| 298. | 
          பாச 
            மாம்வினைப் பற்றறுப் பான்மிகு 
             | 
            | 
         
         
          |   | 
          மாசை 
            மேலுமொ ராசை யளிப்பதோர்  
            தேசின் மன்னியென் 
            சிந்தை மயக்கிய 
            வீச னாரரு ளெந்நெறிச் சென்றதே.  
             | 
          152 | 
         
       
      
             (இ-ள்.) 
        பாசமாம்......மன்னி - பாசமாகிய வினைக்கட்டினை 
         
        அறுப்பதற்காக என்னிடத்து மிக்கு எழுகின்றதாகிய இறைவன்  
        பணியிற்கொண்ட ஆசையையும் (கீழ்ப்படுத்தி) அதற்குமேலும் ஓர்  
        ஆசையைக்கொடுக்கின்ற ஒப்பற்ற ஒளியொடு பொருந்தி; என்  
        சிந்தை........சென்றதே - மயங்காத என் சிந்தையும் மயக்கத்தை  
        அடையும்படியாக இறைவனது நிறைந்த திருவருள் (உருவமாகிய  
        பரவை எவ்வழி போயிற்று. (ஏ - அசை. ஆச்சரியக் குறிப்புமாம்) 
         
             (வி-ரை.) 
        பாசம் - கட்டு (பச் - கட்டு. பகுதி) கட்டப்படுவது 
         
        பசு என்க. ஆன்மாவும் வியாபக முடையதாயினும்  
        பாசக்கட்டினாலேதான் கட்டுப்பட்டதாயிற்று. இது ஆணவமாகிய  
        சகசமலத்தைக் குறிக்கும் என்பர். பாசம் - கயிறு. 
         
              வினைப்பற்று - 
        வினையினது தொடர்பு. வினைத்தொடர்பே  
        உயிர்களைக் கட்டுவது என்பது சாத்திரம். 
         
              அறுப்பான் 
        - அறுக்கும் பொருட்டு. பாசமாகிய வினையினது  
        தொடர்பை நீக்கும் பொருட்டு. பான் - வினையெச்சவிகுதி.  
        அறுப்பான் என்பதனைப் பெயர்ச்சொல்லாகக் கொண்டு  
        வினைப்பற்றறுப்பா னாகிய சிவபெருமானைக் குறிப்பதாகக் கொண்டு,  
        அவன் அளிப்பது ஓர் ஆசை என்றுரைப்பாருமுண்டு. பின்னர்  
        ஈசனார் அருள் என வருவதால் அது பொருந்தா தென்க. பாசக்கயிறு  
        என்றதற்கேற்ப அறுப்பான் என்றார். 
         
              பற்றறுப்பான் உள்ளத்தில் மிக்கு எழுகின்ற ஆசைகொண்டு 
         
        முயல்கின்றேனாகிய என்னுள்ளே அதனையும் மேலிடுவதொரு  
        ஆசையை அளிக்கும் ஒளியுடன் என் சிந்தை மயக்கிய ஈசனது  
        நிறைந்த அருளாகிய பரவையார் என்பது பொருளாம். ஈசனாரது  
        அருள் என்றுரைப்பினுமாம். 
         
              பாசம் ஆம் வினைப்பற்று 
        - முன் கயிலையில் காட்சியிற்  
        கண்ணினரான வினைப்பற்று ஒரு பாசமாகப் பரிணமித்ததாம்  
        என்றபடி. அதனை அறுக்கும் ஆசை - அதனைத் தீர்த்து மீளா  
        நெறியை அடையும் ஆசை. அதனால் முன்னர்த் திருத்துறையூரில்  
        தவ நெறி வேண்டிப் பெற்றமையும் காண்க. 
         
              பற்றறுப்பான் மிகும் 
        ஆசை - திருவாசகம் ஆசைப்பத்திலே  
        சொல்லிய ஆசைகள். 
         
              மேலும் ஓர் ஆசை - அந்த ஆசையையும் கீழ்த்தங்கச் 
         
        செய்து மேற்கிளம்புவது.  
         
              அளிக்கும் தேசின் 
        மன்னி - கொடுக்கின்ற பெரும்  
        ஒளியில் நிலை பெற்று. தேசு - மனங்கவரும் ஒளியுரு. 
         
              மயக்குற - ஒன்றை மற்றொன்றாகத் திரியக்காணும் 
        உணர்வு  
        மயக்கம். ஒரு ஆசை மேலும் ஒரு ஆசை என இரண்டும் தருதலின்  
        மயக்குற என்றபடியாம். பாசமும் மயக்கும்; அருளும் மயக்கும்.  
        ஆனால் அருளானது பிறவியை அறுக்கும் வகையிலே மயக்கும்;  
        மற்றையது பிறவியைத் தரும் வகையிலே மயக்கம் செய்யும் என்க. 
         
              ஈசன் ஆர் அருள் 
        - அருளால் தடுத்தாளப் பெற்று  
        அருள்வழி நிற்போனை அருளேயன்றிப் பாசம் மயக்குமாறில்லை;  
        ஆதலின் இதுவும் அருளேயாதல் வேண்டுமென்ற துணிபு பற்றி,  
        மயக்கியதாயினும் ஆரருள் என்று கூறப்பட்டதாம். 
         
              இவ்வாறு மேல்வரும் இரண்டு பாட்டுக்களிலும்  
        எம்பிரானருள் , எந்தையாரருள் என்றமையும் இக்கருத்தே 
         
        பற்றியன. சிவனருளோ என்று (286) முன் கூறியதும் காண்க. 
         
              அருள் சென்றது 
        - அருள் வழித்தாகியே வந்தவரய்த்  
        துணிந்த பரவையாரை, அருள் என்றதற்கேற்பச் சென்றது என்ற  
        அஃறிணை ஒன்றன்பால் வினைமுற்றினாற் கூறப்பெற்றதாம்.  
        அருளால் வந்த உருவினை அருளென்றது உபசார வழக்கு. 
         
             மன்னி - நிலைபெற்று - நிறைந்து. தேசு மன்ன என்று 
        பாடங்  
        கொள்வாருமுளர். அடுத்துவரும் பாட்டுக்களில் ‘ஒல்கி' (299) என்றும்,  
        ‘விழித்து' (300) என்றும் கூறமவற்றுக்கேற்ப இங்கும் மன்னி எனவே  
        பாடங் கொள்ளல் சிறப்புடைத்தாம். 152  
	 |