267. சோதிமணி வேதிகை டூநறுஞ்சாந் தணிநீவிக்  
  கோதில்பொரி பொற்சுண்ணங் குளிர்தரள
                             மணிபரப்பித்
தாதவிழ்பூந் தொடைமாலைத் தண்பந்தர்
                            களுஞ்சமைத்து
வீதிகணுண் டுகளடங்க விரைப்பனிநீர்
                          மிகத்தெளித்தார்.
121

     (இ-ள்.) சோதி ....நீவி - ஒளியும் அழகும் பொருந்திய
திண்ணைகளைத் தூய வாசனை உடைய சந்தனக் குழம்பினாலே
அழகு பெற மெழுகி; கோதில் ..... பரப்பி - குற்றமற்ற பொரியும்
நறும்பொற் சுண்ணப் பொடியும் நீர்மையுடைய முத்துக்களும் ஏனைய
மணிகளும் என்றிவற்றைக் கோலமாய்ப் பரப்பி வைத்து;
தாதவிழ்....சமைத்து - பூந் துகள் அப்போதவிழ்ந் தலருந் தருணத்திற்
றொடுத்த பூமாலைகளாலியன்ற குளிர்ந்த பூப்பந்தர்களும் இட்டு;
வீதிகள் ..... தெளித்தார் - வீதிகளிலே தூசி அடங்குமாறு
வாசனையுடைய பனி நீரை மிகவும் தெளித்தார்கள்.

     (வி-ரை.) வாயில்களுக்கு அடுத்து உள்ள திண்ணைகளில்
சந்தனத்தால் மெழுகிப் பொற்சுண்ண முதலியவற்றாற் கோலம்
பரப்பிப் புதுப்பூப்பந்தர் இட்டு வீதிகளிற் பனிநீர் தெளித்தார்கள்
என்க.

     குளிர் தாளம் - குளிர்ச்சியைத் தரும் நீர்மை மிகுந்த முத்துத்
தண்ணிய நீரோட்ட முடையது என்பர். தண்ணீரிற் பிறந்தது
என்றுரைத்தலு மொன்று.

     தரளமணி - தரளமும் ஏனை மணிகளும். முத்தினின்றும்
ஏனையவற்றைப் பிரித்த கருத்து மேலே வரிசை 235-ம் பாட்டின்
கீழ்க் காண்க. தரளமாகிய மணி என்றுரைத்தலுமாம்.

     பொற் சுண்ணம் - கடவுளர் திருமஞ்சனம் முதலியவற்றிற்கு
விரை மஞ்சள் ஆகியவற்றால் ஆக்கப்பெறும் தூள்.

     தொடைமாலை - மேற்பாட்டிலே சொல்லிய குழைத்தொடை
வேறு. அது வெளி அலங்காரத்துக்காகத் தழை முதலியவைகளால்
ஆக்கப்பெற்றுத் தோரணங்களிலே தொங்க வைக்கப்படுவது. இங்குக்
கூறியது பூமாலைகளால் பந்தராகக் கலசத்திண்ணை முதலிய
தானங்களின் மேற்கட்டிபோல அமைக்கப் பெறுவது.

     சாந்து - குளிர் தரளம் - தண்பந்தர் - பனிநீர் இவை
குளிர்ச்சிதரும் பொருள்கள். வெப்ப மிகுந்த நமது நாட்டு வழக்குப்
பற்றிக் குளிர்ச்சிப் பொருள்களைக் கொண்டு வரவேற்றல் முறையாம்.
இதனைத் தேசாசாரம் என்பர். இதற்கு மாறாய்க் குளிர்ந்த மேனாடு
முதலியவற்றில் இவ்வாறன்றிச் சூட்டுப் பொருள்களையே
வரவேற்புக்குரியனவாய்க் கொள்வதும், சூடான வரவேற்பு (Warm
reception) என்று கூறி மகிழ்வதும் நாட்டு வழக்காதல் காண்க.
அதனை நாமும் பின்பற்றுவது நம்நாட்டிற்கடாத செயலாம்.

     தாதிவர்பூந் - பனிநீர் மிசை விட்டார் - என்பனவும்
பாடங்கள். 121