288.
|
தண்டரள
மணித்தோடுந் தகைத்தோடுங்
கடைபிறழுங்
|
|
|
கெண்டைநெடுங்
கண்வியப்பக் கிளரொளிப்பூ
ணுரவோனை
யண்டர்பிரான் திருவருளா லயலறியா மனம்விரும்பப்
பண்டைவிதி கடைகூட்டப் பரவையா ருங்கண்டார். |
142 |
(இ-ள்.) தண்தரளம்....கண்வியப்ப
- குளிர்ந்த முத்தும்,
மணிகளும் இழைத்த தோடுகளையும் தாண்டி ஓடும் தன்மைவாய்ந்த
கடை பிறழ்கின்ற கெண்டை மீன் போன்ற வடிவமைந்த கண்கள்
வியப்படைய; கிளர் ... உரவோனை - எழுந்து வீசும்
ஒளியணிகளணிந்த நம்பிகளை; அண்டர் ... விரும்ப -
தேவதேவனாகிய சிவபிரானது திருவருளினாலே, (அவனருளை
யல்லாது) வேறொன்றையும் இதுவரை அறியாத தமது மனம்
விருப்பத்தையடைய; பண்டைவிதி ..... கண்டார் - முன் கயிலாயத்தில்
பெருமான் விதித்த ஆணை இருதலையும் சேரும்படிக்
கூட்டுவித்ததாதலின் பரவையம்மையாரும் கண்டாராயினர்.
(வி-ரை.)
நெடுங்கண் வியப்ப - காதளவோடுதலும்,
பிறழ்தலும் அழகிய பெண்களின் கண்களுக்கியல்பாம். மானிளம்
பிணையோ, விற்குவளை என்று முன்னரும் முதலிற்
சுட்டியதுபோல, இங்கும் கண்ணையே முதலிற் சுட்டியது கண்
அழகின் பெருமை குறித்து. அவ்வாறு நம்பிகளையும் வியக்கச்செய்த
இக்கண்களே இப்போது தாம் வியப்படைய என்க. இது நம்பிகளின்
அழகினைத் தெருட்டியபடியுமாம். தோடும் என்றதனால்
காதின் அளவும் என்று குறித்தபடி. ஓடும் - பிறழுங் கெண்டை
என்றதனால் கண்ணின் நீண்ட அளவும், செயலும், உருவமும்
குறித்தபடி. புறத்தே கண்கண்டதைக் கட்பொறி வாயிலாக உணர்ந்த
மனம் வாயிலாகப் புத்தி யுணர்ந்து அது ஆண்மாவுக்கு
உணர்த்தியபின் ஆன்மா வியத்தல் முறை. ஆயின் இச்செயல்கள்
இங்கு விரைவின் ஒன்றினொன்று விரவி நிகழ்ந்தமையின்
வியத்தற்றொழிலைக் கண்ணின்மேல் ஏற்றிக்கூறினார்.
கடைபிறழும் கெண்டை
- நீர் விளிம்புகளின்மேற் பிறழ்தல்
கெண்டைக் கியல்பு. இதுவரை கட்டுப்பட்ட எல்லையினில் கண்ட
காட்சிகளின் வரம்பிலிருந்து வெளிப்பட்டு வேறு வகைக் காட்சி
கண்டதனாற் கடைபிறழும் என்று குறித்தார். நீர் ஊறுதற் கிடமாகிய
இமைகளின் கடை வரையில் பிறழுமாதலிற் கெண்டை ஈண்டுக்
கண்களுக்கு மிகப் பொருந்திய உவமையாதல் காண்க.
நெடுங்கண்
- இங்குக் கூறுங் கண்டார் என்ற காட்சிக்குக்
கருவி கண்ணேயாதலின் அதனைக் கூறினார். இக்காட்சியின் சிறப்பு
நோக்கி இவ்வளவு அடைகொடுத்தோதியவாறாம்.
கிளர் ஒளிப் பூண்
உரவோனை - எழுந்து வீசும்
ஒளியுடைய அணிகளை அணிந்த திண்மையான பேர் அறிஞராகிய
நம்பிகளை. சைவ விடங்கின் அணி புனைந்து சாந்தமும் - மாலையும்
- தாருமாகி - மெய்வளர் கோல மெல்லாம் பொலியச் செல்வார்
இவரைக் கண்டு அதிசயித்து நின்றாராதலின், வழியே சென்று
கொண்டிருந்த ஓர் ஒளி நின்றதும் அது யாவர் கண்ணினும் படுவது
இயல்பாதலாலும் கிளர் ஒளிப் பூண் உரவோனைக் கண்டார் என்று
குறிப்பித்தார். மைந்தர்க்கு மார்பமே விளக்கம் பெறுதல்
அமைவாதலானும் மண்டமர் கடந்தநின் வென்றா டகலத்துப்,
பரிசிலர்த் தாங்கு முருகெழு நெடுவேள் என்றதுபோல அவரது
மார்பமே விளக்கமாகப் பரவையார்க்குப் புலனானமையும் குறிப்பு.
