284. அணிசிலம் படிகள் “பார்வென் றடிப்படுத்
                       தன“மென் றார்ப்ப,
 
  மணிகிளர் காஞ்சி யல்குல் வரியர வுலகை
                                வென்ற
துணிவுகொண் டார்ப்ப, மஞ்சு சுரிகுழற் கழிய
                              “விண்ணும்
பணியு“மென் றினவண் டார்ப்பப் பரவையார்
                        போதும் போதில்,
138

     (இ-ள்.) அணிசிலம்பு .... ஆர்ப்ப - (பாதங்களிலே) அணிந்த
சிலம்புகள் “இந்தப் பாதங்கள் இம்மண்ணுலகத்தை வெற்றி கொண்டு
அடிப்படுத்தன“ என்று சொல்வது போன்று சத்திக்கவும்; மணி கிளர்
... ஆர்ப்ப - மணிகளுடன் விளங்கும் காஞ்சி எனும் அணியானது
அரவு உலகாகிய கீழுலகத்தை நிதம்பம் வெற்றி கொண்ட துணிவுடன்
கிளர்ச்சி செய்யவும்; மஞ்சு ... ஆர்ப்ப - சுருண்ட கூந்தலுக்கு மேகம்
தோற்றுவிட்டமையால் விண்ணுலகமும் பணியும் என்று கூட்டமாகிய
வண்டுகள் முழங்கவும்; பரவையார் போதும் போதில் -
பரவையம்மையார் மேற்சொல்லியபடி மறுகில் போகும்போது.

     (வி-ரை.) வணங்கப் பரவையார் மறுகுசூழப் போதும்
போதில
- மூன்று அங்கங்கள் முறையேமூன்று உலகங்களை
வென்றதற்கு அடையாளமாக, மூன்றுபொருள்கள் ஆர்த்தன. மேலும்
- நடுவும் - கீழும் உள்ளன மூவுலகங்கள் என்பர். இவையே சுவர்க்க
மத்திய பாதலமாம். மூவுலகையும் வெல்லுதலாவது இம்மூன்று
உலகத்திலும் இவருக்கு ஒப்பாரும் மிக்காருமில்லையாதல். தமிழ்
நூற்களின்படி இதுவே தலைவியினது இலக்கணமாதலின் இவ்வாறு
கூறினார். ஒவ்வோர் உலகை வென்றதற்கு ஒவ்வோர் பகுதி
காரணமும் உதாரணமு மாயிற்று. பரவையாரது அடிகள் மண்ணை
அடிப்படுத்தி மிதித்தற் றொழிலாலும், அல்குல் அரவுலகை
அரவரசாகிய நாகத்தினும் மிக்க வடிவினாலும், காஞ்சியில்
உள்ளனபோன்ற மணிகள் அரவுகளில் இல்லாமையினாலும், குழல்
மேகத்தின் மிக்க நிறத்தாலும் வென்றதை, முறையே, அங்கங்குள்ள
சிலம்பும் - காஞ்சியும் - வண்டுகளும் தெரிவித்து ஆர்த்தன என்க.
மண் அடிப்பட்டது; விண்பணிந்தது; ஆனால் அரவுலகு உறுதியாய்
வெல்லப்பட்டது; ஆதலின் இதைத் தெரிவிக்குமாறு ‘துணிவு கொண்டு
காஞ்சி ஆர்க்க' என்றமை காண்க. அல்குல் பெண்மைத்
தானமாதலின் வென்ற துணிவு கொண்டு எனச் சிறப்புத் தோன்றக்
கூறியபடி. “பையா வசைத்த வல்குல்“ என்ற திருவிருத்தம் (அப்பர் -
கோயில்) ஈண்டுச் சிந்திக்கத்தக்கது. விண் - புண்ணியத்தால் வரும்
இன்பானுபவமும், மண் - புண்ணிய பாவங்களால் வரும் மிச்சிரமாகிய
கலப்பு அனுபவமும் பெறும் இடங்கள் ஆதலின் இவற்றைக்
கீழ்ப்படுத்தலே அமையும். ஆனால் அரவுலகு என்ற கீழுலகம்
பாவத்தால் விளையும் துன்பானுபவத்திற்கே உரியதாதலின் அது
முற்றும் வெல்லப்பட்டொழிதல் வேண்டும் என்பதுபற்றி “வென்ற
துணிவுகொண்டு“ என்றதாம் துணிவுகொண்டு - அடியும்
குழலும்போல வெளித் தோற்றாது, அல்குலினது செயல் காஞ்சி
யணியின் தன்மையால் அனுமானித்துத் துணியப்படு பொருளாதலும்
குறிப்பாம். அடி - அல்குல் - குழல் - பாதாதிகேச வருணனை.
மண்ணும் அரவுலகும் அன்றி விண்ணும் என்ற பொருளில்வந்த
இறந்தது தழுவிய எச்சவும்மை. சிறப்பும்மையுமாம். பரவையார் என்ற
பெண்மணியின் அவதாரத்தால் சிவத்துவம் விளங்க நாகலோகம்
தூர்ந்து ஒழியக் காரணமாயிற்று என்ற குறிப்பும் காண்க. இதனால்
பரவையார் மறுகுசூழ ஒருவரை வணங்கப்போந்த நடைச் சிறப்பும்,
பயனும் கூறியபடி. 138