287.
|
ஓவியநான்
முகனெழுத வொண்ணாமை
யுள்ளத்தான்
|
|
|
மேவியதன்
வருத்தமுற விதித்ததொரு
மணிவிளக்கோ?
மூவுலகின் பயனாகி முன்னின்ற தெனநினைந்து நாவலர்கா வலர்நின்றார்; நடுநின்றார்
படைமதனார்.
|
141
|
(இ-ள்.) ஓவியம்
... விளக்கோ - பிரமதேவன்
இவ்வகையான ஒரு சித்திரப் படத்தை எழுத முடியாமையினாலே
பொருந்திய தனது வருத்தம் நிறைவுகொள்ளுமாறு உள்ளத்தாற்
படைத்ததொரு அழகிய விளக்கமோ?; மூவுலகின் ... நின்றது - மேல்
கீழ் நடு என்னும் மூன்று உலகங்களாலும் பெறும் பயனேயாய் என்
முன் இங்கே நின்றது; என .... நின்றார் - என்று
எண்ணமிட்டவராய்த் (தொழுது செல்வாராகிய) நாவலர்பெருமான்
(மேற்செல்கின்றதை நிறுத்திவிட்டு) நின்றனர்; நடு நின்றார் படை
மதனார் - படை ஏந்திய மன்மதன் (இவ்வாறு கண்டு ஐயமுற்ற
நம்பிகளுக்கும் அவராற் காணப்பெற்ற நங்கைக்கும் நடுவே நின்றார்.
(வி-ரை.)
ஓவியம் நான்முகன் எழுத ஒண்ணாமை -
நான்முகன் ஓவியம் எழுத ஒண்ணாமையால் - (மாட்டமையால்).
கட்டடம் முதலியவற்றிற்குக் கீற்று வரைவு
எழுதிக்கொள்ளுதல் போல ஒருவன் ஒரு பொருளைச்
செய்யவேண்டுமாயின் அதன் உருவத்தை முதற்கண் ஒரு படத்தில்
வரைந்து கொள்ளுதல் வேண்டும்.
இங்கே கண்ட இப்பொருளையும் படைத்தற்கடவுளாகிய
பிரமன் தானே படைத் திருத்தல் வேண்டும்? அவ்வாறு படைக்கு
முன் இது எங்குமில்லாததொரு அரிய பொருளாய்க் கொம்பும்
கொடியும் வாழ்வும் அருளுமாகிய அற்புதப் பொருளாய், அதுவும்
வில் முதலியன பூத்த விரைக்கொடியாய் நிற்றலின், இதற்கு முதலில்
ஓர் ஓவியம் எழுதிக் கொண்டிருத்தல் வேண்டும். அவ்வோவியம்
புறத்தே படத்தில் வரைவதற்கு முன்னர் அதன் உருவத்தை
உள்ளத்தில் நன்றாய் எழுதிக்கொண்டனன்றோ பின்னர்ப் புறத்தில்
படத்தில் கையால் எழுதல் கூடும். இவ்வுருவோ அவ்வாறு
உள்ளத்திலும்எழுத இயலாததொன்றாம். எனவே, புறத்தே
கரணத்தால் எழுதக் கூடாமை தானே பெறப்படும். ஆதலின் மனம்
முதலிய அந்தக்கரணங்களால் மிக முயன்று வருத்தப்பட்டு
உண்டாக்கியதொரு மணியாகிய விளக்கமோ? முழுதும் பேரழகின்
உருவமாய் மனத்தால் நினைத்து நினைத்து விதித்ததோ? என்றபடி.
யாழுமெழுதி என்ற திருக்கோவையார்ப்
பாட்டிலே (79)
இளமாம்போழுமெழுதிற்றொர் கொம்பருண் டேற்கொண்டு
போதுகவே என்னும் பொருள் நுணுக்கங்களை இங்கு வைத்துச்
சுவை காண்க. அவயவ மெழுத லரிதென விலக்கல் என்ற
துறைப்பொருளையுங் குறிக்க.
உள்ளக்கிழியி னுருவெழுதி எனும்
அப்பர் பெருமான்
திருத்தாண்டகமும் காண்க. அது திருவாரூர்ப் பெருமானது
தோத்திரமாதலின், மேலே சிவனருளோ என்ற நம்பிகளுக்கு
இத்தேவாரத்திற் கண்டபடி அவனது தனிமை தோன்ற, அவனது
அருளின் தளிஸமயும் அவ்வாறேயாகும் என்பது தோன்றிற்று;
தோன்றவே இவ்வருட்பொருள் பிரமன் உள்ளக் கிழியில்
உருவெழுத இயலாமை தோன்றிற்று; ஓவியம் நான்முகன் எழுத
ஒண்ணாமை உள்ளந்தான் என்றார்.
மணி
- செயற்கையால் அமையாது இயல்பாய்
ஒளியுடைத்தாதலின் மணி என்றார். பரவையாரும் அதுபோலவே
இயல்பான ஒளியும், மேனி முழுமையும் பேரழகும் வாய்ந்தவர்
என்பது கருத்து.
