293.
|
வன்றொண்ட
ரதுகண்டென் மனங்கொண்ட
மயிலியலி
னின் |
|
|
றொண்டைச்
செங்கனிவா யிளங்கொடிதான் யா?
ரென்ன,
வன்றங்கு முன்னின்றா ரவர்நங்கை பரவையார்
சென்றும்பர் தரத்தார்க்குஞ் சேர்வரியா
ரெனச்செப்ப,
|
147 |
(இ-ள்.)
வன்றொண்டர்......என்ன - அவ்வாறு பரவையார்
பூங்கோயில் போய்ப்புக்கதை நம்பிகள் பார்த்து எனது மனதைத்
தனது இடமாகக் கொண்ட மயில் போன்ற சாயலையும், இனிய
கொவ்வைச் செங்கனிபோன்ற வாயையும் உடைய இளங்கொடி
போன்ற இப்பெண் யார்? என்று கேட்ப; அன்று......செப்ப -
அப்போது அவ்விடத்தில் அவர் முன் நின்ற அடியார்கள் அவர்
தாம் நங்கைபரவையார் என்ற பேருடையவர்; தேவத் தன்மை
வாய்ந்தவர்களுக்கும் போய் அடைவதற்கு அரியவர் என்று
சொல்ல;
(வி-ரை.)
மனம்கொண்ட - மனத்தைத் தன்வசமாக்கி
யிடங்கொண்ட.
இளங்கொடி - முன்னர் விரைக்கொடி - மடக்கொடி
என்றதற்கேற்ப இளங்கொடி என்றார். இங்கு இளங்கொடி என்பது
பண்புத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழியாய்க்
கொடிபோன்றாரைக் குறித்தலின் யார்? என்ற வினைமுடிபு
கொண்டது.
யார் என்ன?
- யாரோ என்று முன்னர் அதிசயித்தும் (286)
நினைந்தும் (290) நின்றவர் இப்போது தமக்குள்ளே யார்? என்றார்.
ஒருவரையும் நோக்கிக் கேட்கா விடினும், அது சொல்லாய்க்
கேட்கப்படவே அப்போது அவ்விடத்து முன்னே நின்றார்
விடைசொன்னார் என்றபடி. மனங்கொண்ட மயிலியல் முதலியன
பிறர்பால் அறிவிப்பது மரபன்று என்க.
நங்கை பரவையார்
- பெண்மையிற் சிறந்தாரை நங்கை
என்பது மரபு. நங்கை பரவை என்பதே இவரை அழைத்த
மரபுபோலும். தஞ்சை இராசராசச் சக்கரவர்த்தியார் தமது
இராசராசேச்சுரத்திலே தாபித்துள்ள இவரது செப்புப் படிமத்தில்
நங்கை பரவை என்று பெயர் தீட்டப்பெற்றிருத்தலும் அறிக.
உம்பர் தாத்தார்க்கும் சேர்வரியார்
- யார்? என்று
கேட்டார்க்குப் பேரோடு, தன்மையும் உரைத்தல் மரபாதலின்
அரியார் என்று அறிவித்தனர் என்க. உம்பர் தரத்தும் யார்க்கும்
சேர்வரியார் என்க. மக்கள் தேவர் நரகர் என்ற மூவகை
உயர்திணையிலும் தேவர் உயர்ந்தோர்; அவர் தரத்திலே
உள்ளார்க்கும் என உம்மை உயர்வு சிறப்பு. உயர்திணை எல்லாம்
அடங்கும்பொருட்டுத் தேவரே - அன்றி அவர் தரத்தாரே -
யாவரேயாயினும் என்பார் தரத்தும் ஆர்க்கும் என்றார். உம்மை
தொக்கது.
உம்பரின் மேலாயினவர் விட்டுணுமூர்த்தி; அவருக்குக்
கிருட்டிணாவதாரத்திற் சிவதீக்கை செய்து அவர்முடிமேல்
அடிவைத்தவர் உபமன்னிய முனிவர் (24); அவரால் துதிக்கப்
பெறுபவர் நம்பிகள். இவர் அவர்க்கே உரியவர் அல்லது உம்பர்
தரத்தார்க்கும் சேர்வரியார் என்றபடி. 147
|