283.
|
பாங்கியர்
மருங்கு சூழப் படரொளி மறுகு சூழத்
|
|
|
தேங்கமழ்
குழலின் வாசந் திசையெலாஞ் சென்று சூழ
வோங்குபூங் கோயி லுள்ளா ரொருவரை யன்பி னோடும்
பூங்கழல் வணங்க வென்றும் போதுவா ரொருநாட் போந்தார்.
|
137 |
(இ-ள்.)
வெளிப்படை. தம் தோழியர்கள் தம்மைச்
சூழ்ந்துவரத், தமது கூந்தலின் மணம் எல்லாத் திக்கிலும் சென்று
நிறையப், பூங்கோயிலுள் வீற்றிருக்கும் இறைவனை வணங்கும்
பொருட்டுப் படர்கின்ற ஒளியுடைய திருவீதியைச் சூழ்ந்து என்றும்
செல்பவராகிய பரவையார் ஒருநாள் வழக்கம்போற் போயினர்.
(வி-ரை.)
ஒருவரை அன்பினோடு கழல் வணங்க என்றும்
போதுவார் - ஒருநாள் - பாங்கியர் சூழப் - போந்தார் - என்று
கூட்டுக.
277-வது பாட்டில் பரவையாரது திருவவதாரமும் 278
முதல்
283 வரை வளர்ச்சியும், செயலும் கூறினார். அவதரித்து வளர்ந்ததின்
பயன் பனிமலை வல்லிபாதம் கூட இறைவனை வழிபடுதலே யாதலின்
இந்த ஆறு திருப்பாட்டுக்களும் தொடர்ந்த முடிபாய்க் கூறின அழகு
காணத்தக்கது.
சூழ -
என்ற சொல் அழகுபெறச் சொற்பின் வருநிலையாய்
அடுக்கி அமைத்திருத்தல் அநுபவிக்கத்தக்கது. இது ஆசிரியரின்
சிறப்பியல்புகளில் ஒன்றாம் என்பது முன்னர்க் கூறப்பெற்றது.
தோழிகள் தம்மைச் சூழவும், தம் குழல்வாசம் திசை எல்லாம்
சூழவுமாகத் தாம் தெருவு சூழப் போந்தார் என்க.
படர் ஒனி
- திருநகரச் சிறப்பிலே படர்ந்த பேரொளிப்
பன்மணி வீதி என்றமை காண்க. படர்தற் குரித்தாய் ஒளியுடைய
மறுகு என்க. மறுகு சூழ்தல் - திரு வீதியை வலம்வந்து செல்லுதல்.
குழலின் வாசம்
- முதற்சாதிப் பெண்டிர்க்குக் குழலின்
இயற்கையாய் அமைந்த வாசம். தருமிக்குப் பொற்கிழி அளித்த
திருவிளையாடலாலும், கொங்குதேர் வாழ்க்கை என்ற
திருப்பாசுரத்தாலும் அறிக. பரவையார் உமையம்மையாரது
சேடியாராதலின் இவ்வியல்பு இவர்க்கும் அடுத்த தொன்றென்று
உணர்க. பூக்கள் சூட்டிய செயற்கையாற் கூடிய வாசம்
என்றுரைப்பாருமுண்டு. எல்லார்க்கும் ஒத்தலின் இங்கு
இப்புராணத்திற்கு உரிய தலைவியர்களில் முதல்விக்கு அவ்வுரை
சிறப்பின்மை காண்க. குழலின் தேங்கமழ் வாசம் என்று கூட்டுக.
ஓங்கு பூங்கோயில்
- அருட்செயலால் ஒங்கியி (மிகுந்த)
பூங்கோயில், உள்ளார் - அங்கே என்றும் நிலைத்து உள்ளவர்.
ஒருவர்
- தனக்குவமை இல்லாதவர் ஆதலின் ஒருவர் என்க.
பதி ஒருவரே என்பது வேதாகமங்களின் முடிபு.
போதுவார் - போதுவாராகிய பரவையார். வினையாலணையும்
பெயர்.
ஒருநாள்
- வணங்கிச் சென்ற பலநாளில் ஒருநாளாய்க் காண;
ஒரு - ஒப்பற்ற என்றலுமாம். பரவையார் அவதாரப் பயன்
பெறுநாளாதலின் இது ஒப்பற்ற நாளாகுமென்பது வரும் நிகழ்ச்சியில்
காண்க. 137
|