பின்னரும் முன்னே வந்தெதிர் தோன்று முருகனோ (290)
என்பதும் காண்க.
உரவோன்
- அறிவின் வலியுடையவன். உரன் என்னும்
தோட்டியான் என்னும் குறள் காண்க. அறிவின் வலியராயினும்
பரவையார் திறத்து மெலிந்தமை சிவனருட் பிரேரணையாம். உரம் -
மார்பு எனக்கொண்டு பூணணிந்த மார்பினையுடையோன் என்று
பொருள் கொள்ளலுமாம். உரம் - அறிவு. (பரிமேலழகர்) ‘உரத்தின்
வளம் பெருக்கி' - நன்னூல்.
அருளால்
- இதுவரை கடை பிறழாத கெண்டைக் கண்
இப்போது கண்டது அருளாலேயன்றிப் பிறிதொன்றாலன்று என்பது.
பூங்கோயில் உள்ளவரை வணங்கப்போதுவார் அவ்வாறு
போதும்போது கண்ணவனை யல்லாது காணா (11-ம் திருமுறை -
ஆதியுலா) கங்குல் பகலெங்கண் மற்றொன்றுங் காணற்க
(திருவாசகம் - திருவெம்பாவை) என்றவாறு வேறு ஒன்றையும்
காணல் செய்யாதாதலின், இங்கு உரவோனைக் கண்டது
அவனருளியதே என்பார் அருளால் என்று குறித்தார்.
அயல் அறியா மனம்
விரும்ப - அவனருளையே யன்றிப்
பிறிதொன்றிற் சென்றறியாத மனத்தினிடத்தே இதனில் விருப்பம்
செல்லுமாறு. பிறநாயகரையறியா மனமானது விரும்புதலாலும் -
என்பது இராமநாதச் செட்டியார் குறிப்பு.
அயலறியா மணம் என்பது பாடமாதலின் காதன் மணமாகிய
அகப்பொருள் துறையிலே விருப்பம் செல்ல என்க.
கடை கூட்ட
- முடித்துவைக்க. பிரிந்ததைக் கூட்டி வைக்க.
இவ்வாறு விதி கூட்டும் கூட்டத்தின் இயல்பை இறையனார்
அகப்பொருள் உரையிற் காண்க. கீழ் கடலிலிட்ட ஒரு நுகத்
துளையில் மேல்கடலிலிட்ட ஒருகழி சென்று கோத்தாற்போல் என்று
இதற்கு உவமை கூறுவர். வில்லினது பிரிந்து நின்ற இருகடையும்
எவ்வாறு. நாணினாற் கூடுமோ அவ்வாறு விதியாகிய கூட்டுங்
காரணத்தால் கூடுவதால் கடை கூட்ட எனப் பெற்றது. கடை
கூட்டுதல் - அநுபவத்திற்குக் கொண்டு வருதல் என்பதுமாம்.
வளைபயில் கீழ்கட னின்றிட மேல்கடல் வானுகத்தின்
றுழைவழி நேர்கழி கோத்தெனத் தில்லைத்தொல் லோன்கயிலைக்
கிளைவயி னீக்கியிக் கெண்டயங் கண்ணியைக் கொண்டுதந்த
விளைவையல் லால்விய வேனய வேன்றெய்வ மிக்கனவே.
எனவரும் திருக்கோவைச் செய்யுளின் கருத்தை யுன்னுக.
பாவையாரும்
- உம்மை, நம்பிகள் வேற்கண்
விளங்கிழையவரைக் கண்டார் என்றதோடு, பரவையாரும்
உரவோளைக் கண்டார் எனப்பொருள் தருதலின் இறந்தது தழுவிய
எச்ச உம்மையாம். இருவர் நோக்கும் தழுவாதவழி,நோக்குதலாற்
பயன் இல்லையாதலின் உம்மை கொடுத்துக் கூறியவாறு. இதன்
இயல்பு கண்ணொடு கண்ணினை நோக்கொக்கின் என்ற குறளிற்
காணப்பெறும் என்பது முன்னர்க் குறிக்கப் பெற்றது.
இத்திருப்பாட்டுப் பாவையார்பால் நிகழ்ந்த காட்சி என்னுந்துறை.
நம்பிகள் பால் நிகழ்ந்த காட்சி (285) திருப்பாட்டில் காண்க. 142
|