272.
|
அன்பு
பெருக வுருகி யுள்ள
மலையவட் டாங்கபஞ் சாங்க மாக |
|
|
முன்பு முறைமையி னால்வ ணங்கி
முடிவிலாக் காதன் முதிர வோங்கி
நன்புல னாகிய வைந்து மொன்றி
நாயகன் சேவடி யெய்தப் பெற்ற
வின்பவெள் ளத்திடை மூழ்கி நின்றே
யின்னிசை வண்டமிழ் மாலை பாட,
|
126 |
(இ-ள்.)
வெளிப்படை. அன்பு பெருகியதால் உள்ளம் உருகி
அலையத் திருமூலட்டான நாதர் முன்னர் எட்டுறுப்பினாலும்
ஐந்துறுப்பினாலும் விதிப்படி வணங்கி, அளவற்ற ஆசை மேன்மேற்
பெருக, நல்லனவாகிய தமது ஐம்புலன்களும் ஒற்றித்து நிற்க,
இறைவனது திருவடியை அடையப்பெற்ற அதனால் உண்டாகிய
இன்பப் பெருக்கிலே முழுகி அதில் நிலைத்து நின்று நம்பிகள்
இனிய பண்ணிரம்பியதும் வண்மை பொருந்தியதுமாகிய தேவாரத்
திருப்பதிகத்தைப்
பாடியபோது,
(வி-ரை.)
இவ்விரண்டு பாட்டும் ஒரு முடிபு கொண்டன. அன்பு
பெருக - 269-ல் சொல்லிய ஊனு முயிரு முருக்கும் அன்புதானாய்ப்
பெருக்கெடுத்ததனால். உள்ளம் அலைய - முன் உலக வழியிலே
அலைந்த உள்ளம், இங்கு, அன்பின் வழியே சென்று அப்பெருக்கிலே
கரைகாணாது அலைய என்க. நம்பிகள் என்ற எழுவாய் வருவிக்க.
முன்பு
அட்டாங்க பஞ்சாயங்கமாக முறைமையினால் வணங்கி
- அட்டாங்கமாக வணங்கும் முறை - தலை (1), கைகள் (2), காதுகள்
(2), நெற்றி
(1), கால்கள் (2) ஆக எட்டு உறுப்புக்களும் நிலத்திற்
பொருந்துமாறு வணங்குதல். பஞ்சாங்கமாக வணங்கும் முறை மேலே
(269) உரைக்கப்பெற்றது. முன் அட்டாங்கமாகவும் பின்
பஞ்சாங்கமாகவும் ஆக இவ்வாறு மூன்றுமுறை ஐந்து முறை முதலாக
வணங்குதல் வேண்டுமென்பது விதி. இவ்விரண்டும் சேர்ந்தது ஒரு
வணக்கமாதலின் அட்டாங்க பஞ்சாங்கமென்று சேர்த்துக் கூறினார்.
அவற்றில் முன்னர்ச் செய்யப்பெறுவதாதலின் அட்டாங்கத்தை
முதலில் வைத்தார். (பெண்கள் அட்டாங்க வணக்கம் செய்யலாகாது.)
திருக்கோயிலிலே இறைவனைத் தவிர வேறு ஒருவரையும் அஞ்சலி
செய்யாமை, தூபி முதலியவற்றின் நிழலை மிதியாமை முதலிய பல
விதிமுறைகளையும் உள்ளிட்டு முறைமையினால் என்றார்.
முடிவிலாக் காதல் முதிரவோங்கி - காதல் - நாயகன்
நாயகிகளினிடையே உளதாம் அன்புக்குக் காதல் என்று பேர்.
இவ்வாறே பிரேமை, நண்பு, வாத்சல்லி யம் முதலியன
வெவ்வேறுவகையிற் செல்லும் அன்பின் வகைகளைக் குறித்தல்
காண்க. முதலிலே, மேற்பாட்டிலே, புராதனன் - பிரான் -
பரம்பொருள் - பாகன் - அண்ணல் என்று, இறைவன் எனும்
பொதுவகையாலே நிகழ்ந்த அன்புகொண்டு வணங்கினார். இப்போது
அந்த அன்பு பெருகி உள்ளம் அதில் சிக்குண்டு அலைந்து
மேன்மேல் முதிரவே, ஆன்மாக்கள் எல்லாம் நாயகிகள் ஆகவும்,
இறைவன் அவர்களது நாயகனாகவும் உள்ள பாவனை முதிர்ந்தது;
ஆகலின் “நாயகன் சேவடி எய்தப்பெற்ற இன்பம்“ என்று நாயகன்
எனும் பெயராற் கூறினார். “நாயகன் சேவடி தைவருஞ் சிந்தையும்“
எனக் கூறுவதும் (திருநா - புரா - 140) காண்க. நாயகன் சேவடி
தைவருதல் (தடவுதல் - வருடுதல்) நாயகியின் இயல். “செருடக்
கடிமலர்ச் செல்விதன் செங்கமலக் கரத்தால் வருடச் சிவந்தன“
என்பது (திருமாற்பேறு) திருவிருத்தம். நாயகன் - என்பதற்கு -
இயவுள் - இயங்குபவன் என்றும், ஞான நாயகன் - என்பதற்கு
உயிரறிவைச் செலுத்துபவன் - என்றும் பொருள் கூறுவர்.
நன்புலனாகிய ஐந்தும்
ஒன்றி - “கண்டுகேட் டுண்டுயிர்த்
துற்றறியு மைம்புலனும், ஒண்டொடி கண்ணே யுள“ என்று கூறியபடி
ஐம்புலனும் ஒன்றித்து அனுபவிக்கப் படுவதோர் இன்பம் உண்டு;
அது சிறியது; சிற்றின்பம் என்பர். ஆயின், இங்குக் குறித்த இதுவும்
ஐம்புலன்களும் ஒன்றித்துஅனுபவிக்கப்பெறுவதாயினும்
அவ்வாறின்றிப் பெரிதாய், நன்மை தருவதாய், அழியாததாய் உள்ளது;
ஆதலின் நன்புலனாகிய ஐந்தும் என்றார். ஐம்புலன்களே உலகவழிச்
செல்லும்போது தீமையும், இறைவன்வழிச் செல்லும்போது நன்மையும்
பயப்பனவாம். என்க. “....ஐம்புலன்களார, வந்தனையாட்
கொண்டுள்ளே புகுந்த விச்சை, மாலமுதப் பெருங்கடலே“
என்ற திருவாசகமும் (திருச்சதகம்) காண்க.
இன்ப வெள்ளம்
- ஏனைச் சிற்றின்பம்போ லல்லாது
இன்பத்திலே கரைகாண முடியாத பெருமை யுடைத்தாதலால்
வெள்ளம் என்றதாம். இதனை அனுபவித்தல் கன்மேந்திரிய
ஞானேந்திரியங்களுக்கும் ந்தக்கரணங்களுக்கும்ஆன்மபோதத்துக்கும்
எட்டாது இவை ஒருமைப்பாடு பெற்றவழி - ஐந்தும் ஒன்றி -
அனுபவிக்கப்படுவதாதலின் மூழ்கி என்றார். இதனானே இத்தமிழ்கள்
இறைவன் வாக்கேயாமென்க.
பாட
- பாடுதலும். வினையெச்சம். வரும்பாட்டிலே ஒரு
வாக்கு எழுந்ததுஎன்ற தோடு முடிந்தது. எழுந்தது - ஆரூரர் கேட்க
அருளால் எழுந்தது. அசரீரியாய் ஞான ஆகாயத்திலிருந்து
போந்தது. 126
|