292.
|
பாங்கோடிச்
சிலைவளைத்துப் படையனங்கன்
விடுபாணந்
|
|
|
தாங்கோலி
யெம்மருங்குந் தடைசெய்ய மடவரலுந் தேங்கோதை மலர்க்குழன்மேற் சிறைவண்டு
கலந்தார்ப்பப்
பூங்கோயி லமர்ந்தபிரான் பொற்கோயில்
போய்ப்புகுந்தாள்.
|
146 |
(இ-ள்.)
பாங்கு........செய்ய - சுற்றும் ஓடிப்போய்
வில்லை
வளைத்துப் போர் நிலையனாகிய மன்மதன் எய்யும் அம்புகள்
பலவும்கூடித் தம்மைச்சுற்றிக்கொண்டு எப்பக்கமும் தடை செய்யவும்;
(அத்தடைகளை அன்பு கைக்கொண்ட துணையாற் கடந்து)
மடவரலும்......புகுந்தாள் - பாவையாரும், கூந்தலில் அணிந்த
தேன்பொருந்திய புதிய மலர்களாகிய கோதையின்மேல் சிறகருடைய
வண்டுகள் சேர்ந்து பாடிக் கொண்டிருக்கச் சென்று பூங்கோயில்
என்ற ஆலயத்தே எழுந்தருளிய இறைவனது திருவாலயத்துள்ளே
போய்ப் புகுந்தார்.
(வி-ரை.)
பாங்கு - பக்கமாக. ஓடி - மேலே 237-வது
திருப்பாட்டில் சொல்லியபடி நடு நின்றவாறே மனந்திரித்த மன்மதன்
இப்போது இவர் வலிபெற்றுத் தன்னை வென்று சென்று விட்டார்
என்ற நாணத்தால் நிலைபெயர்ந்து ஓடிப் பாணம் விட்டு அவர்
எம்மருங்கும் செல்வதைத் தடை செய்தான் என்பது.
கோலி -
வளைத்துக்கொண்டு - குறிவைத்து வளைத்து.
இருநில முழுதுந் தனதெனக் கோலி - நன்னூல்.
மடவால்
- பெண். மடமையை யுடையாள். உம்மை, இவள்
மடவரலேயாயினும் இவளைக் கைக்கொண்ட அன்பின் துணையாலே
புகுந்தாள் என்ற குறிப்புக் காட்டும் சிறப்பும்மையாம்.
தேங்கோதை மலர்க்
குழல்மேல் - குழலின் தேமலர்க்
கோதைமேல் என்று மாற்றுக.
தேங்கமழ் குழலின் வாசம் திசையெலாம் சென்று
சூழப்
போந்தார் என்று 283 திருப்பாட்டிற் கண்டோமாதலின் இடையுற்ற
இந்நினைவுகளிலிருந்து முன்னினைவைப் புதுப்பிக்க இவ்வாறு
கூறினார்.
வண்டார்த்தல்
- பரவையார் போய்ப் புகுந்தாராதலின் நிலை
மாறுபாட்டில் தடைப்படுதலும் செல்லலும் ஆகிய அசைவினால்
உண்டாகும் செயல்.
வளைசிலம்ப
வார்கழல்கள், ஆர்ப்பாவஞ் செய்ய
அணிகுழன்மேல்
வண்டார்ப்ப -
திருவாசகம் - திருவெம்பாவை - 12. |
முன்னர் விண்ணும் பணியும் என்று ஆர்த்த வண்டுகள்,
இப்பொழுது பரவையாரை அன்பு கைக்கொண்டு பூங்கோயிலுட் புக
வலிதாக்கிச் செலுத்தக்கண்டு அதனைத் தடை செய்ய மாரன்
பாணங்கள் வலியற்றன என்று ஆரவாரித்தன. காமன்
அவ்விண்ணவரில் ஒருவனே ஆதல் காண்க. அவன் வலிமை
ஒதுக்கப்பட்டமை கண்டார்த்தன என்பது குறிப்பு. மதனன்
வில்லிற்குச் சுரும்பு நாண் உண்மையும் கருதுக.
பூங்கோயில்
- முன்னர் 283-ல் பூங்கோயிலுள்ளார் என
உரைத்ததையே தொடர்ந்து கூறியது நடைத்தொடர்பைக் குறித்தது.
உரை முன்னர்க் காண்க.
பொற்கோயில்
- இலக்குமி வரம் பெற்றமை குறிப்பாம்.
கோயிலும் அதன் பெயரும் கூறியபடியால் கூறியது கூறலாகாமை
யுணர்க.
நாவலர் காவலர் நின்றார் என நம்பிகள், காட்சியில்
ஈடுபட்டு
நின்றமை கூறிய ஆசிரியர், பரவையாரும் அவ்வாறு நின்றார்
என்னாது நினைந்தார் (144) புகுந்தார் என, நில்லாமலே செல்லுதல்
கூறியது பரவையாரது பெண்மைக் குணத்தின் திண்மையைக்
காட்டியபடியாம்.
போய்ப்புக்காள் - என்பதும் பாடம். 146
|