விளக்கு
- மணியின் தன்மையோடமையாது விளக்கின்
றன்மையும் கூடியது. மணி ஒளியுடையதாயினும் சூரியன் முதலிய
பிறிதொரு ஒளிப்பொருளின் முன்பே ஒளிதரும். விளக்கோ தன்
பக்கலிலே இருளைக் கொண்டது இவ்விரண்டுமன்றி இது முழுதும்
ஒளியாய்த் தன்னை விளக்க வேறு பொருள் வேண்டாமையின்
மணிவிளக்கு என்றார்.
நான்முகன்
- எழுத - ஒண்ணாமை(யால்) - உள்ளத்தால் -
விதித்த - என்க. ஒண்ணாததாகிய உள்ளத்துடன் விதித்த - என்றும்,
ஒண்ணாத உள்ளத்ததனாகி விதித்த - என்றும் உரைத்தலுமாம்.
கண்டவுடன் இவ்வளவும் விளக்கியதாதலின் விளக்கோ என்றார்.
நான்முகன் - இதன் பொருள் பின்னர்த்
திருஞான
சம்பந்தமூர்த்தி நாயனார் புராணம் எண்ணிலாண் டெய்தும் வேதா
என்ற 1110-வது திருப்பாட்டிற் காண்க.
மூவுலகின் பயனாகி
- மூவுலகின் உள்ளாரும் பாராட்டும்
அழகிய புண்ணியப் பொருளாகி. பார் - அரவுலகு - விண் என்ற
மூவுலகும் வெல்லப்பெற்றமை முன்பு 284 திருப்பாட்டிற்
கூறினமைக்கேற்ப மூவுலகின் பயனாகி என்றார்.
மூவுலலுகிலுள்ளாரும் புவனியிற் பிறந்து சிவபூசை,
அடியார்பூசை செய்தே கடைத்தேற வேண்டியவர்கள்; அவ்வாறு
செய்தற்கு மாதவஞ் செய்த தென்றிசை வாழ்ந்திடத் தீதிலாத்
திருத்தொண்டத்தொகைதர நம்பிகள் இங்கு வருமாறு ஆணையிட்ட
அருள் நிகழ்வதற்கு இப்பொருளை ஆங்கே கண்ட காட்சியே
காரணமாய் அதன் பயனே இதுவாயிற்று என்பார், ‘மூவுலகின்
பயனாகி' என்றார்.
சிவனருளோ என்று ஐயற்றார்க்கு அதனை விளக்கும்
கருவி
வேண்டுவதாம்; அவ்விளக்கும் இதுவே என மணிவிளக்கோ என்றார்.
அவ்வாறு சிவனருள் விளக்கமாயின் அதற்குப் பயன் வேண்டும்;
அப்பயனும் இதுவேயாம் என்று முடித்தவாறு. 276-ல் கண்டபடி
வழிபட்டு வந்த தெய்வமணிப் புற்றினுள்ள மணியின் விளக்கமோ
என்றலுமாம்.
நாவலர் காவலர்
- திருநாவலூரில் அவதரித்த பெருமான்.
தமிழ் நாவலர் தலைவர் என்பதும் ஆம், நாவலராதலின் இவ்வாறு
இப்பொருளைத் தமிழ் விளக்கத்தாலே விளங்கக் கண்டார் என்பது
குறிப்பு.
நாவலர் நின்றார்
- (தொழுது செல்வாராகிய நம்பிகள்)
கண்டார் (285) - (கண்டு) அதிசயித்தார் (285) - நினைந்து நின்றார் -
என்க.
நடுநின்றார் படைமதனார்
- மலரம்பும் கரும்புவில்லும்
பிறவும் படையாகக் கொண்டு உலக முழுதும் எல்லா
உயிர்களிடத்தும் ஆணைசெலுத்தும் மதனார், இங்குக், கண்ட
நம்பிக்கும் காணப்பட்ட நங்கைக்கும் நடுவே நின்றாராயினார்.
இருவரிடமும் தொழில் செய்ய ஏற்ற இடம் இருவர்க்கும்
நடுநிற்றலேயாதலின் இடம் தேர்ந்து நின்றாராயினார். ஒருபாற்
கோடாது நடுநிலையாய் நின்றார் என்றலுமாம். தலைவன் தலைவியர்
கூடியவழி நேர் நின்று ஒரு தொழிலும் செய்யாமல் நிற்றலும், பிரிந்து
தனித்தவழித் தொழில் செய்தலும் மதனுடைய இயல்பு ஆதலின்
இங்கே ‘நடு நின்றார்' என்றார். பின்னர் வாளிதொடுப்பதே என்று
நம்பிகளும் (310) படைமன்மதனார் புடைநின்றகலார் என நங்கை
பரவையாரும் (322) கூறுவன காண்க.
இத்திருப்பாட்டிலே ‘நான்முகன் ஒவியம் எழுத ஒண்ணாமை'
என்றது பிரமன் ஒருக்கால் பெண் சிருட்டித் தொழில் கைவராதபோது
இறைவனையும் இறைவியையும் வழிபட்டு அது கைவரப்பெற்றான்
என்ற (காஞ்சிப்புராணம் - தழுவக்குழைந்த படலம்) சரிதத்தைக்
குறிப்பதாகக் கூறுவாறுமுண்டு. 141
|