265.
|
தம்பிரா
னருள்செய்யத் திருத்தொண்ட ரதுசாற்றி |
|
|
‘யெம்பிரா
னாரருடா னிருந்தபரி சிதுவானா
னம்பிரா னாராவா ரவரன்றே'யெனு நலத்தா
லும்பர்நா டிழிந்ததென வெதிர்கொள்ள வுடனெழுந்தார். |
119 |
(இ-ள்.)
தம்பிரான் அருள் செய்ய - தமது பெருமானாகிய
தியாகேசர் இவ்வாறு அருளிச் செய்யவே; திருத்தொண்டர் ...
நலத்தால் - திருவாரூர் வாழ்வார்களாகிய திருத்தொண்டர்கள் தாம்
தாம் கேட்ட அவ்வாணையை மற்றவர்களும் அறிய எடுத்துச்சொல்லி
‘எமது பொருமானது நிறைந்த திருவருள் இருந்த தன்மை இதுவே
யாமாயின் எமது பெருமானாவாரும் அந்தத் திருவாரூரரே யன்றோ'
என்று கொண்ட நன்மையினாலே; உம்பர் நாடு ... எழுந்தார் - தேவர்
உலகே இங்கு இழிந்துவிட்டதோ என்று சொல்லும்படியாக
எதிர்கொண்டழைக்க உடனே முற்பட்டனர்.
(வி-ரை.)
அது சாற்றி - தாந்தாங் கண்ட கனாவை
ஒருவர்க்கொருவர் சொல்லிக்கொள்ளுதல். கனா வருவித்துரைக்க.
அருள் இருந்த பரிசு
- அழைத்ததும், எதிர் கொள்ள
ஆணையிட்டதும் ஆகிய இவை.
எம்பிரான் ஆர்அருள்
- எமது பிரானது நிறைந்த அருள்.
பிரானாருடைய அருள் என்றலுமாம்.
நம்பிரானார் - ஆவார் - அவர் - நமது
தலைவராகிய
திருவாரூரர் அந்தத் திருவாரூரரே ஆவார். அடிப்பேர் கொண்ட
பேர்மாத்திரையா னன்றி உண்மையில் அவர் தன்மையே
பெற்றவராவார்.
உம்பர் நாடு இழிந்ததென
- தேவ லோகம் தியாகேசரைத்
தன்னுள் நீண்ட காலம் வைத்து உபசரித்த சிறப்புக்கூட இச்சிறப்பிற்கு
இழிந்தது - குறைந்தது - என்று சொல்லும்படி என்றுரைத்தலுமாம்.
உடன் எழுந்தார்
- விரைவிலே தொடங்கினார். ஒன்று
சேர்ந்து எழுந்தனர் - புறப்பட்டார் என்றலுமாம்.
அருள் புரிய - என்பதும் பாடம். 119
|
|
|
|