28.
|
கைகள் கூப்பித் தொழுதெழுந் தத்திசை
|
|
|
மெய்யி
லானந்த வாரி விரவிடச்
செய்ய நீள்சடை மாமுனி செல்வுழி
ஐய நீங்க வினவுவோ ரந்தணர், |
18 |
(இ-ள்.)
கைகள் ... எழுந்து - (முனிவர் உணர்ந்து)
கைகளைச்சிரமேற்குவித்துத் தொழுதுகொண்டே எழுந்தனராகி;
அத்திசை ...... செல்வழி - பேரொளி தோன்றிய அத்தென்றிசையை
நோக்கித் தமது மேனி முழுதும் ஆனந்தவெள்ளம் பெருகச் சிவந்த
நீண்ட சடையையுடைய உபமன்னிய முனிவர் சென்றனர்; அவர்
அவ்வாறு செல்லும்பொழுது; ஐயம் ... அந்தணர்
- அதனால்
தமக்குள் எழுந்த ஐயம் நீங்கும்படிச் சூழ இருந்த மாதவர்கள்
பின்வருமாறு வினாவுவாராயினர்.
(வி-ரை.)
தொழுதெழுந்து - தொழுதெழுவாள்
என்ற
குறளிற்போல;அத்திசை நோக்கித் தொழுதுகொண்டே எழுந்து -
என்றபடி.
அத்திசை
- தென்றிசை.
மெய்யில்
ஆனந்தவாரி விரவிட - மேனி முழுவதும் ஆனந்தக்
கண்ணீர் பெருக; மனத்துள்ளே உணர்ந்த அவ்வுணர்ச்சி
ஆனந்தத்தை விளைத்தது. அன்பிற்கு முண்டோ வடைக்குந்
தாழ் (குறள்.) ஆனந்தவாரி அன்பைக் காட்டும் அனுமான
அடையாளம் கைகள் கூப்பித் தொழுது அத்திசை முனிசெல்வுழி
என்று கூட்டுக. எதிர்கொண்டு சென்றார் என்க.
செய்ய
- சிவந்த. ஐயம் - வரும் பாட்டிற் காண்க.
அந்தணர்
- மாதவர். அந்தணர் என்போர் அறவோர்
என்பது திருகுறட் பிரமாணமாம். 18
|