296.
|
பரவையார்
வலங்கொண்டு பணிந்தேத்தி
முன்னரே
|
|
|
புரவலனார் கோயிலினின் றொருமருங்கு
புறப்பட்டார்.
விரவுபெருங் காதலினான் மெல்லியலார்
தமைவேண்டி
யரவினா ரம்புனைந்தா ரடிபணிந்தா ராரூரர் |
150 |
(இ-ள்.) வெளிப்படை
(பொற்கோயில் போய்ப் புக்க)
பரவையார் அதனை வலமாக வந்து இறைவனைத் தொழுது துதித்துத்
தமது வழக்கப்படி வழிப்பாட்டை முடித்துக்கொண்டு, நம்பிகள்
கோயில் புகும் முன்பே, இறைவனது திருக்கோயிலிலிருந்து வேறு
ஒரு பக்கமாக வெளிச் சென்றார். தம்மிடத்தே வந்து பொருந்திய
பெரிய வேட்கையினாலே மென்மையாகிய இயலுடைய பரவையாரைத்
தமக்குத் தரும்படியாக நம்பியாரூரர் பாம்பு மாலைகள் பூண்ட
பரமனாரது திருவடிகளை வணங்கினார்.
(வி-ரை.)
ஒருமருங்கு - ஒரு - வேறு ஒரு. நம்பி புகுந்த
மருங்கு அல்லாமல் வேறொரு மருங்கு என்க. வேறு -
வருவித்துரைக்கப்பட்டது. பின்னர்க் கோயிலில் இருவர்க்கும்
காட்சிநிகழவில்லை ஆதலின். (முன்னர்க்கூறிய காட்சித்துறை
தொழுது சென்ற நம்பிகள் தொழச்செல்லும் பரவையாரை மறுகிலே
கண்டபோது நிகழ்ந்ததாம்.)
மெல்லியலார் தமைவேண்டி
- முன்னரே போற்றினர் (தமது
நியதிப்படி) தொழுது சென்றாராதலின், பின்னர் வந்து மெல்லியலார்
தமைவேண்டிப் பணிந்தார் என்றார். முன்னர்ச்செய்தது நிட்காமிய
வழிபாடு என்றும், பின்னர் நிகழ்ந்தது காமியத்தின் பாற்பட்டது
என்றும் கூறுப. இறைவனிடத்துக் காமியவழிபாடு செய்யலாகாது
என்பாரை நோக்கி, அவரருள் வகையால் முன் தொடர்ந்து வந்து
விரவிய பெருங்காதல் காரணத்தால் இஃது ஆம் என்று குறித்தார்
என்க.
புரவலனார்
- புரத்தலிலே வல்லவர். தம்மை எம்மையினும்
காப்பவர் இதனினும் காத்தளிப்பார் என்ற குறிப்பு. 150
|