263.
|
மின்னார்செஞ்
சடையண்ணல் விரும்புதிருப்
புகலூரை |
|
|
முன்னாகப்
பணிந்தேத்தி முதல்வன்ற
னருணினைந்து
பொன்னாரு முத்தரியம் புரிமுந்நூ லணிமார்பர்
தென்னாவ லூராளி திருவாரூர் சென்றணைந்தார் |
117 |
(இள்.)
வெளிப்படை. ஒளி பொருந்திய சிவந்த
சடையினையுடைய இறைவன் விரும்பி வீற்றிருக்கும் திருப்புகலூரை
முதலில் பணிந்து துதித்து இறைவனது திருவருளினையே
நினைந்துகொண்டவராய்ப், பொன்னாடையாகிய உத்தரியத்திைனையும்
முப்புரியாகிய பூணூலையும் அணிந்த மார்பினையுடையாரும், திரு
நாவலூரர் பெருமானுமாகிய நம்பிகள் சென்று திருவாரூரினை
அணைந்தார்.
(வி-ரை.)
மின்னார் செஞ்சடை - ஒளி வீசும் சிவந்த
சடை
- மின்வண்ண மெவ்வண்ண மவ்வண்ணம் வீழ்சடை (1), எரிகின்ற
தீயொத் துளசடையீசற்கு (67) எனவரும் பொன்வண்ணத்தந்தாதி
யுரைகளும், மாலையின் தாங்குருவே போலுஞ் சடைக்கற்றை என்ற
அற்புதத் திருவாந்தாதியும் காண்க.
விரும்பு
- உயிர்களுக்கு அருள் புரியும் பொருட்டு
வெளிப்பட்டு வீற்றிருக்கும் இடமாக விரும்பிய திருப்புகலூர்.
தலவிசேடம் - அப்பர்சுவாமிகள் இறைவனைச் சரண்புகுந்து திருவடி
யடைந்த தலம். பிறவிவேதனைக் கஞ்சிய ஆன்மாக்கள் புகலடையும்
தலம். சரண்யபுரம் என்றும் வழங்கப்பெறும்.
தன்னைச்
சரணென்று தாளடைந் தேன்றன் னடியடையப்
புன்னைப் பொழிற்புக லூரண்ணல் செய்வன கேண்மின்களோ
என்னைப் பிறப்பறுத் தென்வினைக் கட்டறுத் தேழ்நரகத்
தென்னைக் கிடக்கலொட் டான்சிவ லோகத் திருத்திடுமே |
என்ற அப்பர் சுவாமிகள்
திருவிருத்தங் காண்க. நம்பிகளுக்காகச்
செங்கல் செழும்பொன்னாகச் செய்தருளிய சரிதம் பின்னர்க் காண்க.
முருக நாயனார் திருப்பணிசெய்து பேறு பெற்றதும் பிறவரலாறுகளும்
பின்னர்ப் பல சரிதங்களிலும் காண்க.
முன்னாகப்பணிந்து ஏத்தி
- இதுமுதல் முறையாகத் தரிசித்து
வணங்கித் துதித்ததாம். பின் ஒருமுறை தரிசித்துப் பணிந்தேத்திச்
செங்கல் பொன்னாகப் பெறுவர் ஆதலின் முன்னாக என்றார். ஏத்தி
- திருப்பதிகம் பாடித் துதித்து - இம்முறை பாடிய பதிகம்
கிடைத்திலது. இறந்ததுபோலும், நம்பிகளது தம்மையே புகழ்ந்து
என்ற இத்தலத்துப் பதிகம் பின்முறையிற் பாடியது. வரலாறு
பின்னர்க் காண்க. (ஏயர் - புரா - 51)
முதல்வன் தன் அருள்
- ‘ஆரூரில் வருக நம்பால்' என்று
தில்லைக் கூத்தர் அருளிய ஆணை. (வரிசை - 254) அருளையே
நினைவார் என முன்னர்க் கூறியதும் காண்க. (வரிசை - 256)
பொன்னாரும் உத்தரியம்
- பொன்னிழை கொண்டு நெய்த
மேலாடை. பீதாம்பரம் என்பர், உத்தரியமும் நூலும் என உம்மைத்
தொகை.
முந்நூல்
- மூன்றாகப் புரிந்து முறுக்கப்பட்ட பூணு நூல்.
தென்நாவலூராளி
- தென்றிசையில் மிகுந்த திருநாவலூரின்
தலைவர். நாவலூரர், தென் - அழகு என்றலுமாம்.
அணைந்தார் -
திருவாயிற் புறத்தினை அடைந்தார். (வரிசை
268 பாட்டிற் காண்க.) 117
|
|
|
|