29.
|
சம்பு
வின்னடித் தாமரைப் போதலால்
|
|
|
எம்பி
ரானிறைஞ் சாயிஃ தென்? னெனத்
தம்பி ரானைத்தன் னுள்ளந் தழீஇயவன்
நம்பி யாரூர னாந்தொழுந் தன்மையான், |
19 |
(இ-ள்.)
சம்புவின் ... என்? என்
- எமது தலைவரே!
சிவபெருமானது திருவடிகளைத் தவிர வேறு எதனையும் பணியாத
இயல்புடையீர்; இப்போது இந்தச் சோதியைத் தொழுது எழுந்து திசைநோக்கிச் செல்லும்
காரணம் என்ன? என்று மாதவர்கள்
கேட்க;தம்பிரானை ... தன்மையான் -
இங்கு வருகின்றவர்
தம்பிரானாகிய சிவபெருமானையே தமது உள்ள முழுதும் தழுவிக்
கொண்டுள்ளவர்; அவர் நம்பி ஆருரர் என்னும் பேருடையவர்;
அவர் நம்மாற் றொழப்படும் தன்மையுடையவர். (என்று கூற -
எனவரும் பாட்டுடன் தொடர்ந்து கொள்க.)
(வி-ரை.)
சம்பு - சுகத்தை உண்டுபண்ணுபவன்,
சிவபெருமான்.உயிர்கள் துக்க முற்றவர்; துக்கம் போக்கிச் சுகத்தை
உண்டுபண்ணுவதால் இவனை அடைகிறார்கள். வஞ்சநமன்
வாதனைக்கும் வன்பிறவி வேதனைக்கும், அஞ்சி யுனையடைந்தே
னையா பராபரமே என்பது தாயுமானவர் திருவாக்கு.
சம்பு இன் அடித்தாமரைப் போது - சிவபெருமானது இனிய
தாமரை மலர் போன்ற திருவடி. இன் அடி - இனிய திருவடி.
அடித்தாமரைப்போது என்பதைப் போது போன்ற அடி என்று
மாற்றியுரைத்துக் கொள்க.
இது என்? - சம்புவின் திருவடியே யன்றி வேறொன்றையும்
வணங்காத தலைவராகிய தேவரீர் இப்போது இச்சோதியை நோக்கிக்
கைகூப்பித்தொழுது செல்லும் இது என்ன?
தம்பிரான்
- முழுமுதற் கடவுள்.
உள்ளந்
தழீஇயவன் - உள்ளத்திலே இடையீடின்றி முழுதும்
நிறையும்படி பொருத்தி வைத்தவன். நாம் வணங்கும் தம்பிரானைத்
தம்மனத்தே நிறைய வைத்துக்கொண்டிருப்பவர்.
நாம்
- சம்புவையன்றி வணங்காத நாம். நாம் தொழும் -
நம்மாற் றொழப்படும்; தொழும் என்பது செயப்பாட்டுவினைப்
பொருளில் வந்தது. தன்மை - உள்ளந்தழீஇய
காரணத்தால்
வந்ததென்பது குறிப்பு. 19
|