்கது. சுவாமி
-
சிவலோகநாதர். தேவியார் - சொக்கநாயகி.
இன்னும் இத்தல விசேட
விரிவுகள் பின்னர்க் காண்க. இத்தலத்தையும் திருநீடூரையும் ஒரே
பதிகத்துட் சேர்த்து அப்பர் சுவாமிகள் திருத்தாண்டகம் அருளிச்
செய்தது ஆராயத்தக்கது.
ஆனாப்பேர் அன்புமிக
- குறையாத பேரன்பு மேன்மேல்
வளர.
அடிபணிந்து தமிழ்பாடி
- இம்முறையில் தரிசித்து நம்பிகள்
பாடியருளிய தேவாரம் கிடைத்திலது. இறந்துபட்டது போலும்.
இப்போது கிடைக்கும் இத்தலத்து நம்பிகள் தேவாரம்
அந்தணாளன் என்ற தக்கேசிப் பண்ணில் அமைந்த பதிகம்
ஏயர்கோன் கலிக்காம நாயனாரின் நட்புப்பெற்ற பின்னர் அவருடன்
சென்று தரிசித்தபோது நம்பிகள் பாடியதென்க. ஏயர்கோன்
- புரா
- 406 பாட்டுப் பார்க்க.
மான்ஆர்க்கும் காதலத்தார்
- அபிசார யாகத்திலே எழுந்து
முனிவர் ஏவியதும், தனது சத்தத்தால் உலகை அழிக்க வல்லதுமாகிய
மானைச், சிவபெருமான் கைவிரல் நுனியில் ஏந்தி, உலகை
அழியாமல் தமது செவியிலே சத்தித்திருக்குமாறு வைத்தார் என்பது
வரலாறு. நின்செவி யிற்பாணி மான்ஒலியு மேற்றிலையோ -
சோணசைல மாலை. ஆர்த்தல் - சத்தித்து ஆரவாரித்தல்
-
பேரொலி செய்தல்.
இடம்பல
- திருப்புன்கூருக்குங் காவிரியின் கரைக்கும்
இடையில் உள்ள தலங்கள். திருக்கஞ்சாறூர் - திருநீடூர் - முதலியன.
கான்ஆர்க்கும் மலர்த்தடம்
சூழ் காவிரி - வாசனை
மிகுந்த நீர்ப்பூக்கள் நிறைந்த வாவிகளைச் சுற்றி அவற்றை
நிரப்பிக்கொண்டு செல்லும் காவிரி யாறு. நீர்ப்பூக்களில் செங்கழுநீர்
- தாமரை முதலியன மிகுந்த வாசனை யுடையன.
அடியடைந்து - மலர்ச்சோலைக் காவிரியின் - என்பனவும்
பாடங்கள். 115
|
|
|
|