| 291. 
              | 
	       அண்ணலவன் றன்மருங்கே 
            யளவிறந்த காதலினா | 
	  | 
	 
	
	      |   | 
	      லுண்ணிறையுங் 
            குணநான்கு மொருபுடைசாய்ந்  
                                         தனவெனினும் 
             
            வண்ணமலர்க் கருங்கூந்தன் மடக்கொடிய  
                                          வலிதாக்கிக் 
             
            கண்ணுதலைத் தொழுமன்பே கைக்கொண்டு  
                                          செலவுய்ப்ப, 
             | 
          145 
             | 
	 
	 
	  
             (இ-ள்.) 
        அண்ணல்......எனினும் - பெருமையுடையாராகிய 
         
        நம்பிகளிடத்தே கொண்ட எல்லை யில்லாத காதல் காரணமாக,  
        முன்னே தமது மனத்திலே நிறைவு பெற்றிருந்த நாண் முதலிய  
        பெண்மைக் குணங்கள் நான்கும் ஒரு பக்கமாகச் சாய்ந்து  
        ஒதுங்கினபோதிலும்; வண்ணம்.........உய்ப்ப - அழகிய மலரின் மணம்  
        பொருந்திய கரிய கூந்தலை யுடைய மடமையுடைய கொடி போன்ற  
        பரவையாரை வலிமையுடையாராக ஆக்குவித்து, நெற்றிக்  
        கண்னையுடைய பெருமானைச் சென்று தொழவேண்டும் என்ற  
        இறையன்பே பற்றுக் கோடாகப் பிடித்துக் கொண்டு செல்லும்படி  
        வழிப்பத்திக் கொண்டு போக,  
         
             (வி-ரை.) 
        அளவிறந்த காதல் - முன் எண் கொள்ளாக் 
         
        காதலின் என்றமை காண்க. 
         
              உள் நிறையும் குணம் நான்கும் ஒருபுடை சாய்ந்தன 
        எனினும்  
        - பரவையார் மனத்துள்ளே வேறொன்றும் புகுதற்கு இடந்தராத  
        வண்ணம் நாற்குணமும் நிறைந்திருந்தன; இப்போது ஆற்றில்  
        வெள்ளம் வந்தபோது நாணல் சாய்தந்து போல அந்நாணம் முதலிய  
        ஒரு புறம் சாய்ந்து காதல் வெள்ளத்திற்கு இடங்கொடுத்தன; தாமும்  
        அகலாமல் இருந்தன என்பார் அகன்றன என்னாது ஒருபுடை  
        சாய்ந்தன என்றார். 
         
              எனினும் 
        - மேற்பட்டுப் புகுந்த காதலின்மேலும்  
        வலிமையுடையதாயிற்று என்ற இறையன்பினது மிக்க வலிமையைக்  
        குறித்தது. 
         
              கொடி 
        - துவளுந் தன்மையுடையது ஆதலின் கொடி என்றார்.  
        முன்னரே தலையிற் பாரமுடையது என்பார் கூந்தலைக் குறித்தார்.  
        புயல் சுமந்து.........பூத்த விரைக்கொடியோ என்ற 286 திருப்பாட்டுக் 
         
        கேற்ப இங்கும் கூந்தற் கொடி எனப் பெற்றார். கொடி என்பது  
        கொடி போன்ற பரவையாருக்கு வந்தது. ஆகுபெயர். 
         
              வலிதாக்கி 
        - வலிமை யுடையவராக ஆக்குவித்து. தனது  
        வசமிழந்த நிலையில் இருந்தாராதலின் வலிதாக்கி என்று  
        அஃறிணையாற் சுட்டப் பெற்றதாம். வலிதாக்கி உய்ப்ப - என்று  
        கூட்டுக. தொழுகின்ற செயலுக்கு ஏற்றபடி சத்தியுடையதாக  
        ஆக்காவிடில் அங்குச் செயல் செய்யுமாறில்லை ஆதலின்  
        உய்த்தலின்முன் வலிதாக்கி என்றார். 
         
             கண்ணுதலைத் தொழுமன்பு 
        - தம் மனத்தை மாறுபடுத்திய  
        மாரன் செயலுக்கு மருந்து அவனை எரித்த கண்களையுடைய  
        இறைவனே யாதலின் அக்குறிப்புப் பரவையார் மனத்திற்றோன்றவே  
        செல்லும் வலிபெற்றார்; ஆதலின் கண்ணுதலைத் தொழும் அன்பே  
        உய்ப்ப என்று சுட்டினார். 
         
              கைக்கொண்டு செல வுய்ப்ப வலியிழந்தாரைக்  
        கையைப்பிடித்துச் செலுத்து மாறுபோல அன்பு பரவையாரைப்பற்றிக்  
        கொண்டுபோய் உள்ளே உய்ப்பவும் (செலுத்தவும்) என்க. 145 
	 |