266.
|
மாளிகைகண்
மண்டபங்கண் மருங்குபெருங்
கொடிநெருங்கத் |
|
|
தாளினெடுந்
தோரணமுந் தழைக்கமுகுங்
குழைத்தொடையு
நீளிலைய கதலிகளு நிறைந்தபசும் பொற்றசும்பும்
ஒளிநெடு மணிவிளக்கு முயர்வாயி
றொறுநிரைத்தார். |
120 |
(இ-ள்.)
(அங்ஙனம் முற்பட்ட அவர்கள்) மாளிகைகள் ...
நெருங்க - மாளிகைகளிலும் மண்டபங்களிலும் நீண்டு உயர்ந்த
கொடிகளை மேற்பக்கத்திலே நெருங்கும்படி அமைத்து; தாளின் ...
நிரைத்தார் - அடிப்பக்கத்திலே நீண்ட தோரணங்களையும்
(காய்க்குப் பயன்படாதனவாய்) இலைகளடர்ந்த கமுகு வகைகளையும்
தழைகளாற் றொடுக்கப்பட்ட மாலைகளையும் நீண்ட
இலைகளையுடைய வாழை மரங்களையும் நீர் நிறைந்த பசும்பொற்
கலசங்களையும் வரிசைப்பட வைத்த மணிகளாலாகிய
விளக்குகளையும் ஓங்கிய வாயில்கள் எங்கும் ஒழுங்குபெற
வரிசையாய் அமைத்தார்கள்.
(வி-ரை.)
எழுந்த அவர்கள் என்ற எழுவாய்
மேற்பாட்டிலிருந்து வருவிக்க.
மாளிகைகள் -
தனி யிருப்புக்கள்; மண்டபங்கள் பொது
இருக்கைகள்.
தாளின் -
அடிப்பக்கத்திலே, தாளின் என்றதனாற் கொடிகள்
மேற் பக்கத்தே நெருங்கின என்க. மெய்ப்பொருள் - புரா - 8
பாட்டுப் பார்க்க. தாளின் - கால்கள் நாட்டி
அவற்றிலே என்பாரு
முண்டு.
தழைக் கமுகும்
- காய்க்காகவன்றி அலங்காரத்திற் கென்றே
செறிவாய்ப் பயிராக்கப் பெற்று இலைகள் அடர்ந்து வளர்ந்த கமுகு.
கமுகுத் தழையும் - என மாற்றி உரைத்தலுமாம்.
குழைத் தொடை - குழை
- மாவிலை முதலியன.
இலைகளைக் கொண்டு தொடுத்த மாலைகள். பலவகை
மாலைகளையும் அளவாய் அறுத்துத் தொங்க வைத்தல் அலங்கார
வகைகளில் ஒன்று. பெருந்தண் கணவீர நறுந்தண் மாலை,
துணையுற அறுத்துத் தூங்க நாற்றி என்ற திருமுருகாற்றுப்படை
காண்க.
ஒளி -
வரிசை. ஒளி என்பது எதுகை நோக்கி முதல் நீண்டு
வந்தது என்று உரைத்தலுமாம். இரத்தினங்கள் பதித்த தீபங்கள்
என்றும், ஒரு முழுமாணிக்கத்தாற் செய்யப்பட்ட விளக்கு என்றும்
கூறுவர் மகாலிங்கையர். சேடு கொண்டவொளி தேர்நிரை தோறும்
(வரிசை-247) என்றதும் காண்க.
உயர் வாயில் - வாயில்கள்
- நன்மை உட்புக விடுக்கவும்,
தீமை உட்புகாமல் தடுக்கவும் உதவும் உயர்வுடைய வாயில், ஓங்கிய
பெரிய வாயில்கள் என்றுரைத்தலுமாம்.
...............................................................
பெரியோர் உள்ளம்
போல
ஓங்குநிலைத் தன்மையவாய், அகில முய்ய வுமைபாக ரருல்
சய்த
வொழுக்க மல்லாற்
றீங்குநெறி யடையாத தடையு மாகி ......
-
திருக்குறிப்பு - புரா - 88 |
நிரைத்தார் - வரிசைப்பட
அமைத்தார்கள். 120
|
|
|